மேலும் அறிய

TNPSC clarification: போட்டி தேர்வுகள் குறித்து பரவி வரும் தவறான தகவல்: புதிய விளக்கம் அளித்த டி.என்.பி.எஸ்.சி...

அடுத்த ஆண்டுக்கான போட்டி தேர்வு குறித்து தவறான தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது என டிஎன்பிஎஸ்சி தெரிவித்து விளக்கம் அளித்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அடுத்த ஆண்டு போட்டி தேர்வுக்கான கால அட்டவணை குறித்தான தகவலை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. 

இந்த அட்டவணையில், குரூப் 2, குரூப் - முதல் நிலை தேர்வுகள் இடம் பெறவில்லை. இது பலருக்கும் ஏமாற்றத்தை தந்தது. மேலும், காலி பணியிடங்கள் குறைவாக உள்ளதாக பலரும் விமர்சனம் வைத்து வந்தனர். 

இந்நிலையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,

”தவறான புரிதலுக்கு வழிவகுக்கும்”

2023 ம் ஆண்டிற்கான போட்டித் தேர்வுகளின் அட்டவணை வெளியிட்டதில், ஓராண்டு முழுவதும் 10 தேர்வுகள் மூலம் 1,754 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படவுள்ளன என சமூக ஊடகங்களிலும் சில பத்திரிக்கைகளிலும் வெளிவந்துள்ளது.

ஊடகங்களில் வெளியான தகவல்கள் முழுமையாக இல்லாததால், தவறான புரிதலுக்கு வழிவகுக்கும் நிலையில் அவற்றை மறுத்து, பின்வரும் விவரங்கள் வெளியிடப்படுகின்றன.

தமிழ்நாடு அரகப் பணியாளர் தேர்வாணையம், ஒவ்வோர் ஆண்டும் பல்வேறு துறைகளிலிருந்து நேரடி நியமனத்திற்காக பெறப்படுகின்ற காலிப் பணியிடங்களுக்கான மதிப்பீடுகளின் அடிப்படையில், போட்டித் தேர்வுகளுக்கான அட்டவணையை வெளியிட்டு வருகிறது. 

முதல்கட்ட அட்டவணை:

ஆண்டு தொடக்கத்தில் வெளியிடப்பட்ட இந்த அட்டவணை முதற்கட்டமாக தகவல்களை அளிக்கும் அட்டவணையாகும். இது தொடர்ந்து கூடுதல் பணியிடங்களுக்கான கேட்புகள் பெறப்படப்பட அட்டவணையில் சேர்த்து வெளியிடப்படும்.

இது மட்டுமன்றி, அரசுப் பணியிடங்களுக்கான மற்ற தெரிவு முகமைகளான ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம். சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் மற்றும் வனச் சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் ஆகியவற்றின் வாயிலாகவும் அரசுப் பணியிடங்களுக்கான தேர்வுகள் ஒவ்வோர் ஆண்டும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள வாரியங்கள் தவிர. அரசு வேலை வாய்ப்பகங்கள் வாயிலாகவும் செய்தித் தாள்களில் உரிய விளம்பரம் செய்யப்பட்டும் பல்வேறு அரசு பணியிடங்கள் அவ்வப்போது நிரப்பப்பட்டு வருகின்றன.

இவை தவிர பணிக்காலத்தில் அகால மரணமடையும் அரசுப் பணியாளர்களின் வாரிசுககளுக்கு. கருணை அடிப்படையிலான பணிகளும்தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.




TNPSC clarification: போட்டி தேர்வுகள் குறித்து பரவி வரும் தவறான தகவல்: புதிய விளக்கம் அளித்த டி.என்.பி.எஸ்.சி...

தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு

மேலும் குறிப்பாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மூலமாக கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில், மொத்தம் 1,063 முகாம்கள்நடத்தப்பட்டு, 1,12,551 நபர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இப்பணியும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
காலிப் பணியிடங்களை ஒவ்வோர் ஆண்டும் மதிப்பீடு:

அரசின் கொள்கையாகும்

அரசின் அனைத்து துறைகளிலும் உள்ள காலிப் பணியிடங்களை ஒவ்வோர் ஆண்டும் மதிப்பீடு செய்து, அவற்றை முறையாக நிரப்புவதே அரசின் கொள்கையாகும். அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்களையும் அரசுப் பணியாளர் தேர்வாணையம் பணியாளர்களைத் தெரிவு செய்யும் நடைமுறையும் இந்த அரசு செயல்படுத்தி வருகிறது.

காலதாமதத்திற்கு காரணமாகும்

அரசு பணியிடங்களுக்கான தெரிவு முகமைகளின் நடத்தப்படும் சில போட்டித் தேர்வுகளின் முடிவுகளை, எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டு வருவதும், அப்பணியிடங்களை நிரப்புவதில் ஏற்படும். காலதாமதத்திற்கு ஒரு காரணமாகும். அவ்வாறு வழக்குகள் தொடரப்படுவதற்குக் அமைந்துள்ள உரிய விதிகளும் இந்த அரசால் பரிசீலனை செய்யப்பட்டு, உரிய விதி திருத்தங்கள் மேற்கொள்வதற்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

அரசுத் துறைகளில் ஏற்படும் காலிப்பணியிடங்களை முறையாக நிரப்புவதற்கான தொடர் நடவடிக்கையை இந்த அரசு கட்டாடம் மேற்கொள்ளும் என்பது தெளிவுபடுத்தப்படுகிறது என டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.

தலைப்பு செய்திகள்

10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வாய்ப்பு! சுயதொழில் தொடங்க சென்னையில் பயிற்சி
10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வாய்ப்பு! சுயதொழில் தொடங்க சென்னையில் பயிற்சி
அரசு பணி வாய்ப்பு: வட்டார ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு விண்ணப்பிக்க அக். 17 கடைசி நாள்.
அரசு பணி வாய்ப்பு: வட்டார ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு விண்ணப்பிக்க அக். 17 கடைசி நாள்.
“10-ம் வகுப்பு போதும்... அரசு வேலை ரெடி! TNPSC குரூப் 4-ல் 6,574 காலியிடங்கள் – ஜனவரி 10-ல் தேர்வு!”
“10-ம் வகுப்பு போதும்... அரசு வேலை ரெடி! TNPSC குரூப் 4-ல் 6,574 காலியிடங்கள் – ஜனவரி 10-ல் தேர்வு!”
மதுரை வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள உள்ள top நிறுவனங்கள்... இளைஞர்கள் இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க !
மதுரை வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள உள்ள top நிறுவனங்கள்... இளைஞர்கள் இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க !

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
TN Bypoll: மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
Embed widget