TNPSC : இளநிலை பட்டதாரிகளுக்கு வாய்ப்பு.. 217 பணியிடங்கள்.. அப்ளை பண்ணுங்க.. அடிச்சு தூக்குங்க..
ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலை பணிகளில் பல்வேறு பதவிக்கு காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது

ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலை பணிகளில் உதவி புள்ளியியல் ஆய்வாளர், கணக்கிடுபவர் மற்றும் புள்ளியியல் தொகுப்பாளர் ஆகிய பதவிக்கு பணியிடங்கள் காலியாக உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பதவியின் பெயர்:
1.உதவி புள்ளியியல் ஆய்வாளர்
2.கணக்கிடுபவர்
3.புள்ளியியல் தொகுப்பாளர்
தேர்வு தேதி:
2023, ஜனவரி 29ஆம் தேதி;
முதல் தாள் - முற்பகல் 9.30 மணி முதல் 12.30 மணி வரை
இரண்டாம் தாள் -பிற்பகல் 2.30 மணி முதல் 5.30 மணி வரை
ஊதிய விவரம்:
ரூ.19,500 – ரூ.75,900 வரை
கூடுதல் தகவல்களுக்கு:
தமிழ் மொழியில் அறிக்கைstat 2022 tamil.pdf (tnpsc.gov.in)
ஆங்கில மொழியில் அறிக்கைStat 2022 Eng.pdf (tnpsc.gov.in)
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
- முதலில் TNPSC - Tamil Nadu Public Service Commission " target=""rel="dofollow">TNPSC - Tamil Nadu Public Service Commission என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
- Apply Online என்பதை கிளிக் செய்யவும். இதற்கு முன்பு OTR பதிவு செய்திருக்க வேண்டும்.
- பணி குறித்தான கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவும்
- பின் விண்ணப்பிக்க என்பதை கிளிக் செய்ய வேண்டும் செய்யவும்.
- அடுத்ததாக பணி குறித்தான அறிவிக்கை இருக்கும். அதனை கிளிக் செய்து பணி குறித்து விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளவும்stat 2022 tamil.pdf (tnpsc.gov.in)
- பின்னர் combined statistical subordinate services examination என்பதில் Apply Now என்பதை கிளிக் செய்யவும்Tamil Nadu Public Service Commission (tnpscexams.in)
- புதிதாக தோன்றிய விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள சரியான தகவல்களை பூர்த்தி செய்யவும்
- விண்ணப்பத்தை பூர்த்தி செய்தவுடன், விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியவர்கள் கட்டணத்தை செலுத்திவிட்டு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
- சமர்பித்த விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து வைத்து கொள்ளவும்
Also Read: TNPSC : தமிழ்நாடு சிறைப் பணிகள்.. காலி பணியிடங்கள் அறிவிப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?





















