10ஆம் வகுப்பு போதும்; ரூ.35 ஆயிரம் ஊதியம்.. தமிழ்நாடு முழுவதும் 2299 பணியிடங்கள்- விண்ணப்பிப்பது எப்படி?
மாத வருமானம் ரூ.11,100 முதல் ரூ.35,100 வரை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, எந்த கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.

தமிழ்நாடு முழுவதும் கிராம நிர்வாக உதவியாளர் பணிக்கு, 2299 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில், இதற்கு விண்ணப்பிப்பது எப்படி? என்ன தகுதி? எவ்வளவு ஊதியம்? முழு விவரங்களையும் கீழே காணலாம்.
என்ன தகுதி?
- 10ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். மிதிவண்டி அல்லது இருசக்கர வாகனம் இயக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
- பணியிடம் உள்ள தாலுக்காவில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்கும்.
- சம்பந்தப்பட்ட கிராமத்தில் வசிக்கும் தேர்வருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வயது வரம்பு
பொதுப் பிரிவினர் 21 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். இதர பிரிவினர் 37 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அதிகபட்ச வயது வரம்பாக, 42 வயது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மாத வருமானம் ரூ.11,100 முதல் ரூ.35,100 வரை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, எந்த கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.
தேர்வு முறை
- மெரிட் பட்டியல்
- நேர்காணல்
- சான்றிதழ் சரிபார்ப்பு
இந்தப் பணியிடங்களுக்கு அந்தந்த தாலுக்காவில் வசிப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். எனவே தேர்வர்கள், தங்களுடைய மாவட்ட இணையதளப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் அடிப்படையில் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம்.
விண்ணப்பிப்பது எப்படி?
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, அந்தந்த மாவட்ட இணையதளப் பக்கங்களில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதைப் பூர்த்தி செய்து, தகுந்த ஆவணங்களுடன் சம்பந்தபட்ட தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒவ்வொரு தேதி கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய அந்தந்த மாவட்ட அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுக வேண்டியது அவசியம்.
கூடுதல் விவரங்களுக்கு: https://tndistricts.nic.in/
இதில், tndistricts என்ற பகுதியில் மாவட்டங்களின் பெயரைப் பூர்த்தி செய்துகொள்ளவும்.






















