மேலும் அறிய

முதுகலை பட்டதாரியா? ரிசர்வ் வங்கியில் கொட்டிக்கிடக்கும் சூப்பர் வேலைவாய்ப்புகள்.. உடனே அப்ளை பண்ணுங்க..

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு இரண்டு கட்ட தேர்வுகள் மற்றும் நேர்முகத்தேர்வு என மூன்று படிநிலைகளில் தேர்வுகள் நடைபெறவுள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள 294 கிரேபி பி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே ஆர்வமும் தகுதியும் உள்ள நபர்கள் உடனடியாக இப்பணிக்கு விண்ணப்பித்துப் பயன்பெறுங்கள்.

இந்தியாவின் முக்கிய வங்கிகளில் ஒன்றாக ரிசர்வ் வங்கியில் பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கானத் தகுதி? விண்ணப்பிக்கும் முறை குறித்து இங்கே விரிவாகத் தெரிந்துக்கொள்வோம்.

ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியாவில் காலிப்பணியிட விபரங்கள்:

மொத்த காலிப்பணியிடங்கள் – 294

துறைவாரியான காலிப்பணியிட விபரம்

Officers in Grade ‘B’(DR)- General – 238

Officers in Grade ‘B’(DR)- DEPR – 31

Officers in Grade ‘B’(DR)- DSIM – 25

முதுகலை பட்டதாரியா? ரிசர்வ் வங்கியில் கொட்டிக்கிடக்கும் சூப்பர் வேலைவாய்ப்புகள்.. உடனே அப்ளை பண்ணுங்க..

வயது வரம்பு:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.01.2022 அன்று 21 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகள் என வயது வரம்பில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

இதோடு DEPR மற்றும் DSIM பிரிவுகளுக்கு கணிதம், பொருளாதாரம், புள்ளியியல் போன்ற ஏதேனும் ஒரு பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால், https://www.rbi.org.in/ அல்லது https://ibpsonline.ibps.in/rbiofeb22/ என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி – ஏப்ரல் 18, 2022

விண்ணப்பக் கட்டணம்

பொதுப் பிரிவு, OBC மற்றும் EWS பிரிவினருக்கு ரூ.850ம்,  SC/ST, PWD பிரிவுகளுக்கு ரூ.100 விண்ணப்பக்கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தேர்வு செய்யும் முறை:

மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு இரண்டு கட்ட தேர்வுகள் மற்றும் நேர்முகத்தேர்வு என மூன்று படிநிலைகளில் தேர்வுகள் நடைபெறவுள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக முதல்நிலைத் தேர்வு 200 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் ஆங்கிலம் (English language), திறனறிதல் (Reasoning ability), பொது அறிவு அல்லது வங்கித் தொடர்பான கேள்விகள் (General/ Financial Awareness) மற்றும் கணிதத்தில் (Numerical ability) இருந்து கேள்விகள் இடம்பெற்றிருக்கும். இந்த தேர்வானது 2 மணி நேரத்திற்கு நடைபெறவுள்ளது.

மேலும் இரண்டாம் கட்டத்தேர்வானது கொள்குறி வகை மற்றும் விரிவான விடையளித்தல் தேர்வாக நடைபெறவுள்ளது.

மேற்கண்ட இரண்டு தேர்வுகளில் தேர்வாகும் விண்ணப்பதார்கள் மட்டுமே அடுத்தப்படியாக நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படுவார்கள். இதிலும் தேர்வாகும் தகுதியான நபர்கள் மட்டுமே பணியில் அமர்த்தப்படுகிறார்கள்.

சம்பளம் – மாதந்தோறும் ரூ. 1,08,404 என நிர்ணயம்.

எனவே ஆர்முள்ள இளைஞர்கள் உடனடியாக இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை, https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/ADVTGRBDRDEPRDSIM2022D061270C271048D78D61F523DBA1AD6A.PDF என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக முழுமையாக அறிந்துக்கொள்ளலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget