மேலும் அறிய

ரூ.50 ஆயிரம் சம்பளத்துடன் திருச்சி என்ஐடியில் வேலை. விண்ணப்பிக்க ஜன.16 கடைசி தேதி!

திருச்சி என்ஐடி விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது

திருச்சி என்ஐடியில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள பட்டதாரிகள் வருகின்ற ஜனவரி 16-ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளுங்கள்.

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றாகவும், தொழில்நுட்பத்தில் சிறந்த மாணவர்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக கடந்த 1964-ஆம் ஆண்டில் தேசிய தொழில்நுட்ப கழகம் திருச்சிராப்பள்ளி தொடங்கப்பட்டது.  நாடு முழுவதும்  உள்ள 31 தேசிய தொழில்நுட்பக் கழகங்களில் இதுவும் ஒன்றாக செயல்பட்டுவருகிறது. இங்கு ஏறத்தாழ 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களுக்கான பாடத்திட்டங்களை பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பல்வேறுத் துறைகளின் கீழ் பயின்று வருகின்றனர். மேலும் தகுதி வாய்ந்த விரிவுரையாளர்கள் பணிபுரிந்துவரும் நிலையில், தற்போது 22 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கான தகுதி என்ன? விண்ணப்பிக்கும் முறை? குறித்து இங்கே தெரிந்துகொள்வோம்.

ரூ.50 ஆயிரம் சம்பளத்துடன் திருச்சி என்ஐடியில் வேலை. விண்ணப்பிக்க ஜன.16 கடைசி தேதி!

திருச்சி என்ஐடி விரிவுரையாளர் பணிக்கானத் தகுதிகள்:

காலிப்பணியிடங்கள் – 22

துறைவாரியான விபரங்கள்:

Architecture – 3

Civil Engineering – 6

Computer Science & Engineering – 4

Computer Applications – 5

Humanities & Social Sciences – 1

Metallurgical & Materials Engineering – 3

வயது வரம்பு : மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் SC/ST/OBC (Non-Creamy Layer)/PwD பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வுகள் உண்டு.

கல்வித்தகுதி:

மேற்குறிப்பிடப்பட்டுள்ள எந்தத்துறைகளில் பணிபுரிய வேண்டும் என்று நினைத்தாலும், விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறைகளில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இதோடு சம்பந்தப்பட்ட துறைகளில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் முதல் வகுப்பில் தேர்ச்சிப்பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில், https://recruitment.nitt.edu/tmpfac22/ என்ற இணையதளப்பக்கத்தின் மூலம் வருகின்ற ஜனவரி 16 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள  அனைத்து விபரங்களையும் சரியாக பூர்த்தி செய்த பின்னர் அதனை பிரிண்ட் எடுத்து தேவையான ஆவணங்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு அஞ்சல் வாயிலாக ஜனவரி 19 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

The Registrar,

National Institute of Technology,

Tiruchirappalli – 620015,

 Tamil Nadu

தேர்வு செய்யும் முறை:

திருச்சி என்ஐடி விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பளம்: மாதம் ரூ. 50,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை, https://recruitment.nitt.edu/tmpfac22/advt/TF-2022-Advertisement%20new%20final.pdf என்ற இணையதளப்பக்கத்தின் மூலம் முழுமையாகத்தெரிந்துக்கொள்ளலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Embed widget