மேலும் அறிய

Job Alert: கம்யூட்டர் சயின்ஸ் படித்தவரா? ரூ.30,000 மாத ஊதியம்;பெண்கள் உதவி மையத்தில் வேலை - விவரம்!

Job Alert: மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து தகவல்களை இங்கே காணலாம்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் அனைத்து வகையான வன்முறைகளுக்கு உள்ளான பெண்களுக்கு ஆதரவு தரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (One Stop Cenre)  உள்ள வேலைவாய்ப்பிற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC)

பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி அமைச்சகம் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24 மணிநேரமும் உடனடி மற்றும் அவசர சேவைகளை வழங்குவதற்கான நோக்கத்துடன் பெண்கள் உதவி மையத்தை அமைக்க ஒரு புதிய திட்டத்தை தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதில் ஒன்றான ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC), பெண்கள் உதவி மையம் (181) போன்ற பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் முக்கிய அம்சமாக மருத்துவ உதவி, ஆலோசனை, சட்டம், உளவியல் மற்றும் உணர்வியல் ரீதியான ஆதரவு வேண்டியுள்ள ஒவ்வொரு மகளிரும் பயனடையும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் தொகுப்பூதிய / ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய கீழ்கண்ட தகுதிகள் மற்றும் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி விவரம்:

  • மைய நிர்வாகி
  • முதுநிலை ஆலோசகர்
  • கணினி நிர்வாகி
  • வழக்கு பணியாளர்  (Case Worker)
  • உதவியாளர்
  • பாதுகாப்பாளர் 

கல்வி மற்றும் பிற தகுதிகள்

  • மைய நிர்வாகி பணிக்கு சமூகப்பணி, ஆலோசனை உளவியல் அல்லது மனிதவள மேலாண்மையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
  • வழக்கு பணியாளர், முதுநிலை ஆலோசகர்  பணிகளுக்கு சட்டம் (Master in Law)/ சமூகப்பணி (Master in Social Work) / சமூகவியல் (Sociology) / சமூக அறிவியல் (Social Science) உளவியல் (Psycology) போன்றவற்றில் முதுகலைப் பட்டம் (Master Degree) பெற்றிருக்க வேண்டும்.
  • சமூக பணியில் இளங்கலைப் பட்டம் (BSW), சமூகவியல் (B.A.Sociology), சமூக அறிவியலில் இளங்கலைப் பட்டம் (B.A Social Science), உளவியல் (B.Sc Psychology), சட்டம் (B.L) போன்ற கல்வி தகுதியை கொண்டிருக்க வேண்டும்.
  • கணினி நிர்வாகி பணிக்கு கணினி அறிவியல் துறையில் இளங்கலை / முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • தொண்டு நிறுவனங்கள், அரசு சார்ந்த திட்டங்களில் பணி புரிந்தவராகவும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஒருவருடம் ஆலோசனை வழங்குவதில் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
  • பல்நோக்கு பணியாளர் பணிக்கு எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும், சமையல் பணியில் முன் அனுபவம் வேண்டும். அரசு மருத்துவரிடம் பெற்ற உடற்தகுதி சான்று இருக்க வேண்டும்.
  • உள்ளூரில் வசிப்பவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  மயிலாடுதுறையைச் சேர்ந்த பெண்கள் மட்டும் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வயது வரம்பு விவரம்

இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

  • மைய நிர்வாகி - ரூ/30,000/-
  • முதுநிலை ஆலோசகர் - ரூ.20,000/-
  • கணினி நிர்வாகி - ரூ.18,000/-
  • வழக்கு பணியாளர்  (Case Worker) - ரூ.15,000/-
  • உதவியாளர் -ரூ.6,500/-
  • பாதுகாப்பாளர்  - ரூ.10,000/-

தேர்வு செய்யப்படுவது எப்படி?

இந்த வேலைவாய்ப்பிற்கு நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

இந்த பதவிகளுக்கு உரிய சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அலுவலகத்தில் நேரிடையாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

சமூகநல அலுவலர்

மாவட்ட சமூக நல அலுவலகம்,

3/264, குமரன் தெரு,

சீனிவாசபுரம்,

மயிலாடுதுறை - 609 001

தொடர்பு எண் - 04364 - 212429

விண்ணப்பிக்க கடைசி நாள் - 31-10-2023

https://cdn.s3waas.gov.in/s33871bd64012152bfb53fdf04b401193f/uploads/2023/10/2023101447.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்து கொள்ளலாம். 

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
Parijatham Serial: இசையால் கடுப்பாகிய விஷால்... ஸ்ரீஜாவின் அப்பாவின் கிரிமினல் வேலை - பாரிஜாதத்தில் இன்று
Parijatham Serial: இசையால் கடுப்பாகிய விஷால்... ஸ்ரீஜாவின் அப்பாவின் கிரிமினல் வேலை - பாரிஜாதத்தில் இன்று
ABP Premium

வீடியோ

Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
TN Assembly Election: ஆட்சியிலும் பங்கு.. வலுக்கும் கோரிக்கை - மாறப்போகிறதா கூட்டணி கணக்கு?
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்... விரைவில் நல்ல செய்தி- தேதி குறித்த அமைச்சர் அன்பில்!
Parijatham Serial: இசையால் கடுப்பாகிய விஷால்... ஸ்ரீஜாவின் அப்பாவின் கிரிமினல் வேலை - பாரிஜாதத்தில் இன்று
Parijatham Serial: இசையால் கடுப்பாகிய விஷால்... ஸ்ரீஜாவின் அப்பாவின் கிரிமினல் வேலை - பாரிஜாதத்தில் இன்று
Old Pension Scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! முதல்வர் கைக்கு சென்ற முக்கிய அறிக்கை- அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.?
பழைய ஓய்வூதிய திட்டம்.! முதல்வர் கைக்கு சென்ற முக்கிய அறிக்கை- அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.?
Pongal Gift: 2.22 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு.! என்னென்ன.? ஒதுக்கீடு செய்த தமிழக அரசு
2.22 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு.! என்னென்ன.? ஒதுக்கீடு செய்த தமிழக அரசு
சொந்த ஊர் செல்வோருக்கு நற்செய்தி: இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் தொடக்கம்!
சொந்த ஊர் செல்வோருக்கு நற்செய்தி : இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் தொடக்கம்!
Upcoming midsize SUVs 2026: ப்ராண்டுக்கு ஒன்னு கன்ஃபார்ம்.. வரிசை கட்டும் மிட்-சைஸ் எஸ்யுவிக்கள், 2026ல் பெஸ்ட் சாய்ஸ் எது?
Upcoming midsize SUVs 2026: ப்ராண்டுக்கு ஒன்னு கன்ஃபார்ம்.. வரிசை கட்டும் மிட்-சைஸ் எஸ்யுவிக்கள், 2026ல் பெஸ்ட் சாய்ஸ் எது?
Embed widget