மேலும் அறிய

TN MRB Recruitment 2023: 1,066 பணியிடங்கள்; எம்.ஆர்.பி. வேலைவாய்ப்பு; விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

MRB Recruitment 2023: MRB Recruitment 2023: மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை  மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் ( Medical Service Recruitment Board - MRB) அறிவிப்பினை வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணிகளில் அடங்கிய  பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் இந்த மாதம் இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஜூலை 31-ம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்போது இம்மாதம் 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் கடைசி நேரம் வரை காத்திருக்காமல் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TN MRB Recruitment 2023: 1,066 பணியிடங்கள்; எம்.ஆர்.பி. வேலைவாய்ப்பு; விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

பணி விவரம்:

Health Inspector Grade-II

மொத்த பணியிடங்கள் - 1,066

கல்வித் தகுதி :

இதற்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் Health Worker (Male) course / Health
Inspector/ Sanitary Inspector சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 10+2 என்ற வகையில் பள்ளிக் கல்வி பயின்றிருக்க வேண்டும். 
ஊதிய விவரம்: 

இந்தப் பணியிடத்திற்கு  ரூ. 19,500 முதல் ரூ.62,000 வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.  (Pay Matrix Level-11)

வயது வரம்பு விவரம் :

இந்த பணியிடங்களுக்கு 18 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளின் விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம். 

தேர்வு செய்யப்படும் முறை :

 இந்த பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு, 12 - ஆம் வகுப்பு மற்றும் சான்றிதழ் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் 20%- க்கும், 12 -ஆம் வகுப்பு மதிப்பெண்கள் 30%- க்கும், சான்றிதழ் படிப்பு மதிப்பெண்கள் 50%- க்கும் கணக்கிடப்படும். இதற்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை :

இதற்கு விண்ணப்பிக்க https://mrbonline.in/ - என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :

பொதுப் பிரிவினருக்கு ரூ. 600, பட்டியலின/ பழங்குடியின பிரிவினருக்கு ரூ. 300 விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 07.08.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.mrb.tn.gov.in/pdf/2023/HI_Gr2_notification_110723.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும். 

*****

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வரலாறு துறையில் உள்ள வேலைவாய்ப்பிற்கு நாளை (04.08.2023) நேர்காணல் நடைபெறுகிறது.  

பணி விவரம்:

கெளரவ விரிவுரையாளர்  (Guest Lecturer(Temporary and Hourly basis))

கல்வித் தகுதி மற்றும் பிற தகுதிகள்:

இதற்கு விண்ணப்பிக்க வரலாறு துறையில் எம்.எஸ்.சி, தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகாலம் ஆராய்ச்சி செய்வதில் பணி அனுபவம் இருக்க வேண்டும். ஆய்வுக் கட்டுரைகள் எழுதியிருக்க வேண்டும். முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

NET/SLET/SET தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Integrated மற்றும் முதுகலை வரலாறு துறை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க வேண்டும்.

பணி இடம்:

திருச்சிராப்பள்ளி

வயது வரம்பு:

இதற்கு விண்ணப்பிக்க 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ஊக்கத்தொகை:

இதற்கு மாதம் ஊக்கத்தொகையாக ரூ.16,000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு மணி நேரத்திற்கு ரூ.400 வழங்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி?

இதற்கு விண்ணப்பிக்க தேவையான சான்றிதழ் நகல்களுடன், பட்டப்படிப்பின் சான்றிதழ் நகல் உள்ளிட்டவற்றுடன் நேர்காணலில் பங்கேற்க வேண்டும்.

நேர்காணல் நடைபெறும் முகவரி 

Department of History,

Bharathidasan University,

Tiruchirappalli-620024

நேர்காணல் நடைபெறும் நாள் - 04.08.2023 காலை 10.30 

https://drive.google.com/file/d/1ptKgz5MSw3kCzFhBg-qzHYvDX5KH2W49/view - என்ற இணைப்பை க்ளிக் செய்து அறிவிப்பின் விவரத்தை காணலாம்.

கூடுதல் விவரங்களுக்கு https://www.bdu.ac.in/ - என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
"விஜயை விமர்சிக்க வேண்டாம்" இபிஎஸ் போடும் புது கணக்கு.. 2026 தேர்தலில் சம்பவம் இருக்கு போலயே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK vs VCK Flag issue | ”எங்க கொடிதான் பறக்கணும்”தவெக- விசிக கடும் மோதல் களத்துக்கு வந்த போலீசார்Vijay Thiruma meeting :”ஒரே மேடையில் திருமா, விஜய்”ஆதவ் அர்ஜுனா SKETCH!திமுகவை அதிரவைத்த உளவுத்துறை!Tirupati Laddu Row BR Naidu : ”இந்துவா இருந்தால் தான் வேலை..இல்லனா வெளியே போ!” தேவஸ்தானம் பகீர்!Police Passed away | பேனரால் நிகழ்ந்த விபரீதம்பரிதாபமாக இறந்த காவலர் சோகத்தில் மூழ்கிய கிராமம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
"விஜயை விமர்சிக்க வேண்டாம்" இபிஎஸ் போடும் புது கணக்கு.. 2026 தேர்தலில் சம்பவம் இருக்கு போலயே!
Prashant Kishor: ஒரு தேர்தல் ஆலோசனைக்கு எவ்வளவு வாங்கினேன் தெரியுமா? பிரசாந்த் கிஷோர் ஓபன் டாக்.!
ஒரு தேர்தல் ஆலோசனைக்கு எவ்வளவு வாங்கினேன் தெரியுமா? பிரசாந்த் கிஷோர் ஓபன் டாக்.!
"ஊர்களுக்கு ராமர், கிருஷ்ணர்னுதான் பேர் வைக்கனும்" தடாலடியாக பேசிய அஸ்ஸாம் முதல்வர்!
3 வயசு குழந்தை.. சாக்லெட்டை காட்டி வெறிச் செயலில் ஈடுபட்ட கொடூரன்.. திருப்பதியை உலுக்கிய சம்பவம்!
3 வயசு குழந்தை.. சாக்லெட்டை காட்டி வெறிச் செயலில் ஈடுபட்ட கொடூரன்.. திருப்பதியை உலுக்கிய சம்பவம்!
Kodaikanal: தொடர் விடுமுறையை கொண்டாட கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறையை கொண்டாட கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
Embed widget