மேலும் அறிய

8 ஆம் வகுப்பு தேர்ச்சியா? மதுரை இந்து சமய அறநிலையத்துறையில் வேலை ரெடி! அப்ளை பண்ண மறந்துடாதீங்க!

மதுரை இந்து சமய அறநிலையப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள்  நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை இந்துசமய அறநிலைய இணை  ஆணையர் அலுவலகங்களில் காலியாக அலுவலக உதவியாளர், ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் வருகின்ற ஏப்ரல் 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும்.

தமிழக இந்து சமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் சுமார் 4 ஆயிரத்திற்கு மேற்பட்ட கோவில்கள் நிர்வகிக்கப்பட்டுவருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும்  ஆணையர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் பலர் பணியாற்றிவரும் நிலையில், தற்போது மதுரை இணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர்  அலுவலகத்தில் உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க என்னென்ன தகுதிகள்? விண்ணப்பிக்கும் முறை? குறித்து இங்கே அறிந்துக்கொள்வோம்.

  • 8 ஆம் வகுப்பு தேர்ச்சியா? மதுரை இந்து சமய அறநிலையத்துறையில் வேலை ரெடி! அப்ளை பண்ண மறந்துடாதீங்க!

அலுவலக உதவியாளர் (Office Assistant) பணிக்கானத் தகுதிகள்:

மொத்த பணியிடங்கள் - 3

கல்வித் தகுதி : இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : மாதந்தோறும்  ரூ. 15,000 – 50,000 என நிர்ணயம்

ஓட்டுநர் (Staff Driver) பணிக்கானத் தகுதிகள்:

கல்வித் தகுதி :

இப்பணிக்கு விண்ணப்பிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  இதோடு விண்ணப்பதாரர்கள் தஇலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். மற்றும் நல்ல உடற்தகுதியுடன் இருக்க வேண்டும்.

சம்பளம் : மாதந்தோறும் ரூ. 19,500 – 62,000

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பிசி, எம்பிசி, டிஎன்சி பிரிவினருக்கு 34 வயதும், எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர் 37 வயது வரை இருக்கலாம் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால் முதலில், உங்களது சுய விபரங்கள் அடங்கிய விண்ணப்பத்தை முதலில் நீங்கள் பூர்த்தி செய்துக்கொள்ள வேண்டும். பின்னர்  உங்களது விண்ணப்பத்தை அஞ்சல் வழியாக அனுப்பி வைக்க வேண்டும்.

அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

உதவி ஆணையர்,

இந்து சமய அறநிலையத்துறை,

 மதுரை.

ஓட்டுனர் பணியிடங்களுக்கு:

இணை ஆணையர்,

 இந்து சமய அறநிலையத்துறை,

 பி1, சாலை எல்லீஸ் நகர்,

மதுரை – 625016

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி:

அலுவலக உதவியாளர் – ஏப்ரல் 26, 2022

ஓட்டுநர் – ஏப்ரல் 22, 2022

தேர்வு செய்யும்  முறை :

மேற்கண்ட முறைகளில் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள்  நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை, https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/114/document_1.pdf என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக முழுமையாக அறிந்துக்கொள்ளலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
Breaking News LIVE 28th Sep 2024: திமுக என்ற  மூன்று எழுத்தில் தான், மூச்சும்,  பேச்சும் உயிரும் உணர்வும்  உள்ளது - முதல்வர் ஸ்டாலின்
திமுக என்ற  மூன்று எழுத்தில் தான், மூச்சும்,  பேச்சும் உயிரும் உணர்வும்  உள்ளது - முதல்வர் ஸ்டாலின்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
Breaking News LIVE 28th Sep 2024: திமுக என்ற  மூன்று எழுத்தில் தான், மூச்சும்,  பேச்சும் உயிரும் உணர்வும்  உள்ளது - முதல்வர் ஸ்டாலின்
திமுக என்ற  மூன்று எழுத்தில் தான், மூச்சும்,  பேச்சும் உயிரும் உணர்வும்  உள்ளது - முதல்வர் ஸ்டாலின்
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
"பெரு நிறுவனங்களுக்கு நாமதான் முகவரி" பெருமிதத்துடன் முதல்வர் ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை!
Embed widget