Indian Air Force Jobs: 12 ஆம் வகுப்பு முடித்தாலே இந்திய விமானப்படையில் வேலை - உடனடியாக விண்ணப்பிக்கவும்
இந்திய விமானப்படையில் Lower Division Clerk (LDC) பணிக்கு காலிப்பணியிடங்கள இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.
இந்திய விமானப்படை:
இந்திய விமானப்படையில் குரூப்- சி பணிகளில் Lower Division Clerk (LDC) பணிக்கு காலி பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
பணி விவரங்கள் குறித்தான கூடுதல் தகவல்கள்:
விண்ணப்பிக்க கடைசி தேதி:
21-06-2022
வயது வரம்பு:
18 வயது முதல் 25 வயது வரை
கல்வி தகுதி:
12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் கணிணியில் ஒரு நிமிடத்தில் 35 ஆங்கில வார்த்தைகளை டைப் செய்ய வேண்டும் அல்லது ஒரு நிமிடத்தில் 30 இந்தி வார்த்தைகளை டைப் செய்ய வேண்டும்.
காலி பணியிடங்கள் – 04
விண்ணப்பிக்கும் முறை:
அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பம் பற்றிய கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்
அனுப்ப வேண்டிய முகவரி:
Presiding Officer,
Civilian Recruitment Board,
Air Force Record Office,
Subroto Park,
New Delhi-110010.
தேர்வு செய்யப்படும் முறை:
- பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்ப தாரர்களுக்கு மட்டும் அழைப்பிதழ் அனுப்பப்படும். பணிக்கு தகுதியில்லாதவர்க களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
- எழுத்து தேர்வு
- திறன்/ உடற்தகுதி தேர்வு
மேலும், பணிகள் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்க்கவும். மேலும் பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள, இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
Indian Air Force LDC Recruitment 2022
— NaukriKart (@NaukriKart9) May 24, 2022
The Indian Air Force (IAF) invites offline application for recruitment to 04 posts of Lower Division Clerk (LDC) under Group ‘C’ Civilian post at Air Force Record Office. #IAF #LDChttps://t.co/RoVTMMHlob pic.twitter.com/CcuEMsLzop
Also Read: +2 முடித்தவர்களுக்கு வாய்ப்பு! இந்தோ-திபெத் எல்லையில் பாதுகாப்புப் பணி.. விபரங்கள் இதோ..!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்