மேலும் அறிய

IBPS SO Recruitment : வங்கி வேலை வேண்டுமா? 710 பணியிடங்கள்; விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!

IBPS SO Recruitment : வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பின் விவரம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

Institute of banking personnel selection CRP SPL-XII Recuitment:

நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் சிறப்பு அதிகாரிகள் ( Common Recruitment Process (CRP SPL-XII).) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (institute of banking personnel selection )வெளியிடப்பட்டுள்ளது.  வங்கியில் பணிபுரிய வேண்டும் என்று விரும்புபவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம்.

IBPS SO Recruitment : வங்கி வேலை வேண்டுமா? 710 பணியிடங்கள்; விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!

பொத்துறை வங்கிகளுக்கான  கனரா வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, பஞ்சாப் & சிந்து வங்கி, யூகோ வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகளில் 710 சிறப்பு அதிகாரிகள் (SPECIALIST OFFICERS) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. 

IBPS SO Recruitment : வங்கி வேலை வேண்டுமா? 710 பணியிடங்கள்; விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!

பணி விவரம்:

ஐ.டி. அதிகாரிகள் (I.T. Officer (Scale-I))

 Agricultural Field Officer (Scale I)

 Rajbhasha Adhikari (Scale I)

 சட்டத்துறை அதிகாரி (Law Officer (Scale I))

 மனிதவள மேம்பாட்டு அதிகாரி (HR/Personnel Officer (Scale I))

 மார்க்கெட்டிங் அதிகாரி (Marketing Officer (Scale I))

கல்வித் தகுதி:

I.T Officer பணிக்கு அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் நான்கு ஆண்டுகள் பொறியியல் துறையில் ( Engineering/ Technology Degree in Computer Science/ Computer Applications/ Information Technology/ Electronics/ Electronics &  Telecommunications/ Electronics & Communication/ Electronics & Instrumentation) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Agricultural Field Officer பணியிடத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் வேளாண்மை, தோட்டக்க்லை, கால்நடை மருத்துவம், மீனவள மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் இளங்கலை பட்டம் படித்திருக்க வேண்டும். (Degree (graduation) in Agriculture/ Horticulture/Animal Husbandry/ Veterinary Science/ Dairy Science/ Fishery Science/ Pisciculture/ Agri. Marketing & Cooperation/ Co-operation & Banking/ Agro-Forestry/Forestry/ Agricultural Biotechnology/ Food Science/ Agriculture Business Management/ Food Technology/ Dairy Technology/ Agricultural Engineering/ Sericulture) படித்திருக்க வேண்டும்.

Rajbhasha Officer பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இந்தி துறையில் முதுகலை பட்டம் படித்திருக்க வேண்டும்.

Law Officer பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை சட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் பார் கவுன்சிலில் (The Bar Council of India ) பதிவு செய்திருக்க வேண்டும்.

HR/ Personnal Officer பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில்  Personnel Management துறையில் முதுகலை பட்டம் படித்திருக்க வேண்டும்.  Industrial Relations, HR / HRD/ Social Work / Labour Law இதில் ஏதாவது ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Marketing Officer பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் மார்க்கெட்டிங் துறையில் எம்.பி.ஏ. (MMS (Marketing)/ MBA (Marketing)/ PGDBA / PGDBM/ PGPM/ PGDM (Marketing)) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர் 01.11.2022 அன்று 20 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். பழங்குடியின/ பட்டியலின பிரிவினர் உள்ளிட்டவர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதன் விவரத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தை பார்த்து கொள்ளலாம்.

IBPS SO Recruitment : வங்கி வேலை வேண்டுமா? 710 பணியிடங்கள்; விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!

தேர்வு செய்யப்படுவது எப்படி?

இந்தப் பணிகளுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் மூலம் தேர்ந்தெடுக்கப்படடும்.  முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வுகள் அனைத்தும் கணினி வழி தேர்வுகளாக மட்டுமே நடைபெறும். எழுத்துத் தேர்வு கிடையாது.

இதில் முதல்நிலைத் தேர்வுகள் வரும் டிசம்பர் மாதம் 24 மற்றும் 31 ஆம் தேதி ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதன்மைத் தேர்வுகள் அடுத்தண்டு ஜனவரி மாதம் 29 ஆம் தேதி (29.01.2023) அன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். நேர்முகத் தேர்வு  அடுத்தாண்டு  பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில்  நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களைக் கொண்டு இறுதி தேர்ச்சிப் பட்டியல் வெளியிடப்பட்டு, காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். மேலும், இந்த தேதிகள் அனைத்தும் திட்டமிடப்பட்டவைகள் மட்டுமே. இதில் மாற்றங்கள் இருப்பின் வங்கி பணியாளர்கள் தேர்வாணையம் அது தொடர்பான அறிவிப்புகளை வெளியிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முதல்நிலைத் தேர்வுக்கான பாடத்திட்டம்;

IBPS SO Recruitment : வங்கி வேலை வேண்டுமா? 710 பணியிடங்கள்; விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!

முதன்மைத் தேர்வுக்கான பாடத்திட்டம் :

IBPS SO Recruitment : வங்கி வேலை வேண்டுமா? 710 பணியிடங்கள்; விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!

விண்ணப்பிக்கும் முறை :

இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்கு https://ibps.in/ அல்லது https://www.ibps.in/crp-specialist-officers-xi-2/ என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி 21.11.2022

முக்கிய நாட்கள்:

IBPS SO Recruitment : வங்கி வேலை வேண்டுமா? 710 பணியிடங்கள்; விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!

விண்ணப்பக் கட்டணம்:

இதற்கான விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவு, OBC மற்றும் EWS பிரிவினருக்கு ரூ.850 செலுத்த வேண்டும்.

பழங்குடியின/ பட்டியலின பிரிவினருக்கு ரூ.175 விண்ணப்ப கட்டணம். இதனுடன் ஜி.எஸ்.டி. வரியுடன் சேர்த்து செலுத்த வேண்டும். 

அறிவிப்பு தொடர்பான முழு விவரத்திற்கு https://www.ibps.in/wp-content/uploads/Detailed-Advt.-CRP-SPL-XII.pdfஎன்ற லிங்க் கிளிக் செய்யவும்.

பணியிடம் தொடர்பான விவரத்திற்கு https://www.ibps.in/wp-content/uploads/Window-Advt_CRP-SPL-XII.pdf என்ற லிங்கை காணவும்.

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
Seeman Vs EPS: “ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
“ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
Embed widget