New Tidel park : நாகை, கரூர், புதுக்கோட்டை மக்களுக்கு குஷி.! ரூ.120 கோடியில் மினி டைடல் பார்க் வரப்போகுது- தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு
Tidel park at Nagai Karur and Pudukottai : நாகப்பட்டினம், கரூர், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் மினி டைடல் பூங்கா அமைக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் சராசரியாக தலா, 60,000 சதுர அடியில் கட்டப்பட உள்ளது. திட்ட செலவுசுமார் 120 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொழில் வளர்ச்சி
தமிழ்நாடு அரசு பல்வேறு தொழில் முதலீடுகளை ஈர்த்து வருவதன் காரணமாக பல ஆயிரம் நிறுவனங்கள் தங்களது தொழில்களை தொடங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் முதலில் டைடல் பார்க் தமிழகத்தில் தொடங்கப்பட்டது. தற்போது மாநிலம் முழுவதும் பெரிய டைடல் பார்க்குகளும், மினி டைடல் பார்க்குகள் மற்றும் டைடல் நியோ பூங்காக்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. அனைத்து தொழில் நிறுவனங்களும் சென்னையில் மட்டும் தொடங்காமல் தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் ஐடி நிறுவனங்கள் தொடங்கும் வகையில் டைடல் பார்க் உருவாக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் டைடல் பார்க்
இதன் படி சென்னை மட்டுமல்லாமல், திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், வேலூர், திருப்பூர், சேலம், தஞ்சாவூர், காரைக்குடி, விழுப்புரம் போன்ற இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலும் உருவாக்கப்படுகிறது. இதனால் கிராமப்புற அருகிலும் வளர்ச்சி ஏற்படுகிறது. மேலும் இளைஞர்கள் சொந்த ஊரை விட்டு சென்னை,பெங்களூரு உள்ளிட்ட வெளியிடங்களுக்கு செல்லாமல் உள்ளூரிலேயே வேலையை பெற வாய்ப்பானது உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாகப்பட்டினம், கரூர், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் மினி டைடல் பூங்கா அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது.
நாகை, கரூர், புதுக்கோட்டையில் டைடல் பார்க்
நாகையில் 42 கோடியில் 58,660 சதுர அடி பரப்பளவில் தரை தளம் மற்றும் மூன்று தளங்களுடன் கூடிய மினி டைடல் பார்க் கட்டுவதற்கும் டெண்டர் கோரப்பட்டுள்ளது. மேலும் கரூரில் தரை தளம் மற்றும் நான்கு தளங்களுடன் கூடிய மினி டைடல் பார்க் 37 கோடியில் 64,000 சதுர அடியில் அமைக்கப்படவுள்ளது. மேலும் புதுக்கோட்டை நத்தம் பண்ணையில் 37 கோடியில் 60,386 சதுர அடியில் டைடல் பூங்க உருவாக்கப்படவுள்ளது. இதற்கான ட்டுமான பணி மேற்கொள்ள தற்போது டெண்டர் விடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு டைடல் பூங்காவும் சராசரியாக தலா, 60,000 சதுர அடியில் கட்டப்பட உள்ளது. இதற்கான திட்ட செலவாக சுமார் 120 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான நிறுவனங்களை தேர்வு செய்து, கட்டுமான பணிகளை 4 மாதங்களுக்குள் துவக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மூன்று டைடல் பார்க் வாயிலாக, 2,000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.























