வங்கிகளில் கிளார்க் பணிக்கானத் தேர்வு எப்போது? உத்தேசப்பட்டியலை வெளியிட்ட தேர்வு வாரியம்!
முதன்மை மற்றும் மெயின் தேர்வு இரண்டிலும் ஆங்கில மொழித் தேர்வு தவிர இதர அனைத்துத் தேர்வுகளும் இந்தி மற்றும் ஆங்கிலத்துடன் கூடுதலாக 13 பிராந்திய மொழிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிகளில் கிளார்க் பிரிவு பதவிகளுக்கான முதன்மை மற்றும் மெயின் தேர்விற்கான உத்தேசப்பட்டியலை வங்கிப்பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
வங்கிகளில் அனைத்துப்பிரிவுகளுக்குப் பணியாளர்களை நியமனம் செய்வதற்கான விண்ணப்பம், தேர்வு தேதி போன்றவற்றை வெளியிடுவதில் வங்கிப்பணியாளர் தேர்வு வாரியத்திற்கு முக்கியப்பங்கு உள்ளது. அதன் படி தற்போது வங்கிகளில் கிளார்க் பிரிவு பதவிகளுக்காக பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான அடுத்த பொதுவானத் தேர்ந்தெடுத்தல் நடைமுறை விபரங்களை வங்கிப்பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி 2021 மற்றும் ஜனவரி 2022 ல் வங்கிகளில் கிளார்க் பணிக்கான முதன்மை மற்றும் மெயின் தேர்விற்கான உத்தேசப்பட்டியல் வெளியாகியுள்ளது.
மேலும் முதன்மை ( பிரிலிமினரி) மற்றும் மெயின் தேர்வு இரண்டிலும் ஆங்கில மொழித் தேர்வு தவிர இதர அனைத்துத் தேர்வுகளும் இந்தி மற்றும் ஆங்கிலத்துடன் கூடுதலாக 13 பிராந்திய மொழிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்நேரத்தில் வங்கிகளில் கிளார்க் பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கானப் பொதுவான தேர்ந்தெடுத்தல் நடைமுறை மற்றும் தேர்வு தேதி குறித்து இங்கே அறிந்துக்கொள்வோம்.
வங்கிப்பணித்தேர்விற்கான உத்தேசப்பட்டியல் விபரங்கள்:
அக்டோபர் 7 முதல் அக்டோபர் 10 - விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பத்தில் சரி செய்தல்/ மாறுதல் செய்தல் உட்பட ஆன்லைன் பதிவு செய்தல்
.அக்டோபர் 7 முதல் அக்டோபர் 10 – விண்ணப்பக்கட்டணம்/ தகவல் தெரிவிக்கும் கட்டணங்கள் செலுத்துதல் ( ஆன்லைன்)
நவம்பர் 2021 – முன்- தேர்வு பயிற்சிக்கான அழைப்பு கடிதங்களை பதிவிறக்கம் செய்தல்.
நவம்பர் 2021 – முன் தேர்வு பயிற்சியை நடத்துதல்
நவம்பர் / அல்லது டிசம்பர் 2021 – ஆன்லைன் தேர்வுக்கான அழைப்பு கடிதங்களை பதிவிறக்கம் செய்தல்.
டிசம்பர் 2021- பிரிலிமினரி ஆன்லைன் தேர்வு
டிசம்பர் 2021/ ஜனவரி 2022 – பிரிலிமினரி ஆன்லைன் தேர்வு முடிவு
டிசம்பர் 2021/ ஜனவரி 2022- மெயின் தேர்விற்கான (ஆன்லைன்) அழைப்பு கடிதத்தை பதிவிறக்கம் செய்தல்
ஜனவரி / பிப்ரவரி 2022 - மெயின் தேர்வு முடிவு
ஏப்ரல் 2022 – தற்காலி ஒதுக்கீடு
எனவே இந்த நடைமுறைகளில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கும். எனவே அவ்வப்போது நடப்பு விபரங்களுக்கு IBPS அதிகாரப்பூர்வ இணையதளம் www.ibps.in ஐ விண்ணப்பதார்கள் தொடர்ந்துப் பார்வையிட அறிவுறுத்தப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நடைமுறைக்காக ஜூலை 12-14, 2021 காலத்தில் ஏற்கனவே வெற்றிகரமாகப் பதிவு செய்துள்ள விண்ணப்பதார்கள் மறுபடியும் விண்ணப்பிக்கத் தேவையில்லை எனவும் அவர்களது விண்ணப்பம் மேற்கொண்டு நடவடிக்கைக்காக பரிசீலனை செய்யப்படும். இதோடு ஆன்லைன் பதிவு செய்வதற்கு முன்னர், விண்ணப்பதாரர்கள் அனைத்து அறிக்கைகளை விவரமாகப் படித்து அதில் குறிப்பிட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றுவதற்கு வங்கிப்பணியாளர் தேர்வு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.