மேலும் அறிய

ஏதேனும் ஒரு டிகிரி இருக்கா? ESIC யில் மேலாளர் பணிக்கு உடனே விண்ணப்பித்துவிடுங்கள்!

விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்நிலை, முதன்மைத்தேர்வு மற்றும் கணினி அறிவு என 3 பகுதியாக நடைபெறவுள்ளது.

தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள 93 சமூக பாதுகாப்பு அலுவலர் அல்லது மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே ஆர்வமும், தகுதியும் உள்ள இளைஞர்கள் உடனடியாக இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தொழிலாளர் அரசு காப்பீட்டுத் திட்டம் என்பது சமூகப்பாதுகாப்புடன் ஒருங்கிணைந்த பல்நோக்கு நலத் திட்டமாகும். இதன் மூலம்  தொழிலாளர் அரசு காப்பீட்டுச் சட்டத்தின் கீழ்,  விவரிக்கப்பட்டிருக்கும் தொழிலாளர்களுக்கு அவ்வப்பொழுது நேரிடும் உடல்நலக் குறைபாடு, பெண் தொழிலாளர்களுக்கான மகப்பேறு, வேலை செய்யும் போது விபத்தினால் ஏற்படும் தற்காலிகமான அல்லது நிரந்தரமான ஊனம் மற்றும் மரணம் போன்ற அனைத்திற்கும் உரிய மருத்துவச்சேவை வழங்குகிறது. இந்த தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் பல்வேறு துறைகளின் கீழ் பலர் பணியாற்றி வரும் நிலையில் தற்போது சமூக பாதுகாப்பு அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கானத் தகுதி? விண்ணப்பிக்கும் முறை? குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.

  • ஏதேனும் ஒரு டிகிரி இருக்கா? ESIC யில் மேலாளர் பணிக்கு உடனே விண்ணப்பித்துவிடுங்கள்!

சமூக பாதுகாப்பு அலுவலர் பணிக்கானத் தகுதிகள்:

 மொத்த காலிப்பணியிடங்கள் – 93

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இதோடு கணினி பயன்படுத்த தெரிந்திருக்கவேண்டும்.

வயது வரம்பு :

12.04.2022 அன்று 21 வயது முதல் 27 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 2 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில், https://www.esic.nic.in/recruitments அல்லது  https://ibpsonline.ibps.in/esicssomar22/ என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி – ஏப்ரல் 12, 2022

விண்ணப்பக்கட்டணம்:

SC/ST, பெண்கள் மற்றும் மாற்று திறனாளிகள் பிரிவுகளுக்கு ரூ 250

பொது மற்றும் OBC பிரிவைச்சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு  ரூ.500 விண்ணப்பக்கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தேர்வு செய்யும் முறை:

மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வானது முதல்நிலை, முதன்மைத்தேர்வு மற்றும் கணினி அறிவு மற்றும் விரிவான விடையளித்தல் தேர்வு என 3 பகுதியாக நடைபெறவுள்ளது.

இதில் தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் மட்டுமே தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் சமூக பாதுகாப்பு அலுவலராக பணி அமர்த்தப்படுவார்கள்.

சம்பளம் : மாதம் ரூ. 44,900 – 1,42,400 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் உடனடியாக இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துப் பயன்பெறுங்கள்.  மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை  https://www.esic.nic.in/attachments/recruitmentfile/137aadcd28fca627bf24b12befd88720.pdf  என்ற இணையதளப் பக்கத்தின் மூலம் முழுமையாக தெரிந்துக்கொள்ளலாம்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Watch Video: கபில்தேவுடனே கிரிக்கெட் ஆடினாரா மு.க.ஸ்டாலின்? வெளியானது வீடியோ ஆதாரம்!
Watch Video: கபில்தேவுடனே கிரிக்கெட் ஆடினாரா மு.க.ஸ்டாலின்? வெளியானது வீடியோ ஆதாரம்!
TVK Vijay: நாளையே தேர்தல் வந்தாலும் விஜய்தான் முதலமைச்சர்.. அடித்துச் சொல்லும் செங்கோட்டையன்!
TVK Vijay: நாளையே தேர்தல் வந்தாலும் விஜய்தான் முதலமைச்சர்.. அடித்துச் சொல்லும் செங்கோட்டையன்!
Syria Mosque Blast 8 Dead: சிரியாவில் சோகம்.! மசூதி குண்டுவெடிப்பில் 8 பேர் பலி; பயங்கரவாத தாக்குதலில் 18 பேர் படுகாயம்
சிரியாவில் சோகம்.! மசூதி குண்டுவெடிப்பில் 8 பேர் பலி; பயங்கரவாத தாக்குதலில் 18 பேர் படுகாயம்
டி.டி.வி. தினகரனை கூட்டணிக்கு அழைக்கும் அண்ணாமலை... இது குறித்து தினகரன் முடிவு என்ன?
டி.டி.வி. தினகரனை கூட்டணிக்கு அழைக்கும் அண்ணாமலை... இது குறித்து தினகரன் முடிவு என்ன?
ABP Premium

வீடியோ

இடைக்கால ஜாமீன் READYகுஷியில் சவுக்கு சங்கர் சாட்டையை சுழற்றிய HIGH COURT | Savukku Shankar
GK Mani Expelled from PMK | ‘’ஜி.கே.மணி GET OUT’’தூக்கியடித்த அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்!
மூர்த்தியுடன் ரகசிய DEAL? தவெக மா.செ மீது புகார்! சொந்த கட்சியினரே போர்க்கொடி
Sleeping Man falls from 10th Floor|10 வது மாடியில் இருந்துதவறி விழுந்த முதியவர் | Surat
DMDK DMK Alliance | திமுக கொடுத்த OFFER!ரூட்டை மாற்றும் பிரேமலதா! தேமுதிக கூட்டணி ப்ளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Watch Video: கபில்தேவுடனே கிரிக்கெட் ஆடினாரா மு.க.ஸ்டாலின்? வெளியானது வீடியோ ஆதாரம்!
Watch Video: கபில்தேவுடனே கிரிக்கெட் ஆடினாரா மு.க.ஸ்டாலின்? வெளியானது வீடியோ ஆதாரம்!
TVK Vijay: நாளையே தேர்தல் வந்தாலும் விஜய்தான் முதலமைச்சர்.. அடித்துச் சொல்லும் செங்கோட்டையன்!
TVK Vijay: நாளையே தேர்தல் வந்தாலும் விஜய்தான் முதலமைச்சர்.. அடித்துச் சொல்லும் செங்கோட்டையன்!
Syria Mosque Blast 8 Dead: சிரியாவில் சோகம்.! மசூதி குண்டுவெடிப்பில் 8 பேர் பலி; பயங்கரவாத தாக்குதலில் 18 பேர் படுகாயம்
சிரியாவில் சோகம்.! மசூதி குண்டுவெடிப்பில் 8 பேர் பலி; பயங்கரவாத தாக்குதலில் 18 பேர் படுகாயம்
டி.டி.வி. தினகரனை கூட்டணிக்கு அழைக்கும் அண்ணாமலை... இது குறித்து தினகரன் முடிவு என்ன?
டி.டி.வி. தினகரனை கூட்டணிக்கு அழைக்கும் அண்ணாமலை... இது குறித்து தினகரன் முடிவு என்ன?
MK STALIN: உங்கள் பாட்சா இங்கே பலிக்காது.. வித்தை வேலைக்கு ஆகாது.! பாஜகவை வெளுத்து வாங்கிய ஸ்டாலின்
உங்கள் பாட்சா இங்கே பலிக்காது.. வித்தை வேலைக்கு ஆகாது.! பாஜகவை வெளுத்து வாங்கிய ஸ்டாலின்
புதுக்கோட்டை மின் தடை: டிசம்பர் 29-ல் இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணுங்க!
புதுக்கோட்டை மின் தடை: டிசம்பர் 29-ல் இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணுங்க!
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! நெல்லை, பொதிகை, முத்துநகர் விரைவு ரயில்களின் நேரங்களில் மாற்றம்: முழு விபரம் இதோ!
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! நெல்லை, பொதிகை, முத்துநகர் விரைவு ரயில்களின் நேரங்களில் மாற்றம்: முழு விபரம் இதோ!
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! குஷியில் துள்ளி குதிக்கும் கள்ளக்குறிச்சி மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! குஷியில் துள்ளி குதிக்கும் கள்ளக்குறிச்சி மக்கள்
Embed widget