மேலும் அறிய

Job Alert: 8-வது தேர்ச்சி போதும்; மாதம் ரூ.50,000 ஊதியம் - முழு விவரம்!

Job Alert: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி பிரிவில் உள்ள வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை இங்கே காணலாம்.

தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி பிரிவில் உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.  

பணி விவரம்:

அலுவலக உதவியாளர்

இரவுக் காவலர்

கல்வித் தகுதி:

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

 இரவுக் காவலர் பணிக்கு தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். 

வயது வரம்பு:

இதர பிரிவிவர் 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

பட்டியலின பிரிவினர் /பழங்குடியின பிரிவினர், ஆதரவற்ற விதவை உள்ளிட்டோருக்கு அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

அலுவலக உதவியாளர் - ரூ.15,700 - ரூ.50,000/-

இரவுக் காவலர் - ரூ.15,700 - ரூ.50,000/-

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள்:

  •  விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், சாதிச்சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.
  • இனசுழற்சி, வயது மற்றும் கல்வித் தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
  • ஒவ்வொரு பணியிடத்திற்கும் தகுதியின் அடிப்படையில் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்.
  •  விண்ணப்பதாரர் காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்ட மாவட்டத்திற்குள் வசிப்பவராக இருக்க வேண்டும்.
  • அரசு விதிகளின்படி இனசுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.
  •  சுய முகவரியுடன் கூடிய ரூ.25/- அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட அஞ்சல் உறை -1 (10*4 Inches Postal Cover) இணைத்து அனுப்பப்பட வேண்டும். 

அஞ்சல் அனுப்பப்பட வேண்டிய முகவரி:

ஆணையாளர்,

ஊராட்சி ஒன்றியம்.,

 தருமபுரி

எப்படி விண்ணப்பிப்பது?

தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி நேர்காணல் கடிதம் (Call Letter) பின்னர் அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்ய https://www.dharmaburi.tn.nic.in/- என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:  0512.2023 மாலை 05.45 வரை 

அதிகாரப்பூர்வ வலைதள முகவரி- https://cdn.s3waas.gov.in/s366368270ffd51418ec58bd793f2d9b1b/uploads/2023/11/2023112185-1.pdfhttps://cdn.s3waas.gov.in/s366368270ffd51418ec58bd793f2d9b1b/uploads/2023/11/2023112196-1.pdf- என்ற லிங்கை கிளிக் செய்து அறிவிப்பின் முழு விவரத்தை தெரிந்து கொள்ளலாம்.

சென்னை கணித நிறுவனத்தில் வேலை

சென்னை கணித நிறுவனத்தில் (The Institute of Mathematical Sciences) காலியாக உள்ள Deputy Controller Of Accounts பணியிடத்திற்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி விவரம்

Deputy Controller Of Accounts 

கல்வி மற்றும் பிற தகுதிகள்

இதற்கு விண்ணப்பிக்க ஏதாவது ஒரு துறையில் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

நிதி மேலாண்மை, திட்டமிடுவது, நிர்வாக திட்டமிடல், நிதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து தெரிந்திருக்க வேண்டும்.

குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.  எட்டு ஆண்டுகள் பணி அனுபவம் இருப்பின் அதற்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படும்.

இந்த நிறுவனத்தின் நிதி நிர்வாகம் சார்ந்த பணிகள் திட்டமிடல் மற்றும் செயல்படுத்துதல் ஆகிய பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

ஊதிய விவரம்

7-வது மெட்ரிக்ஸ் லெவல் -11-ன் படி மாத ஊதியம் வழங்கப்படும்.

வயது வரம்பு:

இதற்கு விண்ணப்பிக்க 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தெரிவு செய்யும் முறை:

இதற்கு எழுத்துத் தேர்வு, நேர்காணல, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்ப கட்டணம்

இதற்கு விண்ணப்ப கட்டணமாக 500-ரூபாய் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

https://www.imsc.res.in/ - என்ற அதிகாரப்பூர்வ இணைதள முகவரியின் வேலைவாய்ப்பு பக்கத்தில் ‘Recruitment of Deputy Controller of Accounts' என்றிருக்கும். அதை க்ளிக் செய்து தேவையான ஆவணங்களை அப்லோடு செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

https://naukri.imsc.res.in/dca/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணபிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி - 10.12.2023 

இது தொடர்பான கூடுதல் விவரங்களை காண https://www.imsc.res.in/~office/jobs/imsc-dca-14nov2023.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.


 


 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
காஞ்சிபுரத்தில் காத்திருக்கும் அரசு வேலை: ஆட்சியர் தி.சினேகா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
காஞ்சிபுரத்தில் காத்திருக்கும் அரசு வேலை: ஆட்சியர் தி.சினேகா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
242 பணியிடங்கள்... பட்டதாரிகளுக்கு அருமையான வாய்ப்பு... எங்கு தெரியுங்களா?
242 பணியிடங்கள்... பட்டதாரிகளுக்கு அருமையான வாய்ப்பு... எங்கு தெரியுங்களா?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget