மேலும் அறிய

+2 தேர்ச்சியா? CISF-ல் 1149 பணியிடங்கள்.. தமிழகத்திற்கு 49 இடங்கள் ஒதுக்கீடு.. உடனே விண்ணப்பிக்கவும்!

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ சோதனை தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்புகள் அடிப்படையில தகுதியானவர்கள தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய தொழிற்பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 1149 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டிற்கு 49 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வருகின்ற மார்ச் 4 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

 இந்தியாவின் முக்கிய தொழிற்நிலையங்களைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட துணை ராணுவப்படை தான் மத்திய தொழிற்பாதுகாப்பு படை. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவரும் இந்நிறுவனம், முன்னதாக இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி, 2800 படை வீரர்களுடன், மத்திய அரசின் நிறுவனங்களுக்கு மட்டும் பாதுகாப்பு வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்டது. இதனையடுத்து 1983 ஆம் ஆண்டு முதல் ஆயுதம் ஏந்தும் உரிமை இந்த வீரர்களுக்கு வழங்கப்பட்டது.

  • +2 தேர்ச்சியா? CISF-ல் 1149 பணியிடங்கள்.. தமிழகத்திற்கு 49 இடங்கள் ஒதுக்கீடு.. உடனே விண்ணப்பிக்கவும்!

மேலும் அணு உலைகள், விண்வெளி ஆய்வகங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், பாதுகாப்பு தேவைப்படும் அரசு கட்டிடங்கள், புராதானச் சின்னங்கள் போன்றவைகளைப் பாதுகாக்கும் பொறுப்பில் மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும் சிஐஎஸ்எப்யில் பல்வேறு பிரிவுகளின் கீழ் பலர் பணியாற்றிவரும் நிலையில் தற்போது கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

CISF யில் கான்ஸ்டபிள் பணிக்கானத் தகுதிகள்:

மொத்த காலிப்பணியிடங்கள் – 1149

மாநிலம் வாரியாக காலிப்பணியிட விபரங்கள்:

தமிழ்நாடு -49

பீகார் – 123

உத்தரப்பிரதேசம் – 112

அசாம் – 103

ஜார்க்கண்ட் – 87

ஆந்திரா- 79

மஹாராஷ்டிரா- 70

ஒடிசா – 58

மேற்கு வங்கம் – 54

ஜம்மு காஷ்மீர் -41

கல்வித்தகுதி:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில், அறிவியல் பாடங்களுடன் கூடிய பிரிவில் பன்னிரெண்டாம்  வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

இதர தகுதிகள்:

உயரம்- விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்ச உயரம் 170 செமீ ஆக இருக்க வேண்டும்.

மார்பளவு – சாதாரண நிலையில் 80 செமீ, மார்பு விரிவடைந்த நிலையில் 85 செமீ ஆக இருக்க வேண்டும்.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 4.3.2022 ஆம் தேதியின் படி 18 வயது முதல் 23 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில், www.cisfrectt.in என்ற இணையதளத்தின் வாயிலாக வருகின்ற மார்ச் 4 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம் – ரூபாய் 100

தேர்வு செய்யும் முறை:

மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ சோதனை தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்புகள் அடிப்படையில தகுதியானவர்கள தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விவரங்களை, https://www.cisfrectt.in/  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக முழுமையாக அறிந்துக்கொள்ளலாம்.

 

 

தலைப்பு செய்திகள்

10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வாய்ப்பு! சுயதொழில் தொடங்க சென்னையில் பயிற்சி
10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வாய்ப்பு! சுயதொழில் தொடங்க சென்னையில் பயிற்சி
அரசு பணி வாய்ப்பு: வட்டார ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு விண்ணப்பிக்க அக். 17 கடைசி நாள்.
அரசு பணி வாய்ப்பு: வட்டார ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு விண்ணப்பிக்க அக். 17 கடைசி நாள்.
“10-ம் வகுப்பு போதும்... அரசு வேலை ரெடி! TNPSC குரூப் 4-ல் 6,574 காலியிடங்கள் – ஜனவரி 10-ல் தேர்வு!”
“10-ம் வகுப்பு போதும்... அரசு வேலை ரெடி! TNPSC குரூப் 4-ல் 6,574 காலியிடங்கள் – ஜனவரி 10-ல் தேர்வு!”
மதுரை வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள உள்ள top நிறுவனங்கள்... இளைஞர்கள் இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க !
மதுரை வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள உள்ள top நிறுவனங்கள்... இளைஞர்கள் இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க !

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
TN Bypoll: மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
Embed widget