மேலும் அறிய

Chennai OSC Recruitment: 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்; நேர்காணல் மட்டுமே- தமிழக அரசுத் துறையில் பணி- விண்ணப்பிப்பது எப்படி?

Chennai OSC Recruitment 2024: பள்ளிப்படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும்‌. ஆண்‌, பெண்‌ இருபாலரும்‌ விண்ணப்பிக்கலாம்‌. இது ஒப்பந்த அடிப்படையிலான பணி ஆகும்‌.

பெண்கள்‌ மற்றும்‌ குழந்தை வளர்ச்சி அமைச்சகம்‌, வன்முறையால்‌ பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24 மணி நேரமும்‌ உடனடி மற்றும்‌ அவசர சேவைகளை வழங்குவதற்கான நோக்கத்துடன்‌ பெண்கள்‌ உதவி மையத்தை அமைக்க ஒரு புதிய திட்டத்தை ஆரம்பித்துள்ளது. அதில்‌ ஒன்றான ஒருங்கிணைந்த சேவை மையம்‌, பெண்கள்‌ உதவி மையம்‌ (181) போன்ற பெண்களின்‌ பாதுகாப்பு மற்றும்‌ நலன்‌ கருதி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில்‌ முக்கிய அம்சமாக மருத்துவ உதவி, ஆலோசனை, காவல்துறை, சட்டம்‌, உளவியல்‌ மற்றும்‌ உணர்வியல்‌ ரீதியான ஆதரவு வேண்டியுள்ள ஒவ்வொரு மகளிரும்‌ பயனடையும்‌ நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில்‌ தொகுப்பூதிய / ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம்‌.

என்ன தகுதி?

வழக்கு பணியாளர்‌ (Case worker) (காலிப்பணியிடம் ‌1)

சமூகப்‌ பணியில்‌ இளங்கலை பட்டம்‌ (Bachelor's Degree in Social Work) பெற்றிருக்க வேண்டும்‌. மேலாண்மை வளர்ச்சியில்‌ உளவியல்‌ (Counselling Psychology)  மற்றும்‌ பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும்‌ வகையில்‌ அரசு மற்றும்‌ அரசு சாராத திட்டங்கள்‌ அல்லது திட்டங்களுடன்‌ அமைக்கப்பட்ட ஒரு நிர்வாகத்தில்‌ 1 வருட முன்‌ அனுபவம்‌ உடையவராகவும்‌, உளவியல்‌ ஆலோசனையில்‌ ஒரு நிறுவனத்திலோ அல்லது வெளிப்பணிகளிலோ குறைந்த பட்சம்‌ 1 வருட அனுபவம்‌ உடையவராகவும்‌ இருக்க வேண்டும்‌. வயது 35-க்குள்‌ இருக்க வேண்டும்‌.

உள்ளூரைச்‌ சார்ந்த பெண்கள்‌ மட்டும்‌ விண்ணப்பிக்கலாம்‌. வாகனம்‌ ஓட்டத்‌ தெரிந்திருக்க வேண்டும்‌. தேவைப்படும்‌ பட்சத்தில்‌ சுழற்சி முறையில்‌ 7 நாட்களிலும்‌ 24 மணி நேரமும்‌ பணியாற்ற வேண்டி இருக்கும்‌. இது ஒப்பந்த அடிப்படையிலான (Contract) பணி ஆகும்‌.மாத ஊதியமாக ரூ.18,000/- வழங்கப்படும்‌.

பணியிடம்‌ : ஒருங்கிணைந்த சேவை மையம்‌, தாம்பரம்‌ சானடோரியம்‌.

பாதுகாப்பாளர்‌ (Security Guard) (காலிப்பணியிடங்கள்‌ 2)

அரசு அல்லது புகழ்பெற்ற நிறுவனத்தில்‌ பாதுகாப்புப்‌ பணியாளராக பணியாற்றிய அனுபவம்‌ மற்றும்‌ உள்ளூரைச்‌ சார்ந்தவராக இருக்க வேண்டும்‌.

பள்ளிப்படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும்‌. ஆண்‌, பெண்‌ இருபாலரும்‌ விண்ணப்பிக்கலாம்‌. தேவைப்படும்‌ பட்சத்தில்‌ சுழற்சி முறையில்‌ 7 நாட்களிலும்‌ 24 மணி நோமும்‌ பணியாற்ற வேண்டி இருக்கும்‌. இது ஒப்பந்த அடிப்படையிலான பணி ஆகும்‌. மாத ஊதியமாக ரூ.12,000/- வழங்கப்படும்‌.

பணியிடம்‌ : ஒருங்கிணைந்த சேவை மையம்‌, தாம்பரம்‌ சானடோரியம்‌.

பன்முக உதவியாளர்‌  (Multi Purpose Helper) (காலிப்பணியிடங்கள்‌ 2)

ஏதாவது அலுவலகத்தில்‌ பராமரிப்பாளராக பணிபுரிந்த அனுபவம்‌ உடையவராக இருக்க வேண்டும்‌. விண்ணப்பதாரருக்கு சமையல்‌ தெரிந்திருக்க வேண்டும்‌.

உள்ளூரைச்‌ சார்ந்த பெண்கள்‌ மட்டும்‌ விண்ணப்பிக்கலாம்‌. தேவைப்படும்‌ பட்சத்தில்‌ சுழற்சி முறையில்‌ 7 நாட்களிலும்‌ 24 மணி நேரமும்‌ பணியாற்ற வேண்டி இருக்கும்‌. இது ஒப்பந்த அடிப்படையிலானபணி ஆகும்‌. மாத ஊதியமாக ரூ.10,000/- வழங்கப்படும்‌.

பணியிடம்‌ : ஒருங்கிணைந்த சேவை மையம்‌, தாம்பரம்‌ சானடோரியம்‌.

விண்ணப்பிப்பது எப்படி?

விரும்பும்‌ பதவிகளுக்கு https://chennai.nic.in/ என்னும்‌ இணையதளத்தில்‌ விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம்‌ செய்துகொள்ள வேண்டும்.

டிசம்பர் 6 கடைசி

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம்‌ மற்றும்‌ உரிய சான்றிதழ்களுடன்‌ 06.12.2024 அன்று மாலை 5.00 மணிக்குள்‌ மாவட்ட சமூகநல அலுவலகம்‌, மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக வளாகம்‌, 8-வது தளம்‌, சிங்காரவேலர்‌ மாளிகை, இராஜாஜி சாலை, சென்னை- 01 என்ற முகவரியில்‌ நேரடியாகவோ அல்லது oscchennaib@gmail.com என்ற மின்னஞ்சல்‌ முகவரிக்கோ விண்ணப்பம்‌ செய்ய வேண்டும்.

விண்ணப்பப் படிவத்தை https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2024/11/2024112273.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்தும் பெற்றுக் கொள்ளலாம். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Aadhav Arjuna : “விடியல் எப்போது? திமுக அரசு செயல்படவே இல்லை” ஆதவ் அர்ஜூனா அட்டாக்..!
Aadhav Arjuna : “விடியல் எப்போது? திமுக அரசு செயல்படவே இல்லை” ஆதவ் அர்ஜூனா அட்டாக்..!
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
OPS ADMK: ஓபிஎஸ் பக்கம் காத்து, அடித்தது ஜாக்பாட் - இரட்டை இலை விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
OPS ADMK: ஓபிஎஸ் பக்கம் காத்து, அடித்தது ஜாக்பாட் - இரட்டை இலை விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
Maharashtra CM: தேவேந்திர பட்னாவிசுக்கு அடித்தது ஜாக்பாட்! மகாராஷ்டிரா முதலமைச்சராக நாளை பதவியேற்பு!
Maharashtra CM: தேவேந்திர பட்னாவிசுக்கு அடித்தது ஜாக்பாட்! மகாராஷ்டிரா முதலமைச்சராக நாளை பதவியேற்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul, Priyanka Visit Sambhal : ”உள்ளே வராதீங்க ராகுல்” தடுத்து நிறுத்திய போலீசார் பாத்துக்கலாம் Bro! பிரியங்கா சவால்!நேற்று சேறு, இன்று பேனர்... கடும் கோபத்தில் மக்கள்! தலைவலியில் பொன்முடிநிர்மலாவை சந்தித்த திமுகவினர்ஸ்டாலின் கணக்கு என்ன?பின்னணியில் அதானி?TVK Vijay  : ”நேர்ல வர முடியாதா விஜய்? CM சீட் மட்டும் வேணுமா!” திட்டித் தீர்க்கும் மக்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aadhav Arjuna : “விடியல் எப்போது? திமுக அரசு செயல்படவே இல்லை” ஆதவ் அர்ஜூனா அட்டாக்..!
Aadhav Arjuna : “விடியல் எப்போது? திமுக அரசு செயல்படவே இல்லை” ஆதவ் அர்ஜூனா அட்டாக்..!
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
OPS ADMK: ஓபிஎஸ் பக்கம் காத்து, அடித்தது ஜாக்பாட் - இரட்டை இலை விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
OPS ADMK: ஓபிஎஸ் பக்கம் காத்து, அடித்தது ஜாக்பாட் - இரட்டை இலை விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
Maharashtra CM: தேவேந்திர பட்னாவிசுக்கு அடித்தது ஜாக்பாட்! மகாராஷ்டிரா முதலமைச்சராக நாளை பதவியேற்பு!
Maharashtra CM: தேவேந்திர பட்னாவிசுக்கு அடித்தது ஜாக்பாட்! மகாராஷ்டிரா முதலமைச்சராக நாளை பதவியேற்பு!
Harbhajan Singh : ”பேசி 10 வருஷம் ஆச்சு!” தோனி கிட்ட என் லிமிட் இதான்.. ஹர்பஜன் பகீர் பேச்சு
Harbhajan Singh : ”பேசி 10 வருஷம் ஆச்சு!” தோனி கிட்ட என் லிமிட் இதான்.. ஹர்பஜன் பகீர் பேச்சு
Sukhbir Badal Attacked: சீக்கிய தலைவர், பஞ்சாப் முன்னாள் துணை சிஎம் மீது பொற்கோயிலில் துப்பாக்கிச் சூடு- என்ன காரணம்? சுட்டவர் யார்?
Sukhbir Badal Attacked: சீக்கிய தலைவர், பஞ்சாப் முன்னாள் துணை சிஎம் மீது பொற்கோயிலில் துப்பாக்கிச் சூடு- என்ன காரணம்? சுட்டவர் யார்?
அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசியது யார்..?...  ‘இதை அண்ணாமலை சொன்னால் நன்றாக இருக்கும்’
அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசியது யார்..?... ‘இதை அண்ணாமலை சொன்னால் நன்றாக இருக்கும்’
Mesham New Year Rasi Palan: காதல் வெற்றி, பண யோகம்! 2025ல் கலக்கப்போகும் மேஷ ராசி - முழு பலனை பாருங்க
Mesham New Year Rasi Palan: காதல் வெற்றி, பண யோகம்! 2025ல் கலக்கப்போகும் மேஷ ராசி - முழு பலனை பாருங்க
Embed widget