ஐடிஐயில் படித்தவர்களுக்கு காரைக்குடி CECRIல் வேலைவாய்ப்பு: சம்பளம் எவ்வளவு தெரியுமா?
ஐடிஐயில் படித்தவர்களுக்கு காரைக்குடி CECRIல் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பாணை வெளியாகி இருக்கிறது.
ஐடிஐயில் படித்தவர்களுக்கு காரைக்குடி CECRIல் வேலைவாய்ப்பு டெக்னீஷியன் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் பணிகளுக்கு இருப்பதாக அறிவிப்பாணை வெளியாகி இருக்கிறது.
மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் (Central Electro Chemical Research Institute, CECRI) இந்தியாவில் உள்ள 40 தேசிய ஆய்வுக் கூடங்களில் ஒன்றும், அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் (CSIR) கீழ் இயங்கும் ஒரு முதன்மையான ஆய்வுக் கூடமுமாகும். இது 1948ல் நிறுவப்பட்டது.
இங்கே வேலை பார்ப்பது இத்துறை சார்ந்தவர்களின் லட்சியமகாவே இருக்கிறது. அத்தகைய பெருமைமிகு நிறுவனம் சிக்ரி. அரசு நிறுவனமான CECRIல் டெக்னீஷியன் மற்றும் டெக்னீகல் அசிஸ்டன்ட் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது.
31.08.2021 அன்று இந்த அறிவிப்பை சி.இ.சி.ஆர்.ஐ நிறுவனமானது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி 2021 ஆம் ஆண்டிற்கான சிக்ரி ஆட்சேர்ப்பில் இந்தியா முழுவதும் மொத்தம் 54 காலியிடங்கள் உள்ளன.
தொழில்நுட்ப வல்லுநர் என்ற பதவிக்கான காலிப் பணியிடங்கள் இவை.
இந்த காலியிடங்கள் குறித்த முழு தகவல்களையும் https://cecri.res.in/ என்ற சிக்ரியின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் பெறலாம்.
இந்தப் பணியில் சேர கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பில் அறிவியல் பாடத்தில் 55 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மேலும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் ஐடிஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். குறைந்தது இரண்டு வருடங்களாவது வேறு ஏதேனும் நிறுவனத்தில் பணி அனுபவம் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்கள் காரைக்குடியில் உள்ள சிக்ரி மையத்தில் தான் பணியமர்த்தப்படுவார்கள். மொத்தம் 13 காலிப்பணியிங்கள் உள்ளன. விண்ணப்பதாரர்களுக்கு 28 முதல் 38 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும். பணியில் சேர்வோருக்கு ரூ 28,216 மாத சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி (31.08.2021) முதல் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 27 (27.09.2021) என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனே பெருந்தொற்று இந்தியாவில் இரண்டாவது அலைக்குப் பின்னர் வேலையிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இப்போதுதான் இந்தியப் பொருளாதாரம் மெல்ல மெல்ல மீண்டு வருகிறது. ஆகையால் அரசு அங்கங்களும் வேலையமர்த்துதல் போன்ற பணிகளைத் தொடங்கியுள்ளன.
காரைக்குடி CECRIல் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பாணை ஐடிஐ இளைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு.
தொழில்நுட்ப உதவியாளர் பணி:
தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பையும் சிக்ரி வெளியிட்டுள்ளது. எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ்/ தொழில்நுட்பம் துறையில் டிப்ளமோ பெற்றிருப்பவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மொத்தம் 41 பணியிடங்கள் காலியாக உள்ளன. விண்ணப்பதாரர்களுக்கு 28 முதல் 38 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும். 2 வருடம் பணி அனுபவம் இருத்தல் சிறப்பு. மாதம் ரூ.ரூ 50,448 சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கும் கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி (31.08.2021) முதல் விண்ணப்பன்ங்கள் பெறப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 27 (27.09.2021) என்று அறிவிக்கப்பட்டுள்ளது.