எல்லைப்பாதுகாப்பு படையில் 2788 பணியிடங்கள்.. ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்!
விண்ணப்பதாரர்களுக்கு உடற்தகுதி தேர்வு, எழுத்துத்தேர்வு, மருத்துவத் தேர்வு நடத்தப்படும் எனவும், இதில் தேர்வாகும் நபர்களே எல்லைப்பாதுகாப்பு படையில் பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லைப்பாதுகாப்பு படையில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 2788 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ள ஆண்கள், பெண்கள் அனைவரும் வருகின்ற மார்ச் 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
இந்திய சர்வதேச எல்லைப்பகுதிகளைப்பாதுகாக்கும் மத்திய காவல் ஆயுதப்படைகளில் ஒன்றாக எல்லைப்பாதுகாப்புப் படை இயங்கிவருகிறது. இந்திய துணை ராணுவங்களில் ஒரு பிரிவாகக் கருதப்படும் இப்படை கடந்த 1965 ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி உருவாக்கப்பட்டது. இதோடு மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இப்படைப்பிரிவின் முக்கிய பணி, எல்லை ஊடுருவலைத் தடுப்பதும், எல்லையைப் பாதுகாப்பதுமாக உள்ளது. இதோடு குருப் சி பிரிவின் கீழ் சமையல்பணி, டெய்லர் போன்ற பிரிவுகளின் கீழ் பலர் பணியாற்றிவருகின்றனர். தற்போது இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், இதற்கான தகுதி? விண்ணப்பிக்கும் முறை? குறித்து இங்கே அறிந்துக்கொள்வோம்.
எல்லைப்பாதுகாப்புப்படை பணிக்கானத் தகுதிகள்:
மொத்த காலிப்பணியிடங்கள்: 2788
ஆண்கள் விண்ணப்பிக்கக்கூடிய பணியிட விபரங்கள்:
CT Cobbler – 88
CT Tailor -47
CT cook – 879
CT water carrier – 510
CT washer man – 338
CT Barber – 123
CT sweeper – 617
CT carpenter – 13
CT Painter – 3
CT electrician – 4
CT draughtsman – 1
CT – waiter – 6
CT mail – 4
பெண்கள் விண்ணப்பிக்கக்கூடிய பணியிட விபரங்கள்:
CT cobbler – 3
CT tailor – 2
CT cook – 47
CT water carrier – 27
CT washer man- 18
CT Barber – 7
CT sweeper – 33
கல்வித்தகுதி :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
இதோடு சம்பந்தப்பட்ட துறைகளில் இரண்டு ஆண்டு பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
விண்ணப்பதார்களுக்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் 23 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால், எல்லைப்பாதுகாப்பு படையின் (Board security force) அதிகாரப்பூர்வ இணையத்தின் வாயிலாக வருகின்ற மார்ச் 1 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு உடற்தகுதி தேர்வு, எழுத்துத்தேர்வு, மருத்துவத் தேர்வு நடத்தப்படும் எனவும், இதில் தேர்வாகும் நபர்களே எல்லைப்பாதுகாப்பு படையில் பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பளம்:
மாதம் ரூபாய் 21,700 முதல் 69100 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை, http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_19110_78_2122b.pdf என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக அறிந்துக்கொள்லாம்.