மேலும் அறிய

BSF ல் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: 2,788 கான்ஸ்டபிள் பணிக்கு மார்ச் 1க்குள் விண்ணப்பிக்கவும்!

விண்ணப்பதாரர்கள் உடற்தகுதி, உடல் திறன் தேர்வு, ஆவணச் சரிபார்ப்பு, வர்த்தகத்தேர்வு, எழுத்துத்தேர்வு மற்றும் மருத்துவத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எல்லை பாதுகாப்பு படையில் (Border Security Force) காலியாக உள்ள 2788 கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள ஆண் மற்றும் பெண் நபர்கள் வருகின்ற மார்ச் 1 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும்.

இந்திய இளைஞர்கள் பலரிடம் ராணுவத்தில் ஏதாவது ஒரு பிரிவில் சேர்ந்துப் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை அதிகளவில் இருக்கும். இந்நிலையில் தான் அவர்களின் கனவை நினைவாக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் எல்லைப்பாதுகாப்பு படை, துணை ராணுவம் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகும். அதன் படி தற்போது  இந்திய சர்வதேச எல்லைப்பகுதிகளைப் பாதுகாக்கும் மத்திய காவல் ஆயுதப்படைகளில் ஒன்றாக எல்லைப்பாதுகாப்புப் படையில்  வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. ஆண் மற்றும் பெண் இருவருக்குமான இந்த அறிவிப்பில் 2788 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இப்பணியிடங்களுக்கான தகுதி? விண்ணப்பிக்கும் முறை? குறித்து இங்கே அறிந்துக்கொள்வோம்.

  • BSF ல் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: 2,788 கான்ஸ்டபிள் பணிக்கு மார்ச் 1க்குள் விண்ணப்பிக்கவும்!

எல்லைப்பாதுகாப்பு படையில் கான்ஸ்டபிள் பணியில் சேர்வதற்கானத் தகுதிகள்:

  மொத்த காலிப்பணியிடங்கள் – 2788

ஆண்கள் – 2651

பெண்கள் – 137

 கல்வித்தகுதி :

 விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / வாரியத்தில் இருந்து மெட்ரிகுலேஷன் அல்லது அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 வயது வரம்பு:

 விண்ணப்பதாரர்கள் ஆகஸ்ட் 1 , 2021 தேதியின் படி 18 வயது முதல் 23  வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

 விண்ணப்பிக்கும் முறை:

 மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில், https://rectt.bsf.gov.in/ என்ற இணையதளப்பக்கத்தின் மூலம் ஆன்லைன் மூலம் மார்ச்1 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

 விண்ணப்பக்கட்டணம் :

 UR/General/EWS category/OBC பிரிவினருக்கு ரூ. 100 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதர பிரிவினருக்கு விண்ணப்பக்கட்டணம் எதுவும் கிடையாது.

 தேர்வு செய்யும் முறை:

 மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் உடற்தகுதி, உடல் திறன் தேர்வு, ஆவணச் சரிபார்ப்பு, வர்த்தகத்தேர்வு, எழுத்துத்தேர்வு மற்றும் மருத்துவத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

 சம்பளம்- மாதம் ரூ. 21,700 முதல் ரூ. 69,100 என நிர்ணயம்.

 மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை https://rectt.bsf.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் முழுமையாக அறிந்துக்கொள்ளலாம்.

 இந்திய துணை ராணுவங்களில் ஒரு பிரிவாகக் கருதப்படும் இப்படை கடந்த 1965 ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி உருவாக்கப்பட்டது. இதோடு மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இப்படைப்பிரிவின் முக்கிய பணி, எல்லை ஊடுருவலைத் தடுப்பதும், எல்லையைப் பாதுகாப்பதுமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
PeT Teacher: அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு? கொள்கைக்கு முரணாக நடப்பதா?
PeT Teacher: அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு? கொள்கைக்கு முரணாக நடப்பதா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Trichy rowdy :  ரவுடியை சுட்டுப்பிடித்த POLICE! அலறவிடும் SP வருண்குமார்! நடந்தது என்ன?Britain Election Results | ஆட்சியிழக்கும் ரிஷி சுனக்!வெற்றி விளிம்பில் ஸ்டார்மர்!Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
PeT Teacher: அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு? கொள்கைக்கு முரணாக நடப்பதா?
PeT Teacher: அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு? கொள்கைக்கு முரணாக நடப்பதா?
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
Breaking News LIVE, July 5:ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; ஐ.ஜி.அஸ்ரா கார்க் தலைமையில் போலீஸ் தனிப்படை
Breaking News LIVE, July 5: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; ஐ.ஜி.அஸ்ரா கார்க் தலைமையில் போலீஸ் தனிப்படை
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு,  காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு, காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
Robot Suicide: 9 மணிநேரப் பணி; ஓய்வே இல்லை- வேலைப்பளு காரணமாக 'தற்கொலை' செய்துகொண்ட ரோபோ!
9 மணிநேரப் பணி; ஓய்வே இல்லை- வேலைப்பளு காரணமாக 'தற்கொலை' செய்துகொண்ட ரோபோ!
Embed widget