BEL Walk-IN : பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் தொழில்பழகுநர் பயிற்சி; 24-ஆம் தேதி நேர்காணல்!
BEL Walk-IN: பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டின் சென்னை அலுவலகத்தில் வரும் 24-ஆம் தேதி நேர்காணல் நடைபெற உள்ளது.
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (bharath electronics Limited) பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத் துறை நிறுவனம் ஆகும். பல்வேறு கிளைகளை கொண்ட இந்த நிறுவனத்தின் தமிழ்நாட்டு பிரிவான சென்னை அலுவகத்தில் பொறியியல் மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு ஓராண்டு கால தொழில்பழகுநர் பயிற்சி (Apprenticeship Training Scheme (NATS)) அளிக்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வரும் 24 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
பயிற்சி விவரம்:
இளங்களை பொறியியல் பிரிவு:
- எலக்ட்ரானிஸ் மற்றும் கம்யூனிகேசன் பொறியியல்
- மெக்கானிக்கல் பொறியியல்
- எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொறியியல்
- கம்யூட்டர் சயின்ஸ் பொறியியல்
- சிவில் பொறியியல்
டிப்ளமோ பிரிவு:
எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் பொறியியல்
மெக்கானிக்கல் இஞ்ஜினியரிங்
மொத்த இடங்கள்: 71
கல்வி மற்றும் பிற தகுதி:
- விண்ணபதாரர்கள் தென் இந்திய பகுதிகளைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, கேரளா மற்றும் பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
- விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.
01-04-2020 அன்று அல்லது அதற்குப் பிறகு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். - இளங்கலை மற்றும் டிப்ளமோ படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும்.
- அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதிக்கு அதிகமாக படித்திருப்பவர்கள் இதற்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 25 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பயிற்சி உதவித் தொகை விவரம்:
இளங்கலை பொறியாளர் பிரிவு - ரூ.11,110
டிப்ளமோ பொறியாளர் பிரிவு - ரூ. 10,400
தேர்வு செய்யப்படும் முறை:
இதற்கு நேர்காணல் மற்றும் இளங்கலை / டிப்ளமோ மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
எப்படி விண்ணப்பிப்பது?
இதற்கு விண்னப்பிக்க National Apprenticeship Training Scheme (NATS) இன் வலைதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பிறகு, பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் வலைதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்ய வேண்டும்.
தேசிய அப்ரண்டிஷிப் திட்டம் - https://portal.mhrdnats.gov.in/boat/login/user_login.action -என்ற லிங்கை பயன்படுத்தலாம்.
https://bel-india.in/ - என்ற வலைதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.
கவனிக்க:
- இதற்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு இருப்பிட வசதி வழங்கப்படாது.
- பயண செலவுகளுக்கான தொகை வழங்கப்படாது.
- அலுவலகத்தின் உணவகத்தில் கட்டணம் செலுத்தி உணவு உண்ண வேண்டும். இலவச சாப்பாடு வழங்கும் திட்டம் ஏதும் இல்லை.
- விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு வரும் போது கல்விச் சான்றிதழ், தேவையான சான்றிதழ்களின் அசல் சமர்பிக்கப்பட வேண்டும்.
நேர்காணலுக்கு செல்லும்போது எடுத்துச் செல்ல வேண்டியவை:
- பத்தாம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ்
- 12-ஆம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ்
- இளங்கலை - பட்ட சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்
- டிப்ளமோ சான்றிதழ்
- ஆதார் கார்டு
- CGPA சான்றிதழ்
நேர்காணல் நடைபெறும் இடம்:
BHARAT ELECTRONICS LIMITED
NANDAMBAKKAM
CHENNAI - 600 089
நேர்காணல் நடைபெறும் நாள் மற்றும் நேரம் 24.12.2022 - காலை 9:30 மணி முதல்
https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=GAPP%20TAPP%20Advt%20-%2014-12-2022.pdf - என்ற லிங்க் மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் விவரத்தை தெரிந்து கொள்ளலாம்.