மேலும் அறிய

CVRDE Apprenticeship:டிப்ளமோ தேர்ச்சி பெற்றவரா?கனரக தொழில் வாகன ஆராய்ச்சி மையத்தில் தொழில் பழகுநர் பயிற்சி!

CVRDE Apprenticeship:ஆவடி கனரக வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் வழங்கும் தொழில் பழகுநர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

ஆவடி கனரக வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் (Combat Vehicle Research and Development Establishment) தொழில் பழகுநர் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் நாளைக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு 2021,2022 மற்றும் 2023-ல் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு..

CVRDE Apprenticeship:டிப்ளமோ தேர்ச்சி பெற்றவரா?கனரக தொழில் வாகன ஆராய்ச்சி மையத்தில் தொழில் பழகுநர் பயிற்சி!

பயிற்சி விவரம்:

இந்த மையத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் டிப்ளமோ படித்தவர்கள் என இரண்டு பிரிவுகளில் பயிற்சி வழங்கப்படுகிறது. கம்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிஸ் பொறியியல், எலக்ட்ரானிஸ் அண்ட் கம்யூனிகேசன், மெக்கானிக்கல், நூலக அறிவியல், ஆட்டோமொபைல் ஆகிய பொறியியல் துறையில் இளங்கலை படித்தவர்களுக்கும், டிப்ளமோ படித்தவர்களுக்கும் தொழில்பழகுநர் பயிற்சி வழங்கப்படுகிறது.

இது ஓராண்டுகால அடிப்படையிலான தற்காலிக பயிற்சி வாய்ப்பு மட்டுமே. இதன் மூலம் நிரந்தர வேலைவாய்ப்பு ஏதும் கிடைக்காது என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 60 பணியிடங்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 

கல்வித் தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சம்பந்தப்பட்ட பாடப் பிரிவில் Degree in Engineering or Technology படித்திருக்க வேண்டும். டிப்ளமோ பிரிவிற்கு பொறியியல் துறையில்ஐ.டி.ஐ. டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

ஊக்கத்தொகை : 

COPA, CARPENTER& WELDERR - ரூ.7,700 மற்ற பணியிடங்களுக்கு ரூ.8050/- மாத ஊக்கத்தொகையாக வழங்கப்படும். 

வயது வரம்பு:

இந்தப் பயிற்சிக்கு ’Apprenticeship Rules’- படி வயது வரம்பு பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்வு செய்யப்படும் முறை:

இந்த பணியிடங்களுக்கு டிகிரி மற்றும் டிப்ளமோ படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முதலில் http://www.mhrdnats.gov.in/ என்ற அப்ரண்டிஸ் இணையதளப் பக்கத்தில் பதிவு செய்துக் கொள்ள வேண்டும்.

பின்னர், அதே இணையதளத்தில் “COMBAT VEHICLES RESEARCH AND DEVELOPMENT ESTABLISHMENT”என்பதை தேர்வு செய்து தேவையான பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதில் தமிழ்நாடு என்பதை மறக்காமல் தேர்வு செய்யவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி, ஊக்கத்தொகை விவரம், இருப்பிட வசதி விவரம், பயிற்சி காலம் நீட்டிக்கப்படுமா உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் குறித்து அறிய https://www.drdo.gov.in/drdo/sites/default/files/career-vacancy-documents/advtcvrdeApp28032024.pdf-என்ற லிங்கை கிளிக் செய்து அறிவிப்பின் விவரத்தை அறிந்து கொள்ளலாம்.

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூர் இளைஞர் நீதிக்குழுமத்தில் வேலைவாய்ப்பு... மாதம் ரூ.25 ஆயிரம் வரை சம்பளம்!
தஞ்சாவூர் இளைஞர் நீதிக்குழுமத்தில் வேலைவாய்ப்பு... மாதம் ரூ.25 ஆயிரம் வரை சம்பளம்!
JIPMER Job: ஜிப்மரில் செவிலியர் வேலை! B.Sc Nursing படித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு - சம்பளம் ரூ.20,000
JIPMER Job: ஜிப்மரில் செவிலியர் வேலை! B.Sc Nursing படித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு - சம்பளம் ரூ.20,000
அரசு அலுவலகங்களில் காலிப் பணியிடங்கள்... உடனடியாக நிரப்ப அமைச்சர் ராஜவேலு உத்தரவு!
அரசு அலுவலகங்களில் காலிப் பணியிடங்கள்... உடனடியாக நிரப்ப அமைச்சர் ராஜவேலு உத்தரவு!
High Court Recruitment 2026: 115 Data Entry Operator பணியிடங்கள் – விண்ணப்பிக்க செப்.29 கடைசி நாள்.
High Court Recruitment 2026: 115 Data Entry Operator பணியிடங்கள் – விண்ணப்பிக்க செப்.29 கடைசி நாள்.

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பெண்கள் குறித்து ஆபாச பேச்சு; பொறுக்க மாட்டேன் - திமுகவுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை
பெண்கள் குறித்து ஆபாச பேச்சு; பொறுக்க மாட்டேன் - திமுகவுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை
Aadhav Arjuna: ஜெம் வீரமணி வழக்கு: திமுக ஆட்சியில் முடிக்க ரூ.80 கோடி பரிமாற்றமா? ஆதவ் அர்ஜுனா கேள்வி!
ஜெம் வீரமணி வழக்கு: திமுக ஆட்சியில் முடிக்க ரூ.80 கோடி பரிமாற்றமா? ஆதவ் அர்ஜுனா கேள்வி!
CM Vijay: முதல்வராக நான் இங்கு வரவில்லை: என் தங்கச்சி மரகதம் குமரவேல்- சிஎம் விஜய் உருக்கம்!
CM Vijay: முதல்வராக நான் இங்கு வரவில்லை: என் தங்கச்சி மரகதம் குமரவேல்- சிஎம் விஜய் உருக்கம்!
Safety-யில் தெறிக்கவிடும் Monster.! 20 டன் பாறைகளை அசால்ட்டாக தாங்கி நின்ற Tata Aeris.! வீடியோ
Safety-யில் தெறிக்கவிடும் Monster.! 20 டன் பாறைகளை அசால்ட்டாக தாங்கி நின்ற Tata Aeris.! வீடியோ
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லையா? பொய்யான தகவல்களை பகிர வேண்டாம் - தாம்பரம் போலீசார்
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லையா? பொய்யான தகவல்களை பகிர வேண்டாம் - தாம்பரம் போலீசார்
வாய்கிழிய வசனம் பேசிய சிஎம் விஜய் எங்கே? பள்ளி மாணவி கடத்தி பாலியல் வன்கொடுமை - சீறிய உதயநிதி
வாய்கிழிய வசனம் பேசிய சிஎம் விஜய் எங்கே? பள்ளி மாணவி கடத்தி பாலியல் வன்கொடுமை - சீறிய உதயநிதி
Tata Aeris: வெறும் 5.29 லட்சத்தில் களமிறங்கிய டாடா ஏரிஸ், 6 ஏர்பேக்குகள்- டிசையருக்கு போட்டி? என்னென்ன அம்சங்கள்?
Tata Aeris: வெறும் 5.29 லட்சத்தில் களமிறங்கிய டாடா ஏரிஸ், 6 ஏர்பேக்குகள்- டிசையருக்கு போட்டி? என்னென்ன அம்சங்கள்?
சென்னைக்கு மீண்டும் வெள்ள அபாயம்! முடியாத மழைநீர் வடிகால் பணிகள்- அன்புமணி எச்சரிக்கை
சென்னைக்கு மீண்டும் வெள்ள அபாயம்! முடியாத மழைநீர் வடிகால் பணிகள்- அன்புமணி எச்சரிக்கை
Embed widget