IBPS PO Recruitment 2024: 4,455 பணியிடங்கள்; ஐபிபிஎஸ் அரசு வங்கி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு- விவரம்!
பொதுத் துறை வங்கிகளில் காலியாக உள்ள 4,455 அதிகாரிகள் பணியிடங்களுக்கு நடைபெறும் தேர்வுக்கு ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஐபிபிஎஸ் தெரிவித்துள்ளது.
தேசிய மயமாக்கப்பட்ட பொதுத் துறை வங்கிகளில் காலியாக உள்ள 4,455 அதிகாரிகள் (PO) பணியிடங்களுக்கு நடைபெறும் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை ஐபிபிஎஸ் எனப்படும் வங்கி பணியாளர் தேர்வு வாரியம் நீட்டித்துள்ளது. தகுதியுள்ளவர்கள் www.ibps.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
பணி பெயர்
புரொபேஷனரி அதிகாரிகள் (Probationary Officer)
மொத்த பணியிடங்கள் - 4,455
கல்வித் தகுதி
இதற்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
குறைந்தபட்சம் 55% முதல் 60 % வரை மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
எந்தெந்த வங்கிகள் கலந்துகொள்கின்றன?
இந்த வேலைவாய்ப்புக்கான தேர்வில் பேங்க் ஆஃப் பரோடா, பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் மஹாராஷ்டிரா, கனரா வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, இந்திய வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் நேசனல் வங்கி, பஞ்சாப் மற்றும் சிந் வங்கி, யு.சி,ஓ. வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகள் பங்கேற்கின்றன. இதற்கு தகுதியான நபர்கள் எழுத்துத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்ப கட்டணம்
இதற்கு பொதுப்பிரினருக்கு ரூ,850 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. தொகையுடன் சேர்த்து இந்தத் தொகை செலுத்தப்பட வேண்டும். பட்டியலின / பழங்குடியின பிரிவினர் / மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு ரூ.175 ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை
இதற்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர். முதல்நிலைத் தேர்வு கொள்குறி வகையில் 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். முதன்மைத் தேர்வு கொள்குறி வகையிலும் விவரித்து எழுதும் வகையிலும் 225 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.
தேர்வு எப்போது?
தேர்வுக்கு ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், 28 வரை விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
எப்படி விண்ணப்பிப்பது:
- முதலில் https://ibpsonline.ibps.in/crppo14jul24/- என்கிற அதிகாரப்பூர்வ இணைய தளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
- “Common Recruitment Process (CRP) for Recruitment of Probationary Officers / Management Trainees in Participating Banks (CRP PO/MT-XIV) ” என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
- விண்ணப்பிக்க விரும்பும் பணியை தேர்வு செய்யவும்.
- பிறகு விண்ணப்பப் படிவத்தில் தேவையான விவரங்களை நிரப்பவும். விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்திய பிறகு, விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
- விண்ணப்பப் படிவத்தின் நகலை PDF மற்றும் பிரிண்ட் அவுட் எடுத்து வைத்து கொள்ளவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.08.2024
முக்கிய நாட்கள்:
விண்ணப்ப கட்டணத்தை செலுத்த கடைசி தேதி | 28.08.2024 |
Pre Examination Training | செப்டம்பர் 2024 |
முதல்நிலை ஆன்லைன் எழுத்துத் தேர்வு | 19 அக்டோபர் 2024 / 20 அக்டோபர், 2024 |
முதன்மை தேர்வு தேதி | 30 நவம்பர் 2024 |
கூடுதல் தகவல்களுக்கு: https://www.ibps.in/wp-content/uploads/Detailed-Notification_CRP-PO-XIV_final-1.pdf