மேலும் அறிய

Monkeypox:அதிக நபர்களுடன் பாலுறவைத் தவிருங்கள்... உடலுறவின் மூலம் குரங்கம்மை பரவலாம்...மருத்துவர்கள் எச்சரிக்கை!

பாலியல் தொடர்புகளின் மூலம் குரங்கு அம்மை பரவுகிறது என்றும், குரங்கு அம்மை பாதிப்புக்குள்ளான நபருடன் நெருங்கிய தொடர்பு கொள்ளும்போது குரங்கு அம்மை பரவக்கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

கொரோனாவில் இருந்து இன்னும் உலகம் மீளாத நிலையில், அடுத்தபடியாக மங்கிபாக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இந்த தொற்று இல்லை எனக் கூறப்பட்டு வந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தில் உள்ள அவுரையா மாவட்டத்தில் ஒரு பெண்ணுக்கு இதன் அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் மக்களை மிகுந்த அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான வகையில் காய்ச்சல் மற்றும் குரங்கு அம்மை நோய்க்கான அறிகுறிகளால் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் இந்தப் பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் யாரும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் அல்ல என்ற தகவல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் தொடர்பு மூலம் பரவுகிறதா?

குரங்கு அம்மை நோய் பரவத்தொடங்கியது முதலே, பலர் பாலியல் நடத்தைகள் பற்றி பல சந்தேகங்கள் எழுப்பி வருகின்றனர். அறிகுறிகள் உள்ள ஒருவரை தொடுதல், வாய்வழி மற்றும் பிறப்புறுப்பு வழி உடலுறவு உட்பட எந்த வகையான நெருங்கிய தொடர்பு மூலமாகவும் இந்த வைரஸ் பரவலாம் எனக் கூறப்படுகிறது.

தடிப்புகள், சீழ், ரத்தம், சிரங்குகள் மற்றும் உமிழ்நீர் மூலம் வைரஸ் பரவுவதால் உடலில் புண்கள் அல்லது கொப்புளங்கள் தோன்றுவது இந்தத் தொற்று நோயின் அறிகுறியாக இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட நபர் பயன்படுத்திய ஆடைகள், படுக்கை, துண்டுகள் போன்றவற்றை தொடுவது, அவர்கள் சாப்பிட்ட தட்டில் சாப்பிடுவது போன்ற தொடர்புகள் மூலம் தொற்று பரவும் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. உடல் தொடர்பு மூலம் பரவுவதைக் கருத்தில் கொண்டு, உடலுறவு போன்ற பாலியல் ரீதியிலான தொடர்பு மூலமாகவும் குரங்கு அம்மை பரவுமா என்ற சந்தேகம் நீடித்து வருகிறது. 

Monkeypox:அதிக நபர்களுடன் பாலுறவைத் தவிருங்கள்... உடலுறவின் மூலம் குரங்கம்மை பரவலாம்...மருத்துவர்கள் எச்சரிக்கை!

அதிக பேருடன் உறவு கொள்வதை தவிர்க்கவேண்டும்

இந்நிலையில், சர் கங்கா ராம் மருத்துவமனையின் மூத்த ஆலோசகரான டாக்டர் டிரேன் குப்தா இதுகுறித்து பேசுகையில், “பாலியல் தொடர்புகளின் மூலம் குரங்கு அம்மை பரவுகிறது. குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பு கொள்ளும்போது குரங்கு அம்மை பரவக்கூடிய வாய்ப்பு உள்ளது. வாய் அல்லது பிறப்புறுப்பு வழியாக உறவுகொள்ளும் போது மட்டுமின்றி, உறுப்புகளை தொடுவதன் மூலமாகவும் குரங்கு அம்மை பரவக்கூடும்” என்று தெரிவித்துள்ளார்.

முத்தமிடுதல், கட்டிப் பிடித்தல், மசாஜ் செய்தல் மற்றும் நீண்டநேரம் முகத்திற்கு நேருக்கு நேராக நெருக்கமாக பார்ப்பது அல்லது பேசுவது ஆகியவையும் வைரஸ் பரவுவதற்கு வழியாகும் என்றும் எச்சரித்துள்ளனர்.

குரங்கு அம்மை நோய் அறிகுறி உள்ளவர்கள் பாலியல் ரீதியாக பலருடன் தொடர்பு கொள்வதை தவிர்க்க வேண்டும் என்றும், பாலியல் தொழிலாளர்கள் போன்றவர்கள் குரங்கு அம்மை அறிகுறிகள் தென்பட்டால் அவர்கள் பிறருடன் தொடர்பு கொள்வதை தவிர்ப்பதன் மூலமாக இது மேலும் பரவாமல் தடுக்கலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

விந்து, யோனி திரவங்கள் அல்லது பிற உடல் திரவங்களில் வைரஸ் இருக்க முடியுமா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அதற்கான ஆய்வுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்: Vijay Sethupathi : "என் வாழ்க்கையிலயும் ஒரு ஜானு இருந்தாங்க...." : ஃப்ளாஷ்பேக் சொல்லி உருகிய விஜய் சேதுபதி..

ஆணுறை உதவுமா?

குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய படுக்கை, துண்டுகள் மற்றும் செக்ஸ் டாய்ஸ் போன்ற கிருமி நீக்கம் செய்யப்படாத துணிகள் மற்றும் பொருட்களை உடலுறவின் போது ஒருவர் தொட்டால் நோய் தாக்க வாய்ப்புள்ளது. எனவே ஆணுறை பயன்படுத்துவது போன்ற தடுப்பு முறைகள் மூலம் எந்த பயனும் இல்லை என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

கொரோனாவைப் போலவே குரங்கு அம்மை அறிகுறிகள் உள்ள நபர்களிடம் மிகுந்த எச்சரிக்கையுடனும்  சுகாதாரத்துடனும் இருக்க வேண்டும், தொற்றில் இருந்து காத்துக்கொள்ள மாஸ்க் அணிய வேண்டும், கை கழுவுதல், சமூக விலகல் ஆகியவற்றைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும், மேலும் அறிகுறிகள் தென்பட்ட உடன் கூடிய விரைவில் மருத்துவரை அணுக வேண்டும், பொதுவாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டிய அனைத்தையும் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Monkeypox:அதிக நபர்களுடன் பாலுறவைத் தவிருங்கள்... உடலுறவின் மூலம் குரங்கம்மை பரவலாம்...மருத்துவர்கள் எச்சரிக்கை!

பாலியல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது

குரங்கு அம்மை உள்ள ஒருவருடன் எந்த வகையான நெருங்கிய உடல் ரீதியான உறவைக் கொண்டாலும், அவர்கள் யார், அவர்கள் என்ன செய்கிறார்கள், யாருடன் உடலுறவு கொள்ளத் தேர்வு செய்கிறார்கள் உள்ளிட்ட எதையும் பொருட்படுத்தாமல், தங்களை ஆபத்திற்குள்ளாக்கி கொள்கிறார்கள் என்று அர்த்தம்.

ஒரு நோயின் காரணமாக மக்களை விலக்கி வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என சுட்டிக்கட்டியுள்ள உலக சுகாதார நிறுவனம், நோய்த்தொற்றுக்கு ஆளானவர்கள் அல்லது உடல்நிலை சரியில்லாதவர்களை கவனித்துக் கொள்ள உதவுபவர்களை ஆதரிக்க வேண்டும் எனவும், தொற்று பரவலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி, குரங்கம்மை மூலம் வரும் தடிப்புகள் சில பாலியல் நோய்களான ஹெர்பெஸ் மற்றும் சிபிலிஸ் போல இருக்கும் என்று கூறியுள்ளது. ஆண் பெண் பாலியல் உறவு மட்டுமின்றி, எவ்வித பாலியல் உறவு மேற்கொண்டாலும் இது பரவும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"செந்தில்பாலாஜி என் வீட்டிற்கு வந்து, என் அம்மா கையில் சாப்பிட்டுள்ளார்": அண்ணாமலை பரபர பேட்டி.!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
DMK Vs ADMK: திமுக, அதிமுகவினரிடையே இடையே கடும் மோதல்... சேலம் மாநகராட்சியில் பரபரப்பு
DMK Vs ADMK: திமுக, அதிமுகவினரிடையே இடையே கடும் மோதல்... சேலம் மாநகராட்சியில் பரபரப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance | ’’அதிமுக தவெக கூட்டணி! நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்’’ பற்ற வைத்த அமீர் | AmeerAnnamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | Bussy

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"செந்தில்பாலாஜி என் வீட்டிற்கு வந்து, என் அம்மா கையில் சாப்பிட்டுள்ளார்": அண்ணாமலை பரபர பேட்டி.!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
DMK Vs ADMK: திமுக, அதிமுகவினரிடையே இடையே கடும் மோதல்... சேலம் மாநகராட்சியில் பரபரப்பு
DMK Vs ADMK: திமுக, அதிமுகவினரிடையே இடையே கடும் மோதல்... சேலம் மாநகராட்சியில் பரபரப்பு
No Detention Policy: பள்ளிகளில் ஆல் பாஸ் முறை ரத்து ஏன்?- புள்ளிவிவரங்களைப் புட்டுப்புட்டு வைத்த அண்ணாமலை
No Detention Policy: பள்ளிகளில் ஆல் பாஸ் முறை ரத்து ஏன்?- புள்ளிவிவரங்களைப் புட்டுப்புட்டு வைத்த அண்ணாமலை
திமுகவிற்கு ஆதரவு.. அன்புமணி அதிரடி அறிவிப்பு.. முதலமைச்சருக்கு செக்
திமுகவிற்கு ஆதரவு.. அன்புமணி அதிரடி அறிவிப்பு.. முதலமைச்சருக்கு செக்
PMK Protest: திமுக ஆட்சியில் 4 அமைச்சர்களை டம்மி பீஸ்ஸாக வைத்துள்ளனர் - எம்எல்ஏ கடும் விமர்சனம்
திமுக ஆட்சியில் 4 அமைச்சர்களை டம்மி பீஸ்ஸாக வைத்துள்ளனர் - எம்எல்ஏ கடும் விமர்சனம்
TN Rain: தமிழ்நாட்டில் மழை பெய்யுமா, பெய்யாதா? வானிலை மையம் சொல்வது என்ன.?
TN Rain: தமிழ்நாட்டில் மழை பெய்யுமா, பெய்யாதா? வானிலை மையம் சொல்வது என்ன.?
Embed widget