பயமுறுத்தும் நினைவுகளும்.. மறக்காத நம் மூளையும் - விஞ்ஞானிகள் கண்டுபிடித்த பலே விஷயம்!
நமது மனதில் மகிழ்ச்சி மற்றும் குதுகலமான நினைவுகளை விட, பயமுறுத்தும் மற்றும் அச்சுறுத்தும் நினைவுகள் மட்டும் மனதில் எப்போதும் தங்கி விடுகின்றன. இதற்கான காரணத்தினை விஞ்ஞானி கண்டுபிடித்துள்ளனர்
நமது மனதில் மகிழ்ச்சி மற்றும் குதுகலமான நினைவுகளை விட, பயமுறுத்தும் மற்றும் அச்சுறுத்தும் நினைவுகள் மட்டும் மனதில் எப்போதும் தங்கி விடுகின்றன. இதற்கான காரணத்தினை விஞ்ஞானி கண்டுபிடித்துள்ளனர்.
மரண பயத்தினை எதிர்கொண்ட பிறகு அதனை எப்படி மறக்க முடியும்? அதற்கான காரணம் அந்த மரண பயத்தினைதவிர வேறு என்ன இருக்க முடியும் என நம்மில் பலர் கூறலாம். ஆனால் அந்த நினைவுகள் மட்டும் நம் மனதிலிருந்து நீங்காமல் அப்படியே நினைவில் பதிந்துவிடுவதற்கான அறிவியல் காரணத்தினை விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடுத்துள்ளனர்.
டுலானி யுனிவர்சிட்டி ஆஃப் ஸ்கூல் அண்ட் சயின்ஸ் மற்றும் டுஃப்ட்ஸ் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசன் (Tulane University School of Science and Engineering and Tufts University School of Medicine) ஆகிய பல்கலைகழங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், மனதில் பயம் மற்றும் அச்சுறுத்தல் நினைவுகள் மட்டும் மகிழ்ச்சியைக் காட்டிலும் மனதில் தங்கிவிடுகின்றன என்பதற்கான காரணத்தினை அறிவதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். ஆராய்ச்சியின் முடிவில் பயம் மற்றும் அச்சுறுத்தல் போன்ற நினைவுகள் மட்டும் எப்படி மகிழ்ச்சி மற்றும் குதூகலம் போன்ற நினைவுகளைக் காட்டிலும் நீண்ட நாள் மனதில் தங்கிவிடுகின்றது என்பதற்கான காரணத்தினை கண்டறிந்தனர்.
முதலில் மூளையில் எப்படி பயம் உருவாகிறது என்பதை அவர்கள் கண்டறிந்தனர். அதன் பின் அது எப்படி நினைவில் தொடர்ந்து தங்குகிறது என்ற ஆய்வினை செய்தனர். அதாவது பயத்தினை ஏற்படுத்தும் சூழலை நாம் எதிர்கொள்ளும்போது நமது மூளையில் உள்ள நரம்புகளில் , நேர்பைன்ப்ரைன், அமிக்டாலா போன்ற அமிலங்களைச் சுரக்க வைக்கிறது. இந்த அமிலங்கள் ஒரு குறிப்பிட்ட அளவில் சுரந்த பின்னர் அவை வெடிக்கிறது. இவை வெடிக்கும்போது சிறிய அளவிலான மின் அலைகள் நரம்பில் பாய்கிறது. இவ்வாறு மின் அலைகள் பாயும்போது பயம் மற்றும் பயம் சார்ந்த உணர்வுகள் மனதில் அப்படியே தங்கிவிடுவதாக கூறுகிறார், துலேன பல்கலைகழகத்தின் செல் மற்றும் மூலக்கூறு உயிரியல் துறையின் பேராசிரியர் ஜெஃப்ரி டாஸ்கர்.
இப்படியான அறிவியல் காரணங்களால் நமது மனதில் பயம் மற்றும் அதிர்ச்சி சார்ந்த உணர்வுகள் நினைவுகளாக தங்கி விடுகின்றன. அப்படி தங்கும் நினைவுகள் நமது மனதில் திரும்ப திரும்ப தோன்றும் போது எல்லாம் பயம் மற்றும் அதிர்ச்சி உணர்வினை நினைவு படுத்தும்போதும் உணரமுடிகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )