Salt Tips: ஒரு மாதம் உப்பு சாப்பிடுவதை நிறுத்தினால் என்ன நடக்கும்..! உடலுக்கு நல்லதா? கெட்டதா?
Salt Tips: ஒரு மாத காலத்திற்கு உணவில் உப்பு சேர்த்துக்கொள்வதை நிறுத்தினால் என்ன நடக்கும் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
Salt Tips: ஒரு மாத காலத்திற்கு உணவில் உப்பு சேர்த்துக்கொள்வதை நிறுத்தினால், உடலுக்கு நல்லதா? கெட்டதா? என்பது கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
உப்பை தவிர்க்கலாமா?
இன்றைய வாழ்க்கை முறையில் நாம் உணவில் அதிகமாக உப்பை அடிக்கடி பயன்படுத்துகிறோம். ஆனால் ஒரு மாதத்திற்கு உப்பை முழுவதுமாக கைவிட முடியுமா என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? பலர் தங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த உப்பு எடுத்துக் கொள்வதை குறைக்க அல்லது அதை முற்றிலுமாக நிறுத்த முயற்சிக்கிறார்கள். ஆனால் அது பலனளிக்குமா என்பதை விரிவாக பார்க்கலாம்.
உடலுக்கு உப்பு அவசியம்:
உப்பு மந்த உடலுக்கு மிகவும் இன்றியமையாதது. இது சோடியம் மற்றும் குளோரைட்டின் முக்கிய ஆதாரமாகும். இது உடலில் உள்ள செல்களின் சரியான செயல்பாட்டிற்கு உதவுகின்றன. சோடியம் ரத்த அழுத்தம், தசை சுருக்கம் மற்றும் நரம்பு சமிக்ஞைகளின் பரிமாற்றத்தை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இருப்பினும், அதிக உப்பை உட்கொள்வது உயர் ரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
ஒரு நாளைக்கு எவ்வளவு உப்பு சாப்பிட வேண்டும்?
ஒரு நபர் நாள் ஒன்றிற்கு சராசரியாக சுமார் 5 கிராம் சோடியத்தை உட்கொள்ள வேண்டும் என்று பெரும்பாலான சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இது ஒரு டீஸ்பூன் உப்புக்கு சமம், ஆனால் பெரும்பாலான மக்கள் அதை விட அதிகமாக உட்கொள்கின்றனர் என்பதே உண்மை. இது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
உப்பை தவிர்த்தால் என்ன நடக்கும்?
ஒரு நபர் ஒரு மாதத்திற்கு உப்பை உட்கொள்வதை முற்றிலுமாக நிறுத்தினால், அவர் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். முதலாவதாக, உடலில் சோடியம் குறைபாடு ஏற்படலாம், இது ஹைபோநெட்ரீமியாவுக்கு (குறைந்த சோடியம்) வழிவகுக்கும். இது தசை பலவீனம், சோர்வு, தலைவலி மற்றும் குழப்பம் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
கூடுதலாக, உடலில் அத்தியாவசிய எலக்ட்ரோலைட்டுகள் இல்லாமல் போகலாம். இது தசைப்பிடிப்பு மற்றும் இதய துடிப்பு அசாதாரணங்களுக்கு வழிவகுக்கும். நீடித்த உப்பு பற்றாக்குறை ஹார்மோன் சமநிலையையும் பாதிக்கலாம். அதன் மூலம் தைராய்டு மற்றும் அட்ரீனல் சுரப்பியின் செயலிழப்பை ஏற்படுத்தும்.
மொத்தத்தில், உப்பு உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துவது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும், ஆனால் அதை முற்றிலுமாக தவிர்ப்பது உடல் நலப்பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். உப்பின் அளவைக் குறைக்க விரும்பினால், படிப்படியாகக் குறைப்பது நல்லது. உங்கள் உணவில் சமநிலையைப் பேணுவது நல்லது மற்றும் உப்பு குறைபாட்டால் உங்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் மருத்துவ ஆலோசனையைப் பெற மறக்காதீர்கள். எனவே உப்பு இல்லாத வாழ்க்கையை வாழ முடிவு செய்வதற்கு முன் அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொள்வது அவசியம்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )