Lube : உடலுறவின்போது லூப்ரிகன்ட்டாக மாறும் பொருள்கள்.. இதையெல்லாம் பயன்படுத்தக்கூடாது..
வீட்டுப் பொருள்களைப் பாலியல் உறவின் போது லூப்ரிகன்ட்களாகப் பயன்படுத்தும் வழக்கம் அதிகமாகி வருகிறது. அதற்கு தகுதியற்ற பொருள்களாக வீடுகளில் எளிதில் கிடைப்பவற்றின் பட்டியலை இங்கே குறிப்பிட்டுள்ளோம்.
வீட்டில் கிடைக்கும் பொருள்களைப் பாலியல் உறவின்போது லூப்ரிகன்ட்களாகப் பயன்படுத்தும் வழக்கம் அதிகமாகி வருகிறது. உலகம் முழுவதும் பாலியல் உறவின் போது வெவ்வேறு வினோதமான பொருள்களை லூப்ரிகன்ட்களாகப் பயன்படுத்தி, புதிய புதிய பிரச்னைகளோடு மருத்துவர்களைச் சந்திப்பவர்கள் பலராக இருக்கின்றனர். எனவே லூப்ரிகன்ட்களாக பயன்படுத்த தகுதியற்ற பொருள்களாக வீடுகளில் எளிதில் கிடைப்பவற்றின் பட்டியலை இங்கே குறிப்பிட்டுள்ளோம்.
வேஸ்லின்
பெட்ரோலியம் ஜெல்லி என்று அழைக்கப்படும் வேஸ்லின் பெரும்பாலானோருக்குப் பாலியல் உறவின் போது உடனே பயன்படுத்து லூப்ரிகன்ட்டாக இருக்கிறது. இதனைப் பயன்படுத்துவது தவறு எனப் பாலியல் மருத்துவர்கள் கூறுகின்றனர். அவை பெட்ரோல் பொருள்களால் செய்யப்படுபவை என்றும், உடலின் தோல் அதனை உறிஞ்ச முடியாது என்பதால், அது தோலில் உள்ள துளைகளை அடைப்பதாலும் வேஸ்லினை லூப்ரிகன்டாகப் பயன்படுத்தக் கூடாது. மேலும், இதனைப் பயன்படுத்தும் பெண்களுக்கு பெண்ணுறுப்பில் பாக்டீரியா தொற்று ஏற்படும் வாய்ப்புகளும் அதிகளவில் உள்ளது.
பேபி ஆயில்
பல்வேறு தம்பதிகள் உடனே பாலியல் உறவு கொள்வதற்காக லூப்ரிகன்ட்களாக பேபி ஆயில் பயன்படுத்துகின்றனர். அதுவும் தவறானது.
ஷேவிங் க்ரீம்
ஷேவிங் க்ரீம் பல்வேறு ஆபத்தான கெமிக்கல்களால் செய்யப்பட்டது. எனவே அவை எரிச்சலையும், சிவந்து போவதையும் ஏற்படுத்தலாம். எனவே லூப்ரிகன்ட்டாக ஷேவிங் க்ரீமைப் பயன்படுத்துவது மிக மோசமான தேர்வு ஆகும். தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவது இந்தப் பொருள்கள் அனைத்தையும் விட சிறந்தது.
டூத் பேஸ்ட்
ஷேவிங் க்ரீம் போலவே டூத் பேஸ்டும் அபாயமானது. இதனைப் பயன்படுத்துவது மிகவும் தவறானதும், சுகாதாரக் கேடானதும் ஆகும்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )