கர்ப்பக் காலத்தில் அதிகரிக்கும் உடல் எடை! மருத்துவர்கள் சொல்வது இதுதான்!!
”கர்ப்பக் காலத்தில் இருவருக்கு சாப்பிட வேண்டும் என்பார்கள் . இருவருக்காக சாப்பிட வேண்டாம் ஒருவருக்காக நன்றாகச் சாப்பிட வேண்டும்”
![கர்ப்பக் காலத்தில் அதிகரிக்கும் உடல் எடை! மருத்துவர்கள் சொல்வது இதுதான்!! Weight gain during pregnancy: Nutritionist explains கர்ப்பக் காலத்தில் அதிகரிக்கும் உடல் எடை! மருத்துவர்கள் சொல்வது இதுதான்!!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/12/7149cb01cf39e124480e1f0690758963_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கர்ப்பக் காலம் :
கர்ப்பக் காலம் என்பது ஒவ்வொரு பெண்களின் வாழ்க்கையிலும் ஒரு முக்கியமான தருணம். பெண்கள் உடல் அளவிலும் மனதளவிலும் மிகப்பெரிய மாற்றங்களை சந்திக்கின்றன. குழந்தை உருவாக துவங்கும் காலம் முதல் ஹார்மோன் மாற்றங்கள் , உடல் எடையில் மாற்றங்கள் என பல்வேறு மாற்றங்கள் நிகழும்.இந்த நேரத்தில் அவர்களுக்கு கூடுதல் கவனிப்பும் அன்பும் தேவை.இந்த நேரத்தில் ஊட்டச்சத்தும் மிகவும் முக்கியமானது .
உடல் எடை :
குழந்தையின் எடை நஞ்சுக்கொடிக்கு இரத்த விநியோகம் மற்றும் கருப்பை வளர்ச்சி போன்ற பல்வேறு காரணிகளால் கர்ப்பிணிகளுக்கு உடல் எடை அதிகரிக்கிறது. ஆனாலும் இது பெண்களுக்கு பெண்கள் மாறுபடும். ஊட்டச்சத்து நிபுணரான அஞ்சலி முகர்ஜி, கர்ப்ப காலத்தில் உடல் எடை அதிகரிப்பு குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் அது தற்போது அதிக கவனம் பெறுவதாக உள்ளது.
View this post on Instagram
நிபுணர் கூறியதாவது:
“முதல் மூன்று மாதங்களில் கர்ப்பமாக இருக்கும் தாயின் எடை அதிகரிப்பு பொதுவாக 1.5 கிலோகிராமாக இருக்கும். இரண்டாவது மூன்று மாதங்களில், எடை அதிகரிப்பு ஒவ்வொரு மாதமும் 1.5 கிலோகிராம் அதிகரிக்கிறது. மூன்றாவது மூன்று மாதங்களில், பெண்ணின் உடல் மாதத்திற்கு 1.5-2 கிலோகிராம் எடை அதிகரிப்பை அனுபவிக்கிறது.மொத்தத்தில், கர்ப்ப காலம் முழுவதும் எடை அதிகரிப்பு 12-14 கிலோகிராம் வரை மாறுபடும்.ஒவ்வொரு கர்ப்பமும் தனித்தன்மை வாய்ந்தது. போதிய ஓய்வு, ஊட்டச்சத்து சப்ளிமெண்ட்ஸ, தீங்கு விளைவிக்கும் பொருட்களைத் தவிர்ப்பது மற்றும் நேர்மறை மனப்பான்மை ஆகியவற்றால் கர்ப்பத்தை எளிதாக அணுகலாம்.
என்னதான் உணவு மற்றும் உடற்பயிற்சியில் கவனமாக இருந்தாலும் , குழந்தையின் வளர்ச்சி முற்றிலும் நேர்மறை எண்ணங்களுடன் தொடர்புடையது."கர்ப்ப காலத்தில் பெரியவர்கள் இருவருக்கு சாப்பிட வேண்டும் என்பார்கள் . இருவருக்காக சாப்பிட வேண்டாம் ஒருவருக்காக நன்றாகச் சாப்பிட வேண்டும் என்பதே எனது அறிவுரை. இருப்பினும், திடீர் எடை அதிகரிப்பு அல்லது எடை இழப்பு கர்ப்பிணிப் பெண்களுக்கு கவலையை ஏற்படுத்தும். இதுபோன்ற சமயங்களில், விரைவில் மகளிர் மருத்துவ நிபுணரை அணுக வேண்டும் “ என அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)