Typhoid Fever : அதிகரிக்கும் டைபாய்டு காய்ச்சல் பாதிப்பு... எச்சரிக்கும் மருத்துவர்கள்... முழு விவரம்!
தமிழகத்தில் டைபாய்டு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
டைபாய்டு காய்ச்சல்
கடந்த சில நாட்களாக சென்னையில் டைபாட்டு காய்ச்சலால் பாதிக்கப்படும் பள்ளி குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். காய்ச்சலுடன் மருத்துவமனைகளை நாடும் குழந்தைகளில் 30 சதவீதம் பேருக்கு டைபாய்டு பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்படுவதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
சால்மோனெல்லா டைஃபி எப்படும் பாக்டீரியா கிருமி உடலில் பரவும்போது டைபாய்டு பாதிப்பு ஏற்படுகிறது. தரமற்ற நீர், சுகாதாரமற்ற உணவு மூலம் இந்நோய் பரவுகிறது. குடல் பகுதியில் பாதிப்பை இந்த வகை பாக்கரியாக்கள் ஏற்படுத்தும் என்றாலும் நாளடைவில், அதன் தீவிரத்தைப் பொருத்து கல்வீரல், இரைப்பை, பித்தப்பை, சிறுநீரகம் கடுமையான சேதத்தை அந்நோய் ஏற்படுத்தும்.
தமிழகத்தைப் பொருத்தவரை மே மற்றும் ஜூன் மாதங்களில் டைபாய்டு பாதிப்பு அதிகமான இருக்கும். அதன் பின்னர் செப்டம்பரில் அதன் தாக்கம் குறைந்து டெங்கு போன்ற பிற வகையான காய்ச்சல் பரவும். ஆனால், நிகழாண்டில் ஜனவரி இறுதியிலிருந்தே டைபாய்டு காய்ச்சல் அதிகரித்த வண்ணம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறியதாவது, ”கடந்த சில மாதங்களாக வைரஸ் காய்ச்சல் தாக்கம் குழந்தைகளிடையே அதிகமாக உள்ளது. சில வாரங்களாக அதனுடன் டைபாய்டு பாதிப்பும் இருக்கிறது. காய்ச்சலுடன் வரும் 10இல் 3 குழந்தைகளுக்கு டைபாய்டு காய்ச்சல் அல்லது அதனுடன் தொடர்புடைய காய்ச்சல் இருக்கிறது.
தடுப்பூசி
டைபாய்டு தடுப்பூசிகளை முறையாக செலுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு முன்பு வரை, பிறந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகே டைபாய்டு தடுப்பூசிகள் செலுப்பட்டு வந்தன. ஆனால் தற்போது அவை 6 மாதங்களிலேயே வழங்கப்படுகின்றன. இதுவரை தடுப்பூசி செலுத்தாவிடிலும், குழந்தைகள், வளரிளம் பருவத்தினர் சிறப்பு தவணையாக அதனை செலுத்த வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
டைபாய்டு அறிகுறிகள்
உடல் சோர்வு, கடுமையான காய்ச்சல் பசியின்மை , வயிற்றுப்போக்கு, தலைவலி, வாந்தி மயக்கம், தொண்டை வலி, உடலில் தடிப்புகள், வயிற்று உபாதைகள் போன்றவைகள் இருந்தால் உடனே மருத்துவர்களை அணுக வேண்டும்.
காரணங்கள்
சுகாதாரமற்ற உணவு, பாதுகாப்பற்ற குடிநீர், தாரமற்ற வாழ்க்கை சூழல், கைகளை சுத்தமாக பாரமரிக்காமை, பாதிக்கப்பட்டவர்களின் கழிவுகளைத் தொடுதல் போன்ற காரணங்களால் டைபாய்டு காய்ச்சல் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
2 கோடி நபர்களுக்கு டைபாய்டு பாதிப்பு
உலக சுகாதார மையத்தின் கணக்குப்படி, ஒவ்வொரு ஆண்டும் 1 முதல் 2 கோடி நபர்களுக்கு டைபாய்டு காய்ச்சல் ஏற்படுகிறது. அதில் 1.2 முதல் 1.6 லட்சம் நபர்கள் வரை இறந்து போவதாக தரவுகள் வெளியாகி உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை, டைபாய்டு காய்ச்சல் பாதிக்கக்கூடிய நபர்கள் பற்றிய தரவில் லட்சத்தில் 360 நபர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது. எனவே இந்த டைபாய்டு காய்ச்சலில் இருந்து நம்மை பாதுகாப்பு கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
Indigestion : செரிமான பிரச்சனை தொடர்ந்து தொல்லை கொடுக்குதா? ஓமத்தை எப்படி பயன்படுத்தலாம்?
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )