நுரையீரலுக்கு மட்டுமல்ல; கண்களுக்கும் ஆபத்துதான்.. புகைப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்!
புற்றுநோய் மற்றும் இதய நோய்கள் போன்ற தொற்றாத நோய்களுக்கு புகைபிடித்தல் 4வது முக்கிய காரணமாகும்
இந்தியாவில் 34.6 சதவீதம் பேர் புகைப்பிடிப்பவர்கள் என்றும், புகைபிடிப்பதால் ஆண்டுதோறும் 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இறப்பதாகவும் மதிப்பீடுகள் கூறுகின்றனர்..
புற்றுநோய் மற்றும் இதய நோய்கள் போன்ற நோய்களுக்கு புகைபிடித்தல் 4வது முக்கிய காரணமாகும். இதனால் இந்தியாவில் 53 சதவீத இறப்புகள் நிகழ்வதாக கூறுகிறது மருத்துவ உலகம். புகைபிடிப்பதால் ஏற்படும் விளைவுகள் (புற்றுநோய், சுவாச நோய்கள், இருதய நோய்கள் போன்றவை) பற்றி பலர் அறிந்திருந்தாலும், புகைபிடித்தல் கண்களையும் பாதிக்கும் என்பது பலரும் அறியாதது. புகைப்பிடிப்பதால் கண்களும் பாதிக்கப்படும் என்கிறது மருத்துவ உலகம்.
சிகரெட் புகையில் உள்ள நச்சுகள் உடல் முழுவதும் பரவி இரத்த ஓட்டத்தில் சேர்கிறது. இது கண்களுக்கும் பொருந்தும்.
இதனால் கண்களின் வறட்சி அடைவது, கண்புரை, டயாபடிக் ரெட்டினோபதி (diabetic retinopathy) பார்வை நரம்பு பிரச்சினைகள் போன்ற பல்வேறு வகையான கண் பிரச்சினைகளை ஏற்படும். இதை சரியான நேரத்தில், கவனிக்காவிட்டால் நிரந்த பார்வை இழப்பிற்கு வழிவகுக்கும். கூடுதலாக, புகையிலையில் இருந்து வெளியாகும் புகை, கண்களைச் சுற்றியுள்ள திசுக்களை பாதிக்கும். இதனால் கண் இமைகள் மற்றும் கண்களுக்குக் கீழ் வீக்கத்தை ஏற்படுத்தும் என்கின்றன நிபுணர்கள்.
புகைபிடிப்பதால் ஏற்படும் கண் பிரச்சனைகள்:
புகையிலையினால் வெளிபடும் புகையில் 7,000 க்கும் மேற்பட்ட ஆபத்தான இரசாயனங்கள் உள்ளன. அவற்றில் சில கண் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கக் கூடியவை.
கண்களில் வறட்சி ஏற்படுவது:
கண்களின் மேற்பரப்பை பாதுகாக்க கண்களில் எப்போதும் ஈரப்பதமுடன் இருக்க வேண்டும். ஆனால், புகைப்பிடிப்பதால் கண்களில் போதிய அளவு நீர் உற்பத்தி ஆவது தடைப்படுகிறது.
இதன் அறிகுறிகள் பொதுவாக கண் சிவத்தல், கண்களில் அசெளகரியம், வலி ஏற்படுதல் ஆகியவை அடங்கும்.
Age Related Macular Degeneration (AMD) :
சின்ன எழுத்துக்கள் மற்றும் சிறிய அளவில் இருக்கக் கூடியவற்றை பார்ப்பதையும் படிப்பதையும் கடினமாக்குகிறது. காலப்போக்கில், பார்வை இழப்பு கணிசமாக அதிகரிக்கிறது. இதில் வகை உண்டு. dry Age Related Macular Degeneration இல் கொழுப்பு விழித்திரையில் பின்புறத்தில் தங்க தொடங்கிவிடும். இதானல், கண்களில் உள்ள ஒளியை சென்ஸ் செய்யக்கூடிய தன்மை பாதிப்படைகிறது.
wet Age Related Macular Degeneration இல் விழித்திரையில் உள்ள இரத்த நாளங்கள் உடைந்து விடுகிறது. இதனால் கண்களில் புரை ஏற்படுகிறது.
கண்புரை:
புகைபிடித்தல் எந்த வயதிலும் கண்புரை அபாயத்தை அதிகரிக்கிறது. வயதாவதன் காரணமாக சிலருக்கு கண் புரை ஏற்படும். ஆனால், புகைப்பிடிப்பதால் கண்களின் புரை ஏற்பட அதிக பாதிப்பு இருக்கிறது. இதை அறுவைச் சிகிச்சை மூலம் சரி செய்யலாம்.
Glaucoma:
க்ளௌகோமா என்பது கண்ணுக்குள் அழுத்தம் அதிகரிப்பதால் ஏற்படும் கண் நோய்களின் குழு. அதிகரித்த அழுத்தத்தினால், மூளைக்கும் கண்களுக்கும் இடையே உள்ள ஒரே இணைப்பான பார்வை நரம்பை சேதப்படுத்துகிறது. 2018 இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், வழக்கமாக புகைப்பிடிப்பவர்கள் எவ்வளவு அதிகமாக சிகரெட் பிடிப்பார்களோ, அந்த அளவுக்கு கிளௌகோமா வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கண்டறியப்பட்டது.
புகைப்பிடிப்பவர்கள் தங்கள் கண்களை சேதத்திலிருந்து பாதுகாக்க சில வழிகளை கடைப்பிடிக்கலாம்.
கண்களைப் பாதுகாக்க என்ன செய்யலாம்?
புகைபிடிப்பதை நிறுத்தவும் அல்லது குறைக்கவும்:
புகைபிடிப்பதை விட்டுவிடுவது நல்லது. இல்லையெனில், புகைப்பிடித்தலை குறைத்துக் கொள்வது பரிந்துரைக்கப்படுகிறது. இது புகைபிடிப்பவர் மட்டுமல்ல, அவரைச் சுற்றியுள்ளவர்களும் தங்கள் கண்களை சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
ஆரோக்கியமான உணவு:
கண்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் உணவு பழக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் சி, ஈ, துத்தநாகம், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் போன்றவை நிறைந்த உணவு, கண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைக்க உதவும்.
ஸ்க்ரீன் டைம்:
லேப்டாப், ஸ்மார்ட் வாட்ச், ஸ்கிரீன் டைம் டிவி, ஸ்மார்ட்போன், கம்யூட்டர் போன்றவைகளின் திரைகள் நீல ஒளியை வெளியிடுகின்றன. இது கண்களுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். 20-20-20 என்ற ஃபார்முலாவை பயன்படுத்துவது நல்லது. அதாவது அதிக நேரம் எலக்ட்ராணிக் கேஜட்களைப் பயன்படுத்துபவர்கள். 20 நிமிடங்கள் கணினியைப் பார்த்துவிட்டு, 20 அடி தூரத்தில் உள்ள பொருட்களை, 20 நொடிகள் பாருங்கள்.வழக்கமான கண் பரிசோதனைகள் மேற்கொள்வதை கடைப்பிடியுங்கள்.
கண்கள் ஆரோக்கியமுடன் இருக்க புகைப்பிடிப்பதை கைவிடுங்கள். மருத்துவரை அணுகி அறிவுரை பெற்று புகைப்பிடிப்பதை கைவிட முயற்சி செய்யுங்கள்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )