ஜிம் போகப் போகிறீர்களா? இப்படி டயட் ப்ளான் பண்ணுங்க...
வேலையையும், வீடையும் சமநிலையோடு அணுக முடியாமல் தவிக்கும் சூழலில் பலருக்கும் வாக்கிங், ஜாகிங் எல்லாம் மறந்தே போய்விடுகிறது.
வேலையையும், வீடையும் சமநிலையோடு அணுக முடியாமல் தவிக்கும் சூழலில் பலருக்கும் வாக்கிங், ஜாகிங் எல்லாம் மறந்தே போய்விடுகிறது. விளைவு எக்குத்தப்பாக உடல் எடை அதிகரிக்க அதன் பக்கவாட்டு விளைவாக பல்வேறு லைஃப்ஸ்டைல் டிசீஸ் தொற்றிக் கொள்கிறது. அப்புறம் டாக்டரிடம் ஓடினால் ஒரு வாரத்தில் இத்தனை மணி நேரம் ஒர்க் பண்ணவும் என்று எழுதிக் கொடுத்து அனுப்பிவிடுகிறார். இப்படித்தான் ஜிம்முக்கு செல்லும் கூட்டமும் அதிகரித்து வருகிறது.
ஜிம் செல்வது என்று திட்டம் போட்டிருந்தீர்கள் என்றால் அதற்கு ஏற்றாற் போல் டயட் திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்:
உடற்பயிற்சிக்காக ஜிம் செல்கிறீர்கள் என்றால் உங்கள் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நீர்ச்சத்து இருந்தால் தான் உடல் எடை சீராக இருக்கும். அன்றாடம் 8 முதல் 10 க்ளாஸ் தண்ணீர் அருந்துங்கள்.
புரதச்சத்து அவசியம்:
உணவில் புரத சத்து நிறைந்திருப்பது முக்கியமான ஒன்றாகும். நம் உடலில் ஒவ்வொரு செல்லும், திசுக்களும், சதையும், ரத்தமும் புரதத்தினால் ஆனது. உங்கள் ஹார்மோன், என்சைம், நோய் எதிர்ப்பு செல்களும் உருவாக அடிப்படை தேவை புரதமே. புரத சத்து சரியான அளவு இருந்தால் மட்டுமே நம்மால் இயங்க முடியும்.
ஆனால் சமீப காலமாக ஜிம், ஒர்க் அவுட், ப்ரோட்டீன் ட்ரிங் என்பதெல்லாம் ரொம்பவே பிரபலமாகிவிட்டது. அதிகமான அளவில் புரதத்தை உட்கொண்டால் அது பல்வேறு உபாதைகளுக்கும் வழிவகுக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எனவே உணவிலேயே புரதச் சத்தைப் பெற முற்படுங்கள். அதுவும் அளவு மிகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
கார்போஹைட்ரேட் உணவை முற்றிலுமாக தவிர்க்காத்தீர்கள்
அதிகாரப்பூர்வ ஆராய்ச்சிகளின்படி, கார்போஹைட்ரேட் குறைவான உணவுமுறை என்பது, தினசரி அளவில் 130 கிராமுக்கும் குறைவான அளவில் கார்போஹைட்ரேட் உணவுகளை எடுத்துக்கொள்வதாகும். ஆனால் பலரும் ஜிம் செல்ல ஆரம்பித்தால் கார்போஹைட்ரேட் உணவை முற்றிலுமாக தவிர்த்து விடுகின்றனர்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்கவும்:
பதப்படுத்திய உணவுகள்' என்பவை அதிக காலம் கெடாமல் இருக்க அல்லது அதிக சுவை தருவதற்காக மாற்றம் செய்யப்பட்டவை. பொதுவாக உப்பு, எண்ணெய், சர்க்கரை அல்லது நொதித்தல் முறையை பயன்படுத்தியிருப்பார்கள். ``அல்ட்ரா பதப்படுத்திய உணவுகள்'' தொழிற்சாலைகளில் அதிக பதப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவை. இவற்றில் அடங்கியுள்ள பொருட்கள் என அவற்றின் பாக்கெட் மீது பெரிய பட்டியல் இருக்கும். கூடுதலாக சேர்க்கப்பட்ட பதப்படுத்தல் பொருட்கள், இனிப்பூட்டிகள் அல்லது நிறமேற்றிகள் என அதில் இருக்கும். இவற்றை அதிகமாக உட்கொண்டால் உடலுக்கு பல்வேறு உபாதைகள் வரும்.
உங்கள் உடல் சொல்வதைக் கேளுங்கள்:
எத்தனை டயட் சார்ட் தயார் செய்தாலும் கூட உணவு ஒவ்வொருவரின் உடல் வாகைப் பொறுத்து தேவைப்படும். அதனால் உங்கள் உடல் சொல்வதைக் கேளுங்கள். உங்கள் உடல் ஒரு உணவை ஏற்றுக் கொள்ளாவிட்டால் அதைத் தவிர்த்துவிடுங்கள். பசித்தால் மட்டுமே உண்ணுங்கள்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )