Knee and Joint Pain: வயதானால் மட்டுந்தான் மூட்டுகளில் வலி ஏற்படுமா?
என்னென்ன காரணங்களால் முழங்கால் வலி மற்றும் மூட்டுகளில் வலி வருகிறது எனத் தெரிந்து கொள்வோம்.
வயதானால் மட்டுமே மூட்டுகளில் வலி வரும் என நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். 30 வயதில் மூட்டுகளில் வலி வந்தாலும், ஏதோ வயதாகி விட்டு போன்று தோன்ற ஆரம்பிக்கும். இது முற்றிலும் தவறு. வயதான அனைவருக்கும் மூட்டுகளில் வலி வரவேண்டிய அவசியம் இல்லை. சரியான வாழ்வியல் முறையை பின்பற்றினால், எந்த விதமான நோய்களும் எதிர்காலத்தில் வராது. சமீபத்தில் நடந்த ஆராய்ச்சியின் முடிவில், வாழ்வியல் முறை பழக்க வழக்கங்களினாலும், மூட்டுகளில் வலி ஏற்படுவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
என்னென்ன பழக்க வழக்கங்களினால் முழங்கால்வலி , மூட்டுகளில் வலி உண்டாகிறது?
புகை பிடித்தல் - புகையில் இருக்கும் நிக்கோட்டின் எனும் கெமிக்கல் ஆனது, நுரையீரல் பாதிப்பை ஏற்படுத்துவதோடு நின்றுவிடுவதில்லை. இது எலும்புகளையும் பாதிக்கிறது. எலும்பு திசுக்களில் இருக்கும் செல்களின் வளர்ச்சியை பாதிக்கிறது. இதனால் எலும்புகளின் அடர்வுதனமை குறைகிறது. இதனால் சத்துகள் குறைந்து விரைவில் வலுவிழந்து விடுகிறது. இதனால் முழங்கால் மற்றும் மூட்டுகளில் வலி உண்டாகிறது.
உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது. - எந்த உடல் பயிற்சியும் இல்லாமல் நீண்ட நேரம் ஒரே இடத்தில் இருப்பது எலும்புகளை வலுவிழக்க செய்கிறது. குறைந்தது தினம் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்வது, எலும்புகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.
மது அருந்துதல் - மது அருந்துவதால், உடலில் கார்டிசோல் எனும் ஹார்மோன்கள் உற்பத்தி அதிகமாகும். இதனால் எலும்புகள் வலுவிழக்கும். டெஸ்டோஸ்டெரோன், மற்றும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பை குறைத்து விடும். இவை இரண்டும் எலும்புகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். இது குறைந்து விடுவதால், எலும்புகள் வலுவிழக்க ஆரம்பிக்கும் .
நாள் முழுவதும் வீட்டிற்குள் அடைந்து கிடப்பது: - எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமானது வைட்டமின் டி ஆகும். இந்த வைட்டமின் டி சத்து வெயிலில் இருந்து உடலுக்கு கிடைக்கும். ஆனால் வெயில் படமால், நாள் தோறும் நிழலில் இருப்பதும், குளிர்சாதன அறையில் இருப்பதும், வைட்டமின் டி கிடைக்காமல் செய்யும். வைட்டமின் டி ஊட்டச்சத்து கிடைக்கவில்லை என்றால், எலும்புகள் வலுவிழந்து வலி உண்டாகும்.
கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆனது எலும்புகள் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இவை இரண்டும் ஒன்றோடு ஓன்று தொடர்புடையது. அதாவது, கால்சியம் சத்து இருந்தால் மட்டுமே உடலுக்கு தேவையான வைட்டமின் டி வெயிலில் இருந்து உடலுக்கு கிடைக்கும். வைட்டமின் டி இருந்தால் மட்டுமே , உணவில் இருந்து எடுத்து கொள்ளும் கால்சியம் முழுமையாக உணவில் இருந்து எலும்புகளுக்கு கிடைக்கும். ஆக இவை இரண்டும் அன்றாடம் சம அளவில் இருந்தால் மட்டுமே எலும்புகளின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.
அளவுக்கு அதிகமாக உப்பு எடுத்து கொள்ளுதல் - உணவில் உப்பு சத்து அதிகமாக இருந்தால், எலும்புகளின் அடர்வு தன்மையை குறைத்து விடும். பொதுவாக பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அளவுக்கு அதிகமாக உப்பு இருக்கிறது. அதை தவிர்ப்பது நல்லது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )