மேலும் அறிய

Dragon Fruit : நீரிழிவுக்கு நல்லதா ட்ராகன் பழம்... ஆய்வுகள் சொல்வது என்ன?

ஹோனோலுலு குயின் என்றும் அழைக்கப்படும் டிராகன் பழம் நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்ததா?

நீரிழிவு நோயாளிகள் தங்களுக்குப் பிடித்த பழங்களைச் சாப்பிடுவதற்குக் கூட ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும். சப்போட்டா போன்ற பழங்களைச் சாப்பிடுவது முற்றிலுமாக நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்து.கொய்யா, வாழை என அத்தனை பழங்களும் நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்து. இந்த வரிசையில் ஹோனோலுலு குயின் என்றும் அழைக்கப்படும் டிராகன் பழம் நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்ததா? கற்றாழை இனத்தைச் சேர்ந்த இது உடலுக்கு உகந்ததா? ஹைலோசெரியஸ் கற்றாழை வகையான டிராகன் பழத்தின் பூக்கள் இரவில் மட்டுமே பூக்கும். இந்த பழம் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நபரின் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் என்று அறியப்படுகிறது மற்றும் பார்டர்லைன் நீரிழிவு நிகழ்வுகளில் குறிப்பாக நன்மை பயக்கும். டைப்-2 நீரிழிவு நோயாளிகளைக் காட்டிலும், நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலைகளில் இதன் தாக்கம் கனிசமாகவே உள்ளதாக ஆய்வுகள் நிரூபித்துள்ளன. 

அவிழாத பெரிய மொட்டு போன்ற தோற்றமுடைய இந்தப் பழம் கற்றாழை இனத்தைச் சேர்ந்தது மற்றும் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது. தாய்லாந்து போன்ற ஆசிய நாடுகளிலும் இது மிகவும் பிரபலமானது, அங்கு இது பிடாயா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. புளிப்புச் சுவையுடைய இந்தப் பழம் சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் என்று பல ஆய்வுகள் கண்டறிந்துள்ளன, ஏனெனில் இது மிகவும் சத்தானது, சில ஆய்வுகள் இதனை நீரிழிவுக்கான சாத்தியமான சிகிச்சையாகவும் பரிந்துரைக்கின்றன. இவை கணைய பீட்டா செல்களை மீளுருவாக்கம் செய்து உடல் பருமன் அபாயத்தைக் குறைப்பதன் மூலம் டிராகன் பழம் நீரிழிவு எதிர்ப்பு விளைவை உருவாக்குகிறது என்று விலங்குகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

இந்த பழத்தின் குறைந்த கிளைசிமிக் குறியீடு காரணமாக இதனை நீரிழிவு நோயாளிகள் தாராளமாகச் மதிப்பெண்ணால் சாப்பிடலாம். போதுமான அளவு சாப்பிடுவது நல்லது. GI குறியீடு இதற்கு அதிகமாகவும் இல்லாமல் குறைவாகவும் இல்லாமல் நடுநிலையாகவே உள்ளது எனலாம். அதனால் டிராகன் பழத்தை உட்கொள்வதை கட்டுக்குள் வைத்திருப்பது நல்லது.

டிராகன் பழம் பொதுவாக அதிக ஊட்டமளிக்கும் வெப்பமண்டல பழமாகும். இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு, குறிப்பாக ப்ரீயாபெட்டிக் நோயாளிகளுக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. டிராகன் பழம் உட்கொள்ளல் கூடுதலாக ஒருவரின் ஆரோக்கியமான வாழ்வை மேம்படுத்துகிறது. மற்றொருபுறம், நீரிழிவு நோயைத் தடுக்கவும், அதிக குளுக்கோஸை நிர்வகிக்கவும் டிராகன் பழம் கைகொடுக்கிறது. டிராகன் பழம் சிவப்பு, வெள்ளை, இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களில் கிடைக்கிறது. மேலும், இந்த பழத்தின் அனைத்து நிறங்களும் நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.

டிராகன் பழம் ஆன்டிஆக்ஸிடன்ட்களின் அதிகப்படியான மூலமாகும். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக செயல்படுகின்றன. இந்த ஃப்ரீ ரேடிக்கல்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

"சுகாதாரத்துறையில் ஏஐ எதிர்காலத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தும்.." பத்மவிபூஷன் பெற்ற மருத்துவர் பேச்சு
தீபாவளிப் பட்டாசு: கண் காயங்கள் மறைந்த ஆபத்து, விழிப்புணர்வுடன் கொண்டாடுங்கள்!
தீபாவளிப் பட்டாசு: கண் காயங்கள் மறைந்த ஆபத்து, விழிப்புணர்வுடன் கொண்டாடுங்கள்!
30 வயதைக் கடந்த ஆண்களே உஷார்! திடீர் மாரடைப்பைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
30 வயதைக் கடந்த ஆண்களே உஷார்! திடீர் மாரடைப்பைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
பக்கவாதம் தடுக்க, விரைந்து செயல்பட: முன்கூட்டியே கண்டறிவதன் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தல்
பக்கவாதம் தடுக்க, விரைந்து செயல்பட: முன்கூட்டியே கண்டறிவதன் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தல்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Government Employees: தீபாவளி போனஸை தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்! ரூ.30,000 முதல் ரூ.45,000 வரை!
Government Employees: தீபாவளி போனஸை தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்! ரூ.30,000 முதல் ரூ.45,000 வரை!
Vaiko: வைகோ எடுத்த அதிரடி முடிவு! மீறினால் ஒழுங்கு நடவடிக்கை! தொண்டர்களுக்கு வார்னிங்!
Vaiko: வைகோ எடுத்த அதிரடி முடிவு! மீறினால் ஒழுங்கு நடவடிக்கை! தொண்டர்களுக்கு வார்னிங்!
அ.தி.மு.க.,வை விட்டு வெளியேற போவதில்லையா சி.வி.சண்முகம்? அரசியலில் புதிய திருப்பம்!
அ.தி.மு.க.,வை விட்டு வெளியேற போவதில்லையா சி.வி.சண்முகம்? அரசியலில் புதிய திருப்பம்!
Rahu Transit: ராகு பெயர்ச்சி எப்போது? இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை! குவியப்போகும் பணவரவு!
Rahu Transit: ராகு பெயர்ச்சி எப்போது? இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை! குவியப்போகும் பணவரவு!
TN Rain: இன்று முதல் 10-ம் தேதி வரை ரவுண்ட் கட்டப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்? சென்னை நிலவரம் எப்படி?
TN Rain: இன்று முதல் 10-ம் தேதி வரை ரவுண்ட் கட்டப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்? சென்னை நிலவரம் எப்படி?
Tamilnadu Rain: இனி தீபாவளிக்கு நோ பிராப்ளம்.. மழை இடையூறு இருக்காது! வெதர்மேன் வெளியிட்ட குஷி அப்டேட்!
Tamilnadu Rain: இனி தீபாவளிக்கு நோ பிராப்ளம்.. மழை இடையூறு இருக்காது! வெதர்மேன் வெளியிட்ட குஷி அப்டேட்!
RRB NTPC: பட்டதாரிகளுக்கு 3548 ரயில்வே அரசு வேலைகள்! விண்ணப்பிப்பது எப்படி?
RRB NTPC: பட்டதாரிகளுக்கு 3548 ரயில்வே அரசு வேலைகள்! விண்ணப்பிப்பது எப்படி?
Minister Vinoth: இன்னும் கல்யாணம் ஆகாதது ஏன்? உண்மையை உடைத்த அமைச்சர் வினோத்
Minister Vinoth: இன்னும் கல்யாணம் ஆகாதது ஏன்? உண்மையை உடைத்த அமைச்சர் வினோத்
Embed widget