Weight Loss: எடையை குறைக்க இண்டர்மிட்டண்ட் ஃபாஸ்டிங் இருக்கீங்களா..? இவ்ளோ பிரச்சினை இருக்கா..?
சமீபகாலமாக உடல் எடையை குறைக்க பலரும் பல வித்தியாசமான முறைகளை கையாண்டு வருகின்றனர்.
சமீபத்திய ஆண்டுகளில், இண்டர்மிட்டண்ட் ஃபாஸ்டிங் எனப்படும் இடைப்பட்ட உண்ணாமை முறை உடல் எடையை குறைக்க விரும்பும் மக்களிடையே பெரும் அளவில் பிரபலமாகி வருகிறது. இருப்பினும், சில ஆய்வுகளின்படி, இந்த இண்டர்மிட்டண்ட் ஃபாஸ்டிங் அதிக எடை கொண்ட அல்லது பருமனானவர்களில் சாதகமான முடிவுகளைத் தந்தாலும், அதை முயற்சித்த பெண்கள் பின்வரும் நாட்களில் எதிர்மறையான விளைவுகளைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது. அதாவது அவர்களில்
கடுமையான மனநிலை மாற்றங்கள்
அதீத பசி
குறைந்த ஆற்றல் / சோர்வு
உணவைப் பற்றிய அதிகரித்த சிந்தனை
ஃபாஸ்டிங் இல்லாத நாட்களில் அதிகமாக சாப்பிடுவது
மனச்சோர்வு
கோபம்
ஆகிய அறிகுறிகள் கண்டறியப்பட்டன...
இண்டர்மிட்டண்ட் ஃபாஸ்டிங் என்றால் என்ன?
இண்டர்மிட்டண்ட் ஃபாஸ்டிங் என்பது ஒரு உணவு முறை ஆகும், இதில் தனிநபர்கள் உணவு உண்ணும் மற்றும் உண்ணாத காலங்களை தனக்கேற்றபடி மாற்றிக் கொள்கிறார்கள். அதாவது 16/8 முறை (16 மணி நேரம் உண்ணாவிரதம் மற்றும் 8 மணி நேர இடைவெளியில் சாப்பிடுதல்), 5:2 உணவுமுறை (சாதாரணமாக 5 நாட்களுக்கு சாப்பிடுவது மற்றும் கலோரி உட்கொள்ளலை 500-600 கலோரிகளுக்குள் கட்டுப்படுத்துதல்) மற்றும் மாற்று நாள் ஃபாஸ்ட்டிங் (ஒரு நாள் சாதாரணமாக சாப்பிட்டு, அடுத்த நாள் கலோரி உட்கொள்ளலை கட்டுப்படுத்துதல்) உட்பட இந்த ஃபாஸ்டிங் வகையில் பல்வேறு முறைகள் உள்ளன.
இண்டர்மிட்டண்ட் ஃபாஸ்டிங் அதன் சாத்தியமான எடை இழப்பு மற்றும் ஆரோக்கிய நன்மைகளுக்காகப் பேசப்பட்டாலும், கருத்தில் கொள்ள வேண்டிய பல குறைபாடுகளும் உள்ளன.
இண்டர்மிட்டண்ட் ஃபாஸ்டிங் முறையின் சில தீமைகள் இங்கே.
பசி மற்றும் சாப்பாடு:
இண்டர்மிட்டண்ட் ஃபாஸ்டிங் முறையின் முக்கிய குறைபாடுகளில் ஒன்று, குறிப்பாக உண்ணாவிரத காலங்களில் பசி மற்றும் பசியின் உணர்வுகளுக்கு வழிவகுக்கும். இது சிலருக்கு உணவைக் உட்கொள்ளாமல் இருப்பதைக் கடைப்பிடிப்பதை கடினமாக்குகிறது மற்றும் சாப்பிடும் சமயத்தின் போது அதிகமாக சாப்பிடுவதற்கு அல்லது கட்டுப்பாடு இல்லாமல் சாப்பிடுவதற்கு வழிவகுக்கிறது.
ஊட்டச்சத்து குறைபாடுகள்:
குறிப்பிட்ட காலங்களில் உணவு உட்கொள்வதை கட்டுப்படுத்துவதன் மூலம், உங்கள் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் பெறுவது கடினம். உங்கள் உணவில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளைச் சேர்க்க நீங்கள் கவனமாக இல்லாவிட்டால் இது பெரிய அளவில் பாதிக்கும்.
ஆற்றல் அளவு குறைதல்:
இண்டர்மிட்டண்ட் ஃபாஸ்டிங், குறிப்பாக உண்ணாவிரத காலங்களில் ஆற்றல் அளவு குறைவதற்கு வழிவகுக்கும். இது உடற்பயிற்சி செய்வதையோ அல்லது பிற உடல் செயல்பாடுகளை செய்வதையோ கடினமாக்கும்.
சமூக சூழ்நிலைகளில் சிரமம்:
இந்த முறை சமூக சூழ்நிலைகளில் சவாலாக இருக்கலாம், குறிப்பாக உங்கள் நண்பர்கள் அல்லது குடும்பத்தினர் சாப்பிடும் அதே நேரத்தில் நீங்கள் சாப்பிடவில்லை என்றால் அது இக்கட்டான சூழலாக அமையலாம். உணவகங்களில் சாப்பிடுவது அல்லது நிகழ்வுகளில் கலந்துகொள்வது கடினமாக இருக்கலாம்.
அனைவருக்கும் பொருந்தாது: இந்த முறை அனைவருக்கும் பொருந்தாது, குறிப்பாக சில நோய்வாய்ப்பட்டவர்களுக்கு அல்லது கர்ப்பமாக இருப்பவர்களுக்கு அல்லது தாய்ப்பால் கொடுப்பவர்களுக்கு என பலருக்கு இந்து பொருந்தாத முறையாக இருக்கலாம்...
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )