மேலும் அறிய

பின்னால வருத்தப்படுவீங்க...ஆதவ் அர்ஜூனாவுக்கு தம்பி ராமையா பதில்

TN2026 படத்தின் டீசர் தவெக தலைவர் விஜயை விமர்சிக்கும் படி இருப்பதாக ஆதவ் அர்ஜூனா குற்றம்சாட்டிய நிலையில் நடிகர் தம்பி ராமையா விளக்கமளித்துள்ளார்

KRG Kannan Ravi Group சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி தயாரிப்பில், உமாபதி ராமையா இயக்கத்தில், நட்டி நட்ராஜ் நாயகனாக நடிக்க, பரபரப்பான பொலிடிகல் காமெடி கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள திரைப்படம் “TN 2026” தங்க நட்சத்திரம். இப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி திரை ரசிகர்கள் மட்டுமல்லாது பொதுமக்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றதுஇந்நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், அரசியல் மாநாடு போல வடிவமைக்கப்பட்ட  பிரம்மாண்ட அரங்கில்,  கோலாகலமாக நடைபெற்றது.

இப்படம் நடிகர் விஜயின் சினிமா மாற்றும் அரசியல் வாழ்க்கையை கேலி செய்யும் விதமாக இருப்பதாக தவெக ஆதர்வாளர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இதுகுறித்து வில்லிவாக்கம் சட்டமன்ற வேட்பாளர் ஆதவ் அர்ஜூனா தனது விமர்சனத்தை இருந்தார். ஆதவ் அர்ஜூனாவுக்கு தம்பி ராமையா தற்போது விளக்கம்கொடுத்துள்ளார். 

ஆதவ் அர்ஜூனாவுக்கு தம்பி ராமையா 

தம்பி ராமையா பேசியபோது இந்த கதையை அரசியல் பின்னணியில் உருவாக்கியுள்ளோம். அது ஒரு குடும்ப அனுபவத்திலிருந்து வந்த புரிதலால் உருவானது. அரசியல் என்பது வாழ்க்கையோடு கலந்த ஒரு உண்மை என்பதையும் காட்டுகிறது. இந்த படத்தில் உள்ள ஒவ்வொரு கலைஞரும் தனித்திறமையுடன் இணைந்துள்ளனர். நட்டி சார் போன்றவர்கள் தங்கள் அர்ப்பணிப்பால் கதாபாத்திரத்தை உயர்த்தியுள்ளனர். எம்.எஸ். பாஸ்கர் சார்,  இளவரசு சார் போன்ற அனுபவமிக்க கலைஞர்கள் இந்த படத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளனர். இது ஒரு குழு முயற்சியாக உருவான படம். எல்லோரும் சேர்ந்து உழைத்ததால்தான் இவ்வளவு அழகாக உருவாகியுள்ளது.

ஒரு படத்தை உருவாக்குவது என்பது பொறுப்பும், உணர்ச்சியும் சேர்ந்த ஒன்று. அதில் யாருடைய மனதையும் புண்படுத்தாமல் சொல்ல வேண்டியதை சொல்ல வேண்டும். அந்த பொறுப்புடன் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இயக்குனர் உமாபதி இந்த படத்தின் மூலம் தன்னை நிரூபித்துள்ளார். அவருடைய உழைப்பு மற்றும் திறமை இந்த படத்தில் தெளிவாக தெரியும். இந்தப்படம் யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை, எனக்கு எல்லா கட்சியிலும் நண்பர்கள் இருக்கிறார்கள். ஒரு விஷயத்தை தெளிவாக சொல்ல விரும்புகிறேன். மேலோட்டமாக கிடைக்கும் தகவல்களை வைத்து உடனே முடிவுக்கு வர வேண்டாம். இந்த படம் யாரையும் புண்படுத்தும் வகையில் எடுக்கப்படவில்லை.

தம்பி  ஆதவ் அர்ஜுனா அதைப் புரிந்துகொள்ள வேண்டும்.  யாரையும் சங்கடப்படுத்தும் நோக்கம் இதில் இல்லை. அதை நீங்கள் படம் பார்த்த பிறகு நிச்சயமாக புரிந்துகொள்வீர்கள். மீடியா நண்பர்களிடம் ஒரு சிறிய வேண்டுகோள். பல ஆண்டுகளாக எங்களுடைய இந்த முயற்சி தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த படத்தை முழுமையாக பார்த்த பிறகு உங்கள் கருத்தை சொல்லுங்கள். இந்த படம் வெளியாகும் நாளில் நீங்கள் பார்த்து,  உங்களுக்குப் பிடித்திருந்தால் பாராட்டுவீர்கள் என்று நம்புகிறேன். ஒரு தந்தையாக எனக்கு கிடைத்த மகிழ்ச்சிஎன் மகன் தனது உழைப்பால் இந்த நிலைக்கு வந்திருக்கிறான் என்பதுதான். அதை நீங்கள் உணர்ந்தால் அதுவே எனக்கு மிகப்பெரிய சந்தோஷம். இந்த படத்தை எல்லாரும் பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி, வணக்கம்.

 

 

 

 

தலைப்பு செய்திகள்

பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
Upcoming Hybrid SUVs: அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Embed widget