எட்டுப்பொருத்தம் இருந்தாலும் ‛அந்தப்’ பொருத்தம் இல்லையா? - என்ன செய்வது?
இருவருக்குள்ளும் சண்டை சிக்கலே வராத ஜாலியான ஜோடி என்றாலும் செக்ஸ் பொருத்தம் இல்லையென்றால் குடும்ப வாழ்க்கை சுவாரசியம் இல்லாமல்தான் இருக்கும்.
காதலித்துத் திருமணம் செய்பவர்களில் இல்லாத ஒரு சிக்கல் இந்த வீட்டில் பொருத்தம் பார்த்து செய்யும் திருமணங்களில் உண்டு. இருவருக்குள்ளும் சண்டை சிக்கலே வராத ஜாலியான ஜோடி என்றாலும் செக்ஸ் பொருத்தம் இல்லையென்றால் குடும்ப வாழ்க்கை சுவாரசியம் இல்லாமல்தான் இருக்கும். தொடக்கத்தில் தீபாவளி மத்தாப்பூ போல இருக்கும் ரிலேஷன்ஷிப் பிறகு மழையில் வெடிக்காத பட்டாசு போல நசநசத்துவிடுவதற்கு முக்கியக் காரணம் செக்ஸ் பொருத்தமின்மை என்கிறார்கள் மருத்துவர்கள்.
இது எதனால் வருகிறது,
எத்தனை முறை உடலுறவு வைத்துக்கொள்கிறீர்கள்?
உடலுறவு வைத்துக்கொள்வது குறித்த புரிதல்கள் பார்ட்னர்களுக்கு இடையே மாறுபடும்.அதனால் உடலுறவில் எது சரி எது தவறு என்பதில் ஒருவருக்கு ஒருவர் பொருந்திப் போகாது. மேலும் உறவில் அவர்கள் எந்த ஸ்டேஜில் இருக்கிறார்கள் என்பதைப் பொருத்து எத்தனை முறை அவர்கள் செக்ஸ் வைத்துக்கொள்கிறார்கள் என்பதும் மாறுபடும்.புதிதாகக் உறவில் இருப்பவர்களிடையே ’பேசிப் பேசி தீர்த்தபின்னும் ஏதோ ஒன்று குறையுதே’ என்னும் கதையாக செக்ஸ் அதிகமாக இருக்கும்.அதுதான் ஆழமான காதலுக்கும் வழிவகுக்கும்.ஆனால் காலப்போக்கில், ‘இன்னிக்கு வேண்டாமே ப்ளிஸ்!’ என்பதில் வந்து நிற்கும் இந்த இடத்தில்தான் சிக்கலும் தொடங்கும்.
உடலுறவு குறித்த ஆர்வம்
பார்ட்னர்களில் இருவருக்குமே வெவ்வேறு அளவிலான செக்ஸ் ஆர்வம் இருக்கும். ஒருவருக்கு அதிக செக்ஸ் பிடிக்கும். மற்றவருக்கு உடலுறவில் அத்தனை ஆர்வம் இருக்காது. இந்த சமயத்தில் அதிக செக்ஸ் ஆர்வம் உடைய பார்ட்னர் தான் ஒதுக்கப்பட்டது போல உணருவார். அதே சமயம் உடலுறவில் ஆர்வமில்லாத பார்டனரோ மிகுந்த அழுத்தத்தை உணருவார்.
உடலுறவில் பரிசோதனை முயற்சி
உடலுறவில் உங்களுக்குப் பிடித்த பொசிஷன் உங்களது பார்ட்னருக்குப் பிடிக்காமல் போகலாம். தொடக்கத்தில் இருவருக்குமே ஒரே பொசிஷன் பிடிக்கும் ஆனால் காலப்போக்கில் வெவ்வேறு பொசிஷன்களை பரிசோதனை செய்துபார்க்க பார்ட்னர்கள் விரும்புவார்கள். உடலுறவு குறித்த ஃபேண்டஸி கற்பனைகளும் சிலருக்கு இருக்கும். ஆனால் அது அங்கீகரிக்கப்படாதபோதும் புரிந்துகொள்ளப்படாத போதும் பார்ட்னர்களிடையே பிரச்னை ஏற்படும்.
இதற்கு என்ன தீர்வு?
பார்ட்னருக்கு எந்தவித அழுத்தமும் கொடுக்க வேண்டாம் என்பதே மருத்துவர்களின் முதல் அட்வைஸ். செக்ஸில் உங்களது மனைவிக்கோ/கணவருக்கோ ஒன்று பிடிக்கவில்லையா? ஏன் என்று பேசித் தெரிந்துகொள்ளுங்கள். மனைவிக்கோ/கணவருக்கோ என்ன பிடிக்கும் என்பதையும் பேசித் தெரிந்து கொள்ளுங்கள். ஆனானப்பட்ட காதலையே தைரியமாகச் சொல்லுபவர்களுக்கு காமத்தைப் பற்றிப் பேச அப்படி என்ன தயக்கம் வேண்டிக்கிடக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள். மேலும் கொஞ்சிப்பேசினாலே பாதி விஷயம் சக்ஸஸ் என்பது டாக்டர்களின் சீக்ரெட் அட்வைஸ்களில் ஒன்று. உடலுறவில் உடலுறவை விட உங்களது பார்ட்னரின் விருப்பு வெறுப்புகளைப் புரிந்துகொள்ளவேண்டியது மிகமிக அவசியம்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )