HMPV Virus: வேகமாக பரவும் எச்எம்பிவி வைரஸ்! தற்காத்துக் கொள்வது எப்படி? முழு விவரம்
HMPV Virus Dos and Donts: எச்எம்பிவி வைரஸ் வராமல் காத்துக்கொள்ள அரசின் சார்பில் வழிக்காட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது
இந்தியாவில் 2 குழந்தைகளுக்கு எச்எம்பிவி வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து, இந்த வைரஸ் வராமல் காத்துக்கொள்ள நாம் செய்ய வேண்டிய மற்றும் செய்ய கூடாத வழிமுறைகள் என்னவென்று இந்த தொகுப்பில் காணலாம்.
எச்எம்பிவி வைரஸ்:
சுவாச வைரஸான மனித மெட்டாப்நியூமோவைரஸ் (எச்எம்பிவி) சீனாவில் வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது. எற்கெனவே உலகெங்கிலும் உள்ள சுகாதார அமைப்புகள் எச்சரிக்கையை வழங்க தொடங்கியுள்ளன. முகமூடிகளை அணிவது மற்றும் கைகளை கழுவுதல் போன்ற சுகாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு வலியுறுத்துகின்றன.
இந்த நிலையில் இந்தியாவில் இந்த வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, பெங்களூருவை சேர்ந்த 8 மாதம் மற்றும் 3 மாத குழந்தைக்கு இந்த தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் வராமல் காத்துக்கொள்ள அரசின் சார்பில் வழிக்காட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது
HMPV என்பது மற்ற சுவாச வைரஸ் போன்றது, இது குளிர்காலத்தில் ஜலதோஷம் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது, குறிப்பாக இளையவர்கள் மற்றும் வயதானவர்களிடையே இந்த நோய் எளிதில் பரவுகிறது,
அரசு வெளியிட்ட அறிக்கை:
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை, அரசு. கர்நாடகா மாநிலத்தில் ஜலதோஷம், ILI & SARI போன்ற சுவாச நோய்த்தொற்றுகளின் தரவுகளை ஆய்வு செய்துள்ளது மற்றும் முந்தைய ஆண்டை விட 2024 டிசம்பரில் பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கையில் அடிப்படையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இல்லை.
இதையும் படிங்க: HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
சுகாதாரத்துறை, பொது மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும், தொற்று பரவாமல் தடுக்கவும் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவற்றைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறது.
செய்ய வேண்டியவை
- நீங்கள் இருமல் அல்லது தும்மும்போது, கைக்குட்டை அல்லது டிஷ்யூ பேப்பரால் உங்கள் வாய் மற்றும் மூக்கை மூட வேண்டும்
- சோப்பு மற்றும் தண்ணீர் அல்லது ஆல்கஹால் சார்ந்த சானிடைசர் மூலம் உங்கள் கைகளை அடிக்கடி கழுவ வேண்டும்
- நெரிசலான இடங்களைத் தவிர்க்கவும்
- உங்களுக்கு காய்ச்சல், இருமல் மற்றும் தும்மல் இருந்தால் பொது இடங்களை விட்டு விலகி இருங்கள்.
- நீங்கள் நோய்வாய்ப்பட்டிருந்தால் வீட்டிலேயே இருங்கள் மற்றும் மற்றவர்களுடன் தொடர்பைக் கட்டுப்படுத்துங்கள்
- நிறைய தண்ணீர் குடிக்கவும், சத்தான உணவை உண்ணவும்
- வெளிப்புற காற்று வந்து செல்லும் வகையில் உள்ள காற்றோட்டமான இடங்களில் இருந்தால் நோய் பரவுவதை தவிர்க்கலாம்
இதையும் படிங்க: HBD AR Rahman: ஏ.ஆர்.ரஹ்மானைத் தெரியும்! அவங்க அப்பா யாருனு தெரியுமா? இவ்ளோ பெரிய பிரபலமா?
செய்யக்கூடாதவை:
- டிஷ்யூ பேப்பர் & கை கர்சீஃப் மறுபயன்பாடு செய்வதை தவிர்க்கவும்
- நோய்வாய்ப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பு அவர்கள் பயன்படுத்திய பொருட்களை உபயோகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும்
- கண்கள், மூக்கு மற்றும் வாயை அடிக்கடி தொடுதல் கூடாது
- பொது இடங்களில் எச்சில் துப்புதல் கூடாது
- மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சுய மருந்துகளை எடுத்துக்கொள்ள கூடாது
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )