இந்திய நடிகைகள் பலர் நடிப்பது மட்டுமின்றி பல தொழில்கள் செய்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர்.
அப்படி இந்திய சினிமாவில் டாப் பணக்கார நடிகையாக இருப்பவர் தான் ஜூஹி சாவ்லா.
1984-ல் மிஸ் இந்தியா பட்டத்தை வென்றவர்.
சுல்தானத்(1986) எனும் ஹிந்தி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
அதன் பின் கயாமத் சே கயாமத் தக், ஜென்டில்மேன், டார் போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியிலும் சினிமாவிலும் பெரிய இடத்தை பிடித்தார்.
ஆகஸ்ட் 2024-ல் ஹருண் இந்தியா ரிச் லிஸ்ட் 2024 பதிப்பில் ஜூகி சாவ்லாவின் சொத்து மதிப்பு ரூ. 4,600 கோடி என்று குறிப்பிடப்பட்டிருந்தது
முன்னனி பாலிவுட் நடிகைகளான ஆலியா பட், கேத்ரீனா கைஃப் போன்றவர்களின் சொத்து மதிப்பைவிட இது அதிகம் எனக் கூறப்படுகிறது.