Healthy Food: நாள் முழுவதும் எனர்ஜியா இருக்கனுமா? இந்த உணவுகளுடன் நாளை தொடங்குங்கள்!
நாள் முழுவதும் ஆற்றலை பெறவும் நோய் எதிர்ப்பு சக்தியை பெறவும் நீங்கள் இந்த உணவுகளுடன் உங்கள் நாளை தொடங்கலாம்.
காலை உணவு என்பது நமது நாளின் முதல் உணவாகும். இது நாள் முழுவதும் உங்களுக்கு ஆற்றலைத் தரும். அதனால்தான் எப்போதும் காலை உணவை தவிர்க்காமல் சாப்பிடுவது நல்லது. சிலர் காலையில் அவசர அவசரமாக வேளைக்கு செல்வதால், காலை உணவை தவிர்க்கின்றனர். பலர் ஆரோக்கியமான காலை உணவை சாப்பிட முயற்சி செய்கிறார்கள். ஊட்டச்சத்து நிறைந்த, நோயெதிர்ப்பு சக்தி அளிக்கும் காலை உணவுகள் குறித்து இங்கே பார்க்கலாம்.
பனீர்
சைவ புரதத்திற்கு பனீர் ஒரு நல்ல தேர்வு. நீங்கள் அதை பச்சையாக சாப்பிடலாம் அல்லது பல்வேறு வகையான உணவுகளை தயாரிக்க பயன்படுத்தலாம். பாலாடைக்கட்டியில் உள்ள கால்சியம், புரதம், வைட்டமின் டி போன்ற ஊட்டச்சத்துக்கள் பல்வேறு நன்மைகளை உங்களுக்கு வழங்குகின்றன. பனீர் சாப்பிடுவது உங்களுக்கு உடனடி ஆற்றலை அளிக்கிறது. மேலும் இது நாள் முழுவதும் உங்களை உற்சாகமாக வைத்திருக்க உதவுகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதை காலை உணவில் சேர்த்துக் கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது.
பனீர் சீலா
பனீர் சீலா ஆரோக்கியமான காலை உணவாகும். இது சுவையானது மட்டுமல்ல, மிகவும் நிறைவாகவும் இருக்கும்.
பசலைக் கீரை
கீரை நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முக்கிய உணவாக உள்ளது. குறிப்பாக பசலைக் கீரையில் இரும்பு மற்றும் வைட்டமின் சி தவிர, இதில் ஏராளமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அவை உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகின்றன மற்றும் நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடும் நோயெதிர்ப்பு மண்டலத்தின் திறனை மேம்படுத்துகின்றன.
கீரை தோசை
கீரை தோசை மிகச் சிறந்த காலை உணவு. கீரையை அரைத்து தோசை மாவுடன் சேர்த்து தோசை தயாரித்து சாப்பிடலாம்.
முட்டை
முட்டை புரதச் சத்து நிறைந்தது. புரதத்தை சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும். இதில் கால்சியம், வைட்டமின் டி மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது நமது தோல், முடி மற்றும் எலும்புகளை வலுப்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
ஓட்ஸ்
ஓட்ஸ் உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. ஓட்ஸில் கரையக்கூடிய நார்ச்சத்து, பீட்டா-குளுக்கன், வைட்டமின்கள் மற்றும் புரதங்கள் உள்ளன. அவை உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை விரைவாக அதிகரிக்க உதவும்.
ஓட்ஸ் இட்லி
நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த, நீங்கள் ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சேர்க்க வேண்டும். இதற்கு, ஓட்ஸ் இட்லி செய்ய எளிதான மற்றும் சத்தான கூறுகள் நிறைந்த ஒரு சிறந்த தேர்வாகும்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )