சேலம் மாவட்டத்தில் புதிதாக 133 பேருக்கு தொற்று உறுதி; இருவர் உயிரிழப்பு
சேலம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 133 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு 2 நபர்கள் உயிரிழந்துள்ளனர்
சேலம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 133 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அதிகப்படியாக சேலம் மாவட்டத்தில்
கடந்த 24 மணி நேரத்தில் இருவர் உயிரிழப்பு . மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு 1530 ஆக உள்ளது.
மேலும் 147 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினார். இதுவரை சேலம் மாவட்டத்தில் 89,056 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92,408 ஆக உயர்வு. மாவட்டத்தில் 1,691 பேர் கொரோனாவிற்கு
சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 10 சதவீத படுக்கைகளில் மட்டுமே நோயாளிகள் உள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் நேற்று வரை 9 லட்சத்து 3 ஆயிரத்து 170 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இன்று தடுப்பூசி செலுத்தப்படவில்லை. நாளையும் தடுப்பூசி இருப்பு இல்லாத காரணத்தினால் செலுத்தப்படாது என சேலம் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி கொரோனா பதிவு :
தர்மபுரி மாவட்டத்தில் இன்று புதிதாக 29 பேருக்கு தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இன்று உயிரிழப்பு ஏதுமில்லை. மேலும் 56 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் 495 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா நோய் தொற்று குறைந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நோய் தொற்று அதிகரித்து இன்று ஒரே நாளில் 23 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு ஏதுமில்லை . நோயிலிருந்து குணமடைந்த 44 பேர் வீடு திரும்பியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 472 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )