மேலும் அறிய

"பூஸ்டர் தடுப்பூசி டோஸ் தேவையில்லை" - 'Going Viral' புத்தக வெளியீட்டில் எய்ம்ஸ் இயக்குனர்!

மூன்றாவது டோஸ் தடுப்பூசிக்கான அவசியம் எதிர்காலத்தில் வராது என்று கோயிங் வைரல் புத்தக விழாவில் எய்ம்ஸ் இயக்குனர் குலேரியா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கொரோனாவை இன்னும் எந்தவொரு நாடும் முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வரவில்லை. இருப்பினும், சில நாடுகள் சிறப்பான வேக்சின் பணிகள் மூலம் வைரஸ் பாதிப்பைக் குறைத்துள்ளன. தற்போதைய சூழலில் தடுப்பூசி மட்டுமே கொரோனாவுக்கு எதிரான பேராயுதமாக பார்க்கப்படுகிறது. இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் வேக்சின் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், இதுவரை 100 கோடிக்கும் அதிகமானோருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது 18+ அனைவருக்கும் வேக்சின் போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. நாட்டில் தற்போது பெரும்பாலும் கோவாக்சின் தடுப்பூசியே 12-16 வாரக் கால இடைவெளியில் போடப்பட்டு வருகிறது. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளில் பூஸ்டர் டோஸ் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் பூஸ்டர் டோஸ் எப்போது என்பது குறித்து கேள்விகள் எழுந்தன. அதேபோல பூஸ்டர் டோஸ் குறித்தும் உலகின் பல்வேறு நாடுகளும் முக்கிய முடிவுகளை எடுத்து வருகின்றனர். ஏற்கனவே சில ஐரோப்பிய நாடுகளில் பூஸ்டர் டோஸ் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அமெரிக்காவிலும் பூஸ்டர் டோஸ் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதே கருத்தைத் தான் பலரும் வலியுறுத்தியுள்ளனர்.

எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் குலேரியா கோயிங் வைரல் என்னும் கோவாக்சின் தடுப்பூசி கண்டுபிடித்த பயணம் குறித்த புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் பேசும்போது தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களை காணும்போது அதிக மக்களை பாதிக்கும் அளவுக்கான இன்னொரு அலை வராது என்ற நம்பிக்கை நாட்கள் செல்ல செல்ல அதிகரிக்கிறது என்று கூறினார். மேலும் பேசிய அவர், "முதல் இரண்டு அலைகள் அளவிற்கான பாதிப்புகளை 3வது அலை கொண்டிராது என்ற உறுதியான நம்பிக்கை உள்ளது. அதன்மூலம் இந்த தொற்றுநோய் காலம் முடிவுக்கு வந்துவிட்டது என்று தோன்றுகிறது. நம் நாட்டில் இன்னமும் கொராணா நோய் பாதித்தவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள், ஆனால் பாதிப்பின் வீரியம் வெகுவாக குறைந்து விட்டது. அதே நேரத்தில் ஒட்டுமொத்தமாக இந்தியாவில் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களை விகிதம் 118 கோடியை நேற்று கடந்தது. செவ்வாய்க்கிழமை இரவு 7 மணி வரையில் அன்று மட்டும் 64 லட்சம் தடுப்பூசிகள் போட்டுள்ளனர். இந்த விகுதாசார்த்தை காணுகையில் வெகு விரைவில் முழுமையாக தடுப்பூசி போட்ட நாடாக மாறும் வாய்ப்பு உள்ளது" என்று கூறினார்.

தற்போது வரை 2 டோஸ் வேக்சினே உயிரிழப்பையும் தீவிர பாதிப்பையும் தடுப்பதால் பூஸ்டர் டோஸ்கள் தற்போதைய சூழலில் தேவையில்லை என்றும் அனைத்து நாடுகள் உள்ள மக்களுக்கும் 2 டோஸ் தடுப்பூசியைச் செலுத்துவதில் உலக நாடுகள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் சில ஆய்வாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்தியாவில் இதுவரை பூஸ்டர் டோஸ் குறித்து எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை. இருப்பினும், பூஸ்டர் டோஸ் குறித்தும் இன்னும் 2 வாரங்களில் நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு இறுதி முடிவை எடுக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், பூஸ்டர் டோஸை காட்டிலும் சிறார்களுக்கு வேக்சின் செலுத்தும் பணிகளுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Viduthalai 2 Review :  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review : வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Viduthalai 2 Review :  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review : வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
Women Mentality: ”பேசிக்கிட்டே இருக்கா மச்சி” மனைவிகளை பற்றி புலம்பும் கணவன்கள் - பெண்களின் அதீத திறமைகள் தெரியுமா?
Women Mentality: ”பேசிக்கிட்டே இருக்கா மச்சி” மனைவிகளை பற்றி புலம்பும் கணவன்கள் - பெண்களின் அதீத திறமைகள் தெரியுமா?
’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!
’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!
ரெட் லைட் ஏரியாவில் 900 தமிழ் பெண்கள்! பம்பாயை அலறவிட்ட தமிழக போலீஸ் - 90ல் நடந்தது என்ன?
ரெட் லைட் ஏரியாவில் 900 தமிழ் பெண்கள்! பம்பாயை அலறவிட்ட தமிழக போலீஸ் - 90ல் நடந்தது என்ன?
Breaking News LIVE : ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா காலமானார்
Breaking News LIVE : ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா காலமானார்
Embed widget