கரூர், நாமக்கல் மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா?
கரூர் மாவட்டத்தில் இன்று 15 வயது முதல் 18 வயதுடைய மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் துவக்கி வைத்தார்.
கரூர் மாவட்டத்தில் புதிதாக 10 நபர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கரூர் மாவட்டத்தில் இதுவரை தொற்று பதித்தவர்கள் 25,006 ஆக உயர்ந்துள்ளது. கரூர் மாவட்டத்தில் இன்று வீடு திரும்புவோர் 13 நபர்கள் ஆகும். கரூர் மாவட்டத்தில் இதுவரை வீடு திரும்புவோர் 24,552 நபர்கள் ஆகும். கரூர் மாவட்டத்தில் இன்று சிகிச்சை பலனின்றி இறந்தவர் யாரும் இல்லை. கரூர் மாவட்டத்தில் இன்று வரை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தவர்கள் 364 நபர்கள் ஆகும். கரூர் மாவட்டத்தில் தற்போது சிகிச்சையில் உள்ள நபர்கள் 90 ஆகும்.
கரூர் மாவட்டத்தில் 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் 203 பள்ளிகளில் 49,300 நபர்கள் உள்ளனர். இன்று தடுப்பூசி செலுத்தும் பணியில் சுகாதாரத் துறையை சேர்ந்த 25 மருத்துவர்கள், 75 செவிலியர்கள் உள்ளிட்ட 100 எண்ணிக்கையிலான மருத்துவப் பணியாளர்கள், 25 குழுக்களாக பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நாள்தோறும் பத்துக்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை காய்ச்சல் முகாம் நடைபெற்று வருகிறது. கரூர் நகர பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய தடுப்பூசி சிறப்பு மையமும் செயல்பட்டு வருகிறது.
நாமக்கல்லில் கொரோனா தொற்று பாதித்தவர்கள்.
நாமக்கல் மாவட்டத்தில் இன்று புதிதாக 18 நபர்கள் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்கள் 54,618 நபர்கள் ஆகும். நாமக்கல் மாவட்டத்தில் இன்று சிகிச்சை குணமடைந்து வீடு திரும்பியவர் எண்ணிக்கை 35 நபர்கள் ஆகும். நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியோர் 53,897 நபர்கள் ஆகும்.
நாமக்கல் மாவட்டத்தில் இன்று சிகிச்சை பலனின்றி இறந்தவர் யாரும் இல்லை. நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தவர்கள் 518 நபர்கள் ஆகும். தற்போது நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக 203 நபர்கள் மருத்துவமனையில் அனுமதி. நாமக்கல் மாவட்டத்தில் இன்று 10 க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பஞ்சாயத்துகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் காய்ச்சல் முகாமில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வருகின்றன.
தமிழகத்தில் இன்று 1,728 நபர்கள் புதிதாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இன்று சிகிச்சை முடிந்து வீடு திரும்புவோர் 662 நபர்கள் ஆகும். கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்கள் இன்று 6 நபர்கள். தற்போது வரை மருத்துவமனைகளில் சிகிச்சையில் 10,364 நபர்கள் உள்ளனர்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )