மேலும் அறிய
Advertisement
காஞ்சிபுரம், செங்கல்பட்டு : குறைகிறதா கொரோனா தொற்று எண்ணிக்கை? தடுப்பூசி நிலவரம் என்ன?
காஞ்சிபுரத்தில் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 305, செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 586-ஆக பதிவாகியுள்ளது
கொரோனா வைரஸ் தொற்றின், இரண்டாம் அலை கடந்த இரண்டு மாதங்களாகவே தமிழ்நாடு முழுவதும் வேகமாக பரவி வந்தது. இதன் எதிரொலியாக, தமிழகம் முழுவதும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்தது. தமிழக அரசு கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தனர்
ஊரடங்கு மற்றும் அதிக பரிசோதனை எதிரொலியாக தற்போது தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறைந்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை, செங்கல்பட்டு மாவட்டம் தமிழக அளவில் இரண்டாம் இடத்தில் இருந்து வந்தது. இந்நிலையில் ஊரடங்கு எதிரொலியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கணிசமாக குறைய துவங்கியுள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பு செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளொன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2500-ஆக இருந்தது. ஊரடங்கும் எதிரொலியாக தற்போது கணிசமாக குறைந்தது நாளொன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று கொரோனா வைரஸ் தோற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 586, கொரோனா வைரஸ் தொற்றால் ஒரே நாளில் உயிரிழந்தவர் எண்ணிக்கை 13, குணமடைந்து ஒரே நாளில் வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 618. தற்போது செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று 4531 . செங்கல்பட்டு மாவட்டத்தை பொருத்தவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தை பொறுத்தவரை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவு குணமடைந்து வீடு திரும்புவார் தற்போது படுக்கைகள் காலியாக உள்ளன.
அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து 3- வது நாளாக 300 நபர்களுக்கு மேல் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 305, வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 , கொரோனா வைரஸ் தொற்றால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 366. அதேபோல் மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1866. காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை காஞ்சிபுரம் பெருநகராட்சி பகுதியில் மட்டும் அதிகளவு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு குறைந்தாலும் நகர்ப்புறங்களில் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு குறையாமல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. அரசாங்கம் சொல்லும் அனைத்து அறிவுரைகளையும் முறைப்படி சமூக பொறுப்புடன் பொதுமக்கள் பின்பற்றி வந்தால், வைரஸ் தாக்கத்தில் இருந்து விடுபடலாம் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
சமீபத்திய உடல் நலம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் உடல் நலம் செய்திகளைத் (Tamil Health News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion