Covid - 19: சீனாவிலிருந்து வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்.. மத்திய அரசு அதிரடி உத்தரவு
சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என மத்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என மத்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அனைத்து விமான நிலையங்களிலும் இதனை கடைபிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சீனா, ஜப்பான், ஹாங் காங், உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வரும் பயணிகளுக்கு பரிசோதனை கட்டாயம். தொற்று உறுதி செய்யப்படும் நபர்களின் மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் அவர்களை தனிமைப்படுத்தும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக சர்வதேச அளவில் வரும் பயணிகளின் ராண்டம் கொரோனா சோதனை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது, விமானப் போக்குவரத்து அமைச்சகம், விமானக் குழு உறுப்பினர்கள் அடையாளம் காணப்பட்ட பயணிகளை விமான நிலையத்தில் உள்ள சோதனை மையத்திற்கு கொண்டு வர வேண்டும் என கூறியுள்ளது.
சீனா மற்றும் உலகின் பிற பகுதிகளில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றின் காரணமாக, சர்வதேச விமானங்களில் வரும் பயணிகளில் 2 சதவீத பயணிகளை இன்று காலை முதல் ராண்டம் கொரோனா வைரஸ் சோதனைக்கு உட்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. விமான நிலைய அதிகாரிகள் அந்தந்த விமான நிலையங்களுக்கு சர்வதேச வருகை தரும் பயணிகளின் ராண்டம் சோதனைக்கு வசதியாக தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்வர் என கூறப்பட்டுள்ளது. விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான DGCA க்கு இது தொடர்பாக தகவல் அனுப்பப்பட்டது மற்றும் நகல்கள் அனைத்து வணிக விமான நிறுவனங்கள், விமான நிலைய ஆபரேட்டர்கள் மற்றும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் (UTs) ஆகியவற்றிற்கும் அனுப்பப்பட்டுள்ளது.
ராண்டம் சோதனைக்குப் பிறகு, பயணிகளின் தொடர்பு விவரங்களை விமான நிலைய சுகாதார அதிகாரிகள் (APHOக்கள்), விமான நிலைய அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும். APHO களுக்கு முறையாக பில்களை சமர்ப்பித்தால், பரிசோதனைக்கான செலவு சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் திருப்பியளிக்கப்படும். சோதனை செய்யப்படும் பயணிகளின் முடிவில் தொற்று உறுதி செய்யப்பட்டால், அவர்களின் மாதிரிகள் நியமிக்கப்பட்ட INSACOG ஆய்வகத்தில் மரபணு சோதனைக்கு அனுப்பப்பட வேண்டும்" என்று தகவல் தொடர்பு தெரிவித்துள்ளது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )