TN Corona Update: தென் மண்டல கொரோனா நிலவரம்: மதுரை, நெல்லை, தூத்துக்குடி, சிவகங்கையில் ஆறுதல்...!
மதுரை, நெல்லை, தூத்துக்குடி சிவகங்கை உள்ளிட்ட பத்து மாவட்டங்களில் கொரோனா சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது.
தமிழ்நாடு முழுதும் கொரோனா குறைந்துவரும் நிலையில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரிக்கலாம் என எச்சரிக்கப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் கடந்த மார்ச் 15-ஆம் தேதி முதல் நேற்று வரை 7,36,401 கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதே போல் 503500 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி 4730 தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
மதுரை மாவட்டத்தில், இன்று மட்டும் 112 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 71793-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 128 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 70085 -ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 2 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1077 இருக்கிறது. இந்நிலையில் 631 நபர்கள் கொரோனா பாதிப்பால் மதுரையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் மதுரையை சுற்றியுள்ள விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய இடங்களில் விசாரித்தோம்.
விருதுநகர் மாவட்டத்தில் இன்று மட்டும் 82 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 44133-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 88 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 42833 -ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு இல்லை என்பது ஆறுதல். இதனால் விருதுநகர் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 520 இருக்கிறது. இந்நிலையில் 780 நபர்கள் கொரோனா பாதிப்பால் விருதுநகரில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவகங்கை மாவட்டத்தில் இன்று மட்டும் 84 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17262-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 95 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 16369-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 2 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் சிவகங்கை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 187-ஆக இருக்கிறது. இந்நிலையில் 706 நபர்கள் கொரோனா பாதிப்பால் சிவகங்கையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று மட்டும் 37 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19479 -ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் 83 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 18721-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்பது ஆறுதல். இதனால் இராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 329 இருக்கிறது. இந்நிலையில் 429 கொரோனா பாதிப்பால் இராமநாதபுரத்தில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று மட்டும் 77 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26529-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 105 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 25638-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 5 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 308 இருக்கிறது. இந்நிலையில் 583 கொரோனா பாதிப்பால் புதுக்கோட்டையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று மட்டும் 55 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31331-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 110 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 30395-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 3 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 574 இருக்கிறது. இந்நிலையில் 362 கொரோனா பாதிப்பால் திண்டுக்கல் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேனி மாவட்டத்தில் இன்று மட்டும் 69 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 41995 -ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 158 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 40715-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 3 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் தேனி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 479 இருக்கிறது. இந்நிலையில் 801 கொரோனா பாதிப்பால் தேனி சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மட்டும் 73 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 53923-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 284 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 52788-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 3 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 371 இருக்கிறது. இந்நிலையில் 764 கொரோனா பாதிப்பால் தூத்துக்குடி மாவட்டத்தில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று மட்டும் 38 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 47172 -ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 42 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 46236-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு இல்லை என்பது ஆறுதல். இதனால் திருநெல்வேலி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 406 இருக்கிறது. இந்நிலையில் 530 கொரோனா பாதிப்பால் திருநெல்வேலி சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தென்காசி மாவட்டத்தில் இன்று மட்டும் 31 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26400 -ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 126 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 25541-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 4 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் தென்காசி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 458 இருக்கிறது. இந்நிலையில் 401 கொரோனா பாதிப்பால் தென்காசி மாவட்டத்தில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivagangai Sivaraman: 'கலப்படம் இல்லாத பாரம்பரிய நெல்’ நம்மாழ்வார் வழியில் சிவகங்கை விவசாயி !
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )