திண்டுக்கல் : கொரோனா மரணங்கள் அதிகரிப்பு : அச்சத்தில் மக்கள்.. அறிவுறுத்தும் சுகாதாரத்துறையினர்..!
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்தாலும் உயிரிழப்புகள் அதிகரிப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
திண்டுக்கல்லில் கொரோனா பாதிப்பு குறைந்தாலும் உயிரிழப்புகள் அதிகரிப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் இதுவரை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். நேற்று முன்தினம் வரை திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 1800 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மே மாதத்தில் உச்சம் தொட்டாலும் ஜூன் தொடக்கம் முதல் குறைய தொடங்கியுள்ளது. ஆனால், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஏறுமுகத்தில் மட்டுமே உள்ளது.
கொரோனா பரவல் தொடக்கமான கடந்த வருடம் மார்ச் முதல் இந்தாண்டு மார்ச் வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200 பேரராக குறைந்திருந்த நிலையில், நேற்று முன்தினம் வரை மொத்தமாக 525 பேர் உயிரிழந்தாக அரசு தரப்பு தகவல் தெரிவிக்கின்றது. இதில் மே மாதத்தில் மட்டும் 186 பேரும், கடந்த 15 நாட்களில் மட்டும் 148 பேரும் உயிரிழந்துள்ளனர். கடந்த ஒரு வருட உயிரிழப்பு எண்ணிக்கையானது மே மாதம் 15ம் தேதி முதல் தற்போது வரை ஒரு மாதத்தில் நிகழ்ந்துள்ளது. இதற்கு காரணம் பொதுமக்களின் அலட்சியப்போக்கு, அச்சம் மற்றும் விழிப்புணர்வின்மையும் தான் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பெரும்பாலும் அறிகுறிகள் இருப்பவர்கள் மருந்துக்கடைகளில் மாத்திரை வாங்கி உட்கொள்கின்றனர். சிலர் அச்சத்தால் செல்வதில்லை, அதையும் மீறி செல்லும் பலர் ஆர்.டி.பி.சி.ஆர்., டெஸ்ட் எடுக்கின்றனர். அதில் கொரோனா நெகட்டிவ் என்று வந்தாலும் காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் இருப்பதை கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டுவிடுகின்றனர்.
இதனால், தொற்றுமுற்றி மூச்சுத்திணறல் ஏற்படும் சூழலில் மருத்துவமனையை நாடுகின்றனர். இதனால், உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் அலட்சியம் செய்யாமல் விதிமுறையை பின்பற்றினால் மட்டுமே கொரோனாவிலிருந்து தப்ப முடியும் என சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர். திண்டுக்கல் சுகாதார மாவட்டத்தில் இன்று 3927 பேரும், இதுவரை மொத்தம் 157185 பேரும் தடுப்பூசி போட்டுள்ளனர். பழனி சுகாதார மாவட்டத்தில் இன்று 1013 பேரும், இதுவரையில் மொத்தம் 119967 பேரும் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் மொத்தமாக இன்று மட்டும் 4940 பேரும் இதுவரை மொத்தம் 277152 பேரும் தடுப்பூசிகள் போட்டுள்ளனர். இன்று கொரோனா வைரஸ் தொற்றால் 92 நபர்கள் பாதிக்கபப்ட்டுள்ளனர். நோய் தொற்றிலிருந்து 243 பேர் குணமடைந்துள்ளனர். 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )