(Source: ECI/ABP News/ABP Majha)
Coronavirus LIVE Updates: தமிழ்நாட்டில் இன்று 1,573 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
உலகம், இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
LIVE
Background
தமிழகத்தில் நேற்று 1630 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 931 ஆகும். பெண்கள் 699 நபர்கள் ஆவர். இதனால், மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 855 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தின் தலைநகரான சென்னையில் மட்டும் இன்று 177 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 19 ஆயிரத்து 171 ஆகும். சென்னையில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உள்பட சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 129 ஆகும். இன்றைய நிலவரப்படி, மாநிலம் முழுவதும் கொரோனாவால் 15 லட்சத்து 18 ஆயிரத்து 906 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்கள் மட்டும் 10 லட்சத்து 81 ஆயிரத்து 941 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று காரணமாக 23 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 3 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள். 20 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள். இதனால், மாநிலத்தில் மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 709 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 1,573 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்தது. ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று ஆயிரத்து 573 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 1,572, வெளிமாநிலத்தில் இருந்து வந்த ஒருவர் என மொத்தம் 1,573 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26 லட்சத்து 05 ஆயிரத்து 647 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 43 ஆயிரத்து 065 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 170 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கெனவே 165 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிப்பு 170 ஆக உயர்ந்துள்ளது. கோவை 181, ஈரோடு 130, தஞ்சை 84, செங்கல்பட்டு 90, சேலம் 73, கடலூர் 54, திருப்பூர் 72, திருச்சி 45, திருவள்ளூர் 71, நாமக்கல் 52, வேலூர் 34 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் ஒரேநாளில் 31,445 பேருக்கு கொரோனா
கேரளாவில் கொரோனா பாதிப்பு 24,296இல் இருந்து 31,445 ஆக அதிகரித்துள்ளது. ஓணம் பண்டிகைக்கு பின் அங்கு ஒரேநாளில் பாதிப்பு வேகமாக உயர்ந்துள்ளது.
வாட்சப்பில் கொரோனா தடுப்பூசிக்கு புக் செய்வது எப்படி? - சுகாதாரத்துறை அமைச்சர் ட்வீட்
வாட்சப்பில் கொரோனா தடுப்பூசிக்கு புக் செய்வது எப்படி என்பது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ட்வீட் செய்துள்ளார்.
Paving a new era of citizen convenience.
— Mansukh Mandaviya (@mansukhmandviya) August 24, 2021
Now, book #COVID19 vaccine slots easily on your phone within minutes.
🔡 Send ‘Book Slot’ to MyGovIndia Corona Helpdesk on WhatsApp
🔢 Verify OTP
📱Follow the steps
Book today: https://t.co/HHgtl990bb
கேரளாவில் புதிதாக 24,296 பேருக்கு கொரோனா; 173 பேர் உயிரிழப்பு
கேரளாவில் இன்று புதிதாக 24,296 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரேநாளில் 173 பேர் உயிரிழந்த நிலையில் 19,349 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 1,600 கீழ் குறைந்தது
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்தது. ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று ஆயிரத்து 585 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 1,584, வெளிமாநிலத்தில் இருந்து வந்த ஒருவர் என மொத்தம் 1,585 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26 லட்சத்து 04 ஆயிரத்து 074 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 42 ஆயிரத்து 902 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 165 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கெனவே 172 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 165 ஆக குறைந்துள்ளது.
கொரோனாவால் மேலும் 27 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34,761 ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 20 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 7 பேரும் உயிரிழந்தனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இணை நோய்கள் இல்லாத 3 பேர் உயிரிழந்தனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 50 வயதுக்கு உட்பட்ட 2 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் இன்று 3 பேர் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் மொத்தம் 8386 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதிகபட்சமாக திருப்பூரில் 5 பேரும், கோவையில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 18,603 ஆக உள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,842 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 25,50,710 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.