Coronavirus LIVE Updates: இந்தியாவில் புதிதாக 36571 பேருக்குக் கொரோனா
உலகம், இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
LIVE

Background
இந்தியாவில் புதிதாக 36571 பேருக்குக் கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 36571 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதையடுத்து கொரோனா சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 363605 என உயர்ந்துள்ளது. கடந்த 150 நாட்களில் பதிவாகியுள்ள குறைவான கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 97.54 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
சென்னையில் 2,074 பேர் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்
சென்னையில் தற்போது கோவிட்-19 க்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2,074 ஆக உள்ளது.
ஊரடங்கு முடியும் நிலையில் முதல்வர் நாளை காலை ஆலோசனை
தமிழ்நாட்டில் வரும் 30ஆம் தேதி காலையுடன் ஊரடங்கு முடியும் நிலையில் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பதா அல்லது நீட்டிப்பதா என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை ஆலோசனை மேற்கொள்கிறார். 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு குறித்தும், தியேட்டர்களை திறக்க ஏற்கெனவே கோரிக்கை விடுத்த நிலையில் அது குறித்தும் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது.
புதுச்சேரியில் மேலும் 134 பேருக்கு கொரோனா
புதுச்சேரியில் மேலும் 134 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு 1,22,676 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 1,19,899 பேர் குணமடைந்த நிலையில், தற்போது 971 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாநிலங்களுக்கு கூடுதலாக 81.10 லட்சம் தடுப்பூசி
மத்திய அரசின் தொகுப்பில் இருந்து மாநிலங்களுக்கு 81.10 லட்சம் தடுப்பூசிகள் கூடுதலாக வழங்கப்படும் என்றும், மாநிலங்கள் வசம் 30 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் இருப்பில் உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

