Coronavirus LIVE Updates: தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1804 பேருக்கு கொரோனா
உலகம், இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
LIVE
Background
தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 1851 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25,90,632ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 217 பேரும், சென்னையில் 205 பேரும், ஈரோட்டில் 151 பேரும், சேலத்தில் 123 பேரும், செங்கல்பட்டில் 112 பேரும் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 1,911 குணமடைந்துள்ளனர். இதன் மூலம், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25,35,715 ஆக அதிகரித்துள்ளது. அதாவது, கோவிட்19 தொற்று கொண்டவர்களில் இதுவரை 98% என்றளவில் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்று காரணமாக 28 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தின் மொத்த கொரோனா இறப்பு எண்ணிக்கை 34,547 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 8363 பேர் கொரோனா நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதுநாள் வரையில், மிகக் குறைந்த இறப்பு எண்ணிக்கையை அரியலூர் மாவட்டம் பதிவு செய்துள்ளது. கடந்த 10 நாட்களாக, மாநிலத்தின் சாராசரி இறப்பு எண்ணிக்கை 30 ஆக உள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1804 பேருக்கு கொரோனா
தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1804 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
புதுச்சேரியில் மேலும் 60 பேருக்கு கொரோனா
புதுச்சேரியில் மேலும் 60 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு 1,22,391 ஆக அதிகரித்துள்ளது. 782 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில் இதுவரை 1,19,730 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்தியாவில் இதுவரை 55.47 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது
இந்தியாவில் இதுவரை 55.47 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது
இந்தியாவில் மேலும் 25,166 பேருக்கு கொரோனா
இந்தியாவில் மேலும் 25,166 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 437 பேர் உயிரிழந்த நிலையில், 36,830 பேர் குணமடைந்துள்ளனர்.
COVID-19 | India reports 25,166 new cases in the last 24 hours, lowest in 154 days. Active cases decline to 3,69,846, lowest in 146 days; recovery at 97.51% pic.twitter.com/IPE5ABHSLd
— ANI (@ANI) August 17, 2021
உலகளவில் 20.86 கோடி பேருக்கு கொரோனா
உலகம் முழுவதும் 20.86 கோடி பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 43.82 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 18.70 கோடி பேர் குணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் புதிதாக 97,174 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், 275 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.