Coronavirus LIVE Updates: ஐக்கிய அமீரக நாட்டில் இருந்து வந்தவருக்கு கொரோனா பாதிப்பு
உலகம், இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
LIVE

Background
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாததால் பதியப்பட்ட வழக்குகள்
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாததால் பதியப்பட்ட வழக்குகள்
மாநிலத்தில் 32 மாவட்டங்களில் கொரோனா தினசரி பாதிப்பு குறைவாகவே உள்ளது - டாக்டர் ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் 32 மாவட்டங்களில் கோவிட்-19 தினசரி பாதிப்பு குறைவாகவே உள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
India Covid-19 Daily Positivity Rate: தினசரி கொரோனா தொற்று உறுதி விகிதம் 2.79 சதவீதமாக உள்ளது
கடந்த 24 மணி நேரத்தில் 11,81,212 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 49,48,05,652 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு 2.01 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதி விகிதம் 2.79 சதவீதமாகவும் இன்று பதிவாகியுள்ளது. தொடர்ந்து 21 நாட்களாக அன்றாட தொற்று உறுதி விழுக்காடு 3 சதவீதத்திற்குக் குறைவாகவும், 70 நாட்களாக 5 சதவீதத்திற்குக் குறைவாகவும் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து 50 நாட்களாக புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 50,000க்கும் குறைவாக உள்ளது
தொடர்ந்து 50 நாட்களாக புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 50,000க்கும் குறைவாக ஏற்பட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 32,937 பேர் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். மேலும், கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,81,947 ஆக உள்ளது.
தமிழ்நாட்டில் 6 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போட வேண்டும்
தமிழ்நாட்டில் இன்னும் 6 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போட வேண்டியுள்ளதாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

