Coronavirus LIVE Updates: கொரோனா தொற்றின் தீவிரம் குறைந்தாலும், பரவல் ஓயவில்லை - குடியரசுத் தலைவர்
உலகம், இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
LIVE
Background
தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 1,933 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25,84,969 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 236 பேரும், சென்னையில் 211 பேரும், ஈரோட்டில் 117 பேரும், செங்கல்பட்டில் 108 பேரும் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
இரு தினங்களுக்கு முன்பாக, சென்னையின் தினசரி பாதிப்பு எண்ணிக்கை கோயம்புத்தூரை விட அதிகரித்திருந்த நிலையில், நேற்று கோயம்பத்தூர் மாவட்டம் மீண்டும் முதலிடத்தில் வந்துள்ளது.
குணமடைவோர் எண்ணிக்கை: 1,887 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25,30,096 ஆக அதிகரித்துள்ளது. அதாவது, கோவிட்19 தொற்று கொண்டவர்களில் இதுவரை 98% என்றளவில் குணமடைந்துள்ளனர்.
தொற்று உறுதி விகிதம்: தமிழ்நாட்டில் தினசரி தினசரி தொற்று உறுதி விகிதம் (Daily positivity Rate) 3ம் குறைவாக 1.2 ஆக உள்ளது. அதாவது, பரிசோதிக்கப்படும் 100 கொரோனா மாதிரிகளில் குறைந்தது 2 பேருக்கும் குறைவானோருக்கு மட்டுமே கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்படுகிறது.
தமிழகத்திற்கு நேற்று வந்துள்ள தடுப்பூசிகள் மாவட்ட வாரியாக ஒதுக்கீடு விவரம்:
மதுரை மாவட்டத்தில், இன்று மட்டும் 18 நபர்களுக்கு தொற்று பாதிப்பு
மதுரை மாவட்டத்தில், இன்று மட்டும் 18 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 73786 -ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 26 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 72416 -ஆக அதிகரித்துள்ளது. இன்று வரையில் மதுரையில் கொரோனா தொற்றுக்கு உயிரிழப்புகள் இல்லை என்பது ஆறுதல். இதனால் மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1148 இருக்கிறது. இந்நிலையில் 222 நபர்கள் கொரோனா பாதிப்பால் மதுரையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
சேலம் மாவட் டம் கொரோனா அண்மை செய்திகள்
சேலம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 130 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் இருவர் உயிரிழப்பு . மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு 1605 ஆக உள்ளது. மேலும் 94 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை சேலம் மாவட்டத்தில் 92,161 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94,688 ஆக உயர்வு. மாவட்டத்தில் 922 பேர் கொரோனாவிற்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 10 சதவீதத்திற்கும் குறைவான படுக்கைகளில் மட்டுமே நோயாளிகள் உள்ளனர். சேலம் மாவட்டத்தில் நேற்று 5259 பரிசோதிக்கப்பட்டதில் 120 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று மாதத்திற்கு பிறகு ஆயிரத்திற்கும் குறைவான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் குறையத் தொடங்கி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை கொரோனா வைரஸ் தொற்று 500 க்கும் மேற்பட்ட எண்ணிக்கைகளில் நாள்தோறும் பதிவாகிவந்தது. படிப்படியாக குறையத் தொடங்கி இன்று 22 ஆக பதிவாகியுள்ளது. இது நேற்றைய பதிவை விட மூன்று பேருக்கு அதிகமாக தொற்று கண்டறியபட்டுள்ளது. இதுவரை மாவட்டத்தில் 21 ஆயிரத்து 399 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, 20 ஆயிரத்து 874 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் இன்று ஒரேநாளில் மட்டும் 22 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 25 பேர் குணமாகி வீடு சென்றுள்ளனர். இந்த சூழலில் இன்று கொரோனா வைரஸ் தொற்றால் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து கொரோனா வைரஸ் தொற்றால் பலியாகியுள்ளனர் எண்ணிக்கை மாவட்டத்தில் 274 ஆக அதிகரித்துள்ளது.
மாநிலத்தின் கொரோனா இறப்பு எண்ணிக்கை 34,496 ஆக அதிகரிப்பு
இறப்பு எண்ணிக்கை: கடந்த 24 மணிநேரத்தில், கொரோனா தொற்று காரணமாக 34 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தின் மொத்த கொரோனா இறப்பு எண்ணிக்கை 34,496 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 8356 பேர் கொரோனா நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதுநாள் வரையில், மிகக் குறைந்த இறப்பு எண்ணிக்கையை அரியலூர் மாவட்டம் பதிவு செய்துள்ளது. கடந்த 10 நாட்களாக, மாநிலத்தின் சாராசரி இறப்பு எண்ணிக்கை 30 ஆக உள்ளது.